சமபாலினம் கோட்பாட்டு உருவாக்கம்

(Tamil Nool / Book Vimarsanam)

சமபாலினம் கோட்பாட்டு உருவாக்கம்

சமபாலினம் கோட்பாட்டு உருவாக்கம் விமர்சனம். Tamil Books Review
காமத்திற்கு நிறமுண்டு. ஆணுக்கொரு பெண்ணுக்கொரு நிறமென்றும் காமம் யாவருக்குள்ளும் அலைவுறுகிறது. நிறமற்ற காமத்தோடு தன்னை ரசவாதி ஆக்கி காமத்தை கடவுளுக்கே காணிக்கை ஆக்கி விட்டு பிறவிப் பெருங்கடலை நீந்தி கடக்காமல் பருகிக் கடந்து கொண்டிருப்போரே சமபாலினர். திருநங்கையர் திருநம்பியர் குறித்த புதிய தரிசனத்தின் திறப்பாக உள்ளது முனைவர் வெ. முனீஸ் அவர்களின் நூல். இந்நூல் திருநங்கையரை திருநம்பி யரை சம பாலினமாக அறைகூவல் விடுத்திருக்கும் முதல் நூல் இதுவே. நூலகம் இவரது சமரசமற்ற ஆளுமையின் தொனி மிளிர்கிறது.
1.திருநங்கை-திருநம்பிகள் மூன்றாம் பாலும் இல்லை மாற்றுப்பாலும் இல்லை.அவர்கள் சமபாலினம்.

2.தலித்தியம் பெண்ணியம் போன்று திருநங்கை- திருநம்பிகளுக்காக சமபாலியம் என்கிற கோட்பாட்டை முன்மொழிகிறது.

3.அம்பேத்கர்-பெரியார்-பாரதியார் ஆகியோர் திருநங்கை/திருநம்பிகள் குறித்து கூறியுள்ளவற்றைப் பேசுகிறது.

4.இந்து சமயம் இசுலாம் சமயம் கிறித்தவ சமயம் திருநங்கை திருநம்பிகள் குறித்து கூறியுள்ளவற்றையும் பேசுகிறது.

சேர்த்தவர் : கவிஞர் பெஅசோகன்
நாள் : 22-Dec-21, 4:54 pm

சமபாலினம் கோட்பாட்டு உருவாக்கம் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே