சந்தனக் கூப்பு

(Tamil Nool / Book Vimarsanam)

சந்தனக் கூப்பு விமர்சனம். Tamil Books Review
சந்தனக் கூப்பு நாவலில் ஆளுமைகளின் விவரிப்புகள் அர்த்தமுள்ள தாக்குகின்றன. அதேவேளையில் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை யதார்த்தத்தோடு எடுத்துச் சொல்கிறது. மானுடத்தின் விளிம்பில் உள்ள மலையாளிகளின் நான்கு பரம்பரைகளின் வாழ்வியலை ஒன்றும் குறைவுபடாமல் வெளிக்காட்டுவதோடு நாட்டுப்புறவியலையும் மானுடவியலையும் நிலைநிறுத்த முயல்கிறது நாவல். மலையாளி என்பவன் யார்? அவனது வாழ்வியல் சடங்கு முறைகளும் நாட்டுப்புற மருத்துவ முறைகளும் இணை நோக்கில் வெளிப்படுத்தி இருப்பது கூடுதல் கவனம் கொள்ள வைக்கிறது. இயற்கையோடு பிணைந்திருக்கிற மலையாளிகளின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் ஒருங்கே காட்டும் காலக் கண்ணாடியாகத் திகழ்கிறது. மலையாளி களிடையே தற்போது தற்சார்பு நிலை ஏற்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்ட நாவல் தயங்கவில்லை. கதைக்குள் கதை என எடுத்துரைக்கும் பாங்கு கைதேர்ந்த நாவலாசிரியராகவே எடுத்துக்காட்டுகிறது. நாவலாசிரியர் தா.பேகம் அவர்களை மனதார வாழ்த்துவதோடு மட்டுமின்றி மொத்தத்தில் சந்தனக்கூப்பு நாவல் மணக்கிறது. அனைவரும் வாசிக்க வேண்டிய நாவல்... மலர்ந்த அன்புடன்.. த.தேவேந்திரன், முதுகலை தமிழாசிரியர்.

சேர்த்தவர் : கவிஞர் பெஅசோகன்
நாள் : 24-May-22, 6:42 am

சந்தனக் கூப்பு தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே