இரவு

(Tamil Nool / Book Vimarsanam)

இரவு

இரவு விமர்சனம். Tamil Books Review
இரவு
:::::::::::

‘கங்குல் வெள்ளம்
கடலென அலைக்கும்
நெஞ்சப்புணை என்
கை நழுவிச்செல்லும்'

ஜெயமோகன்.
இவர் எழுத்துக்கள் பற்றிய எனது அறிமுகம், இவர் எழுத்துக்களை வாசித்து “யார் இவர்?” என்று கேள்வி எழுந்த போது அறியப்பட்டதல்ல; இவர் எழுத்துக்களை ஆழச் சுவாசித்தவர்களின் பரிந்துரைகள் மூலம் எழுந்த வியப்பும், எதிர்பார்ப்பும் ஒருமிக்க நிகழ்ந்தது. இவர் எழுத்துக்கள், எதிர்பாராத நேரத்தில் எதிர் கொள்ளும் ஒர் முழுமையான வலை வீச்சைப் போன்றவை. அது வீச்சு என்று நான் உணரும் முன்னரே என்னைச் சுவீகரித்துக் கொண்டது!

இரவு.
பகலின் அம்மணத்தை எதிர்கொள்ளத் தயங்கும் கண்களுக்கு மென்துகில் போர்த்தி இராக் காணும் மனிதர்களை மையமாக கொண்ட ஒரு ஜெயமோகன் கதை.

இக்கதையில் இரவினை முன்னிறுத்திக் காட்ட அவர் கையாண்ட எதார்த்தமான பார்வை என்னை வெகுவாக இதனுள் மூழ்கவைத்தது. இக்கதையில் வரும் பாத்திரங்கள் அனைவரின் பார்வையில் இரவை நகர்த்திச் சென்றவிதம் சிலாகிக்கத் தகுந்தது.

‘சொல்லப்படாதவை இருண்டுவிடுகின்றன
ஒன்றுடன் ஒன்று தழுவி
அடித்தளத்தில் படிகின்றன
இருண்டு
இரவாகின்றன’

'நிதர்சனத்தை உணர்ந்த மனது என்றும் போலித்தனம் நாடாது' என்பதற்கு ஜெயமோகன் அவர்களின் இப்படைப்பு ஒர் எடுத்துக்காட்டு.'இரவை' ஒரு முறையாவது வாசியுங்கள் நண்பர்களே! ( புத்தகத்தை மட்டும் சொல்லவில்லை!)

ஜனார்த்தனி (நர்த்தனி)

சேர்த்தவர் : Narthani 9
நாள் : 24-Mar-21, 6:12 am

இரவு தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே