18 வது அட்சக்கோடு

(Tamil Nool / Book Vimarsanam)

18 வது அட்சக்கோடு விமர்சனம். Tamil Books Review
இந்திய விடுதலைக்குப் பின் ஐதராபாத் நிஜாம் சமஸ்தானம் இந்தியாவுடன் இணையும் வரை உள்ள சூழலில் நிகழும் அரசியல், சமூக மாற்றங்களை சிறு கல்லூரி செல்லும் சிறுவன், சந்திரசேகரன்- அவன் குடும்பம், நண்பர்களின் சூழல், அவன் சந்திக்கும் மாற்றங்கள், அவன் மன குழப்பங்கள் வாயிலாக சித்தரிக்கின்றது இந்நாவல்.

நெறிகள் கட்டுப்பாடுகள் எல்லாம் சமூகம் சுமூகமாய் செல்லும் வரையிலேயே! அரசியல் மாற்றங்களினால் ஏற்படும் சமூக அதிர்வலைகள், பாதிப்படையும் மனிதப்போக்குகள், முதிர்ச்சி அற்ற மனிதர்களினால் விழையும் ஆபத்துக்கள், அதிலும் தன் கை ஓங்கும் போது தொத்திக்கொள்ளும் ராட்சச குணம் , தாழ்ந்ததும் முரணாய் பற்றிக்கொள்ளும் அடக்கம்.. அதற்குள் அவர்கள் நிகழ்த்தும் சீரழிவுகள்! இவை அனைத்தையும் சிறு கல்லூரி செல்லும் மாணவனின் கண்கள் வாயிலாக நம்மை பார்க்கச் செய்கிறார் ஆசிரியர்.

அவன் ஈடுபாடின்றியே சுற்றி உள்ளோர் அவனை ஏதேனும் ஒரு குழுவினோடே அடையாளப்படுத்திக்கொள்கின்றனர். இந்துக்கள் முஸ்லிம்கள் மோதுதலின் போது அவனின் எண்ண ஓட்டம் தான் ஒரு கிறிஸ்தவனாக இருந்தால் பயமின்றி எவருடனும் கிரிக்கெட் விளையாடலாமே என்றிருக்கிறது.
சூழ்நிலைக் கைதியாம் அச்சிறுவன் சந்திப்பவை நம்மையும் நம் நம்பிக்கைகளையும் நம் போக்குகளையும் உற்று நோக்க வைக்கிறது.

சேர்த்தவர் : mahakrish
நாள் : 11-May-20, 9:32 pm

18 வது அட்சக்கோடு தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே