குறுந்தொகைப் பாடல்களில் கபிலரின் வருணனை திறன்

(Tamil Nool / Book Vimarsanam)

குறுந்தொகைப் பாடல்களில் கபிலரின் வருணனை திறன்

குறுந்தொகைப் பாடல்களில் கபிலரின் வருணனை திறன் விமர்சனம். Tamil Books Review
கபிலர் ஒரு காட்சியையோ, நிகழ்ச்சியையோ,பொருளையோ வருணிக்கும்போது,அதனூடே ஒரு பொருள் /கருத்து, காதலர்களை நெறிப்படுத்தும் பான்மையதாய் அமைந்துள்ள சிறப்பான திறத்தினை பேராசிரியர் முனைவர் தா பேகம் அவர்கள் ஆய்ந்தறிந்து இந்த நூலின் மூலம் எடுத்துரைக்கிறார் /தெளிந்துரைக்கிறார்.கபிலர் வருணிக்கும் திறத்தையும் அவ்வருணனையின்மூலம் அவர் உள்ளுறையாக உணர்த்தும் கருத்தையும் ஆய்ந்து வெளிக்கொணரும் வகையில் குறுந்தொகைப் பாடல்களில் கபிலரின் வர்ணனை திறன் எனும் இவ்வாய்வு நூல் அமைகிறது குறிப்பாக யானையை பற்றியும், பாடல் 13 காகத்தை பற்றியும் பாடல் 246 ஆசிரியர் கூறும் செய்திகள் சிறப்பாக சுட்டத்தக்கன. மேலும் குறுந்தொகை பாடல் 240 ஆவது பாடலில் இடம்பெறும் "பானாள்" எனும் சொல்லை எடுத்துக் கொண்டு ஆய்ந்து அதன் மூலம் அந்த பாடலுக்கு நூலாசிரியர் முனைவர் தா. பேகம் அவர்கள் கூறும் புதிய விளக்கத்தையும், கருத்தையும் அவர்தம் ஆய்வுத் திறனுக்கும், நுண்மாண் நுழைபுலத் திறனுக்கும் சான்றாகக் குறிப்பிடலாம்.கபிலரின் வருணனைப் பாங்கில் வெளிப்படும் கவித்துவம் கூர்ந்து நோக்கத்தையும் களவொழுக்கக் காதலர்களை ஒழுங்கு படுத்தவேண்டும்/நெறிப்படுத்த வேண்டும் என்கிற அவரது சமூகப் பொறுப்புணர்வையும் வெளிக்கொணர்வதாக இந்நூல் விளக்குகிறது.நூலாசிரியரின் ஆய்வறிவு,நடுவுநிலைமை,நுண்மாண் நுழை புலத்தின்,உழைப்பு ஆகியவற்றிற்கும் தமிழ் கூறும் நல்லுலகத்தின்சார்பில் என்னுடைய வணக்கந்தையுயும் மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பேராசிரியர் நா. பழனிவேலு

சேர்த்தவர் : கவிஞர் பெஅசோகன்
நாள் : 23-Dec-21, 5:34 pm

குறுந்தொகைப் பாடல்களில் கபிலரின் வருணனை திறன் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே