சேர்த்தவர் : umababuji s, 8-May-18, 9:09 pm
Close (X)

நீட் தேர்வை பற்றி மானவ்ரகளிடம் பயத்தை ஏன் உருவாக்க வேண்டும்

நீட் தேர்வை பற்றி மானவ்ரகளிடம் பயத்தை ஏன் உருவாக்க வேண்டும் மனு | Petition

நாம் பல மொழிகள் கற்றவர்கள் என்ற பெருமை கொண்டவர்கள் .ஆனால் இன்று ஒரு மொழியை கூட ஒழுங்காக கற்பதற்கு மறுக்கிறோம் .இதுதான் உண்மை .நான் ஒரு ஆசிரியை என்ற முறையில் நான் உங்களிடம் பார்த்த தவறுகளை கூறுகிறேன் .பல மொழி கற்றவன் என்றும் வெற்றி பெறுவான் .அப்படி இருக்க ஏன் நீங்கள் நீட் தேர்வை கண்டு பயப்படுகிறீர்கள் .நாம் நம் பார்வையை விரிவாக்குவோம் .கடந்த காலங்களை விட்டு விடுவோம் .மற்றவர்களுடன் நாமும் போட்டி போட தயாராகுவோம் .ஒரு முறை சறுக்கினால் என்ன ?தாங்கி கொள்ளத்தான் நாங்கள் இருக்கிறோமே .கிடைத்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள் .உங்களுடைய படிப்பை அரசியலாக்கி அதில் குளிர் காய நினைப்பவர்கள் பேச்சை கேட்க வேண்டாம் .அறிவு சொன்ன பேச்சை கேட்டு அதன் படி நடப்போம் .இனி எந்த நுழைவு தேர்வு என்றாலும் நமக்கு பயமில்லை .நம்மிடம் எதையும் சாதிக்கும் துணிவு கொண்டு மொழிகளில் வேற்றுமை பாராமல் அனைத்தையும் கற்போம் .சான்றோன் ஆவோம் .

நானும் இந்த மனுவை வழிமொழிகிறேன்

நீட் தேர்வை பற்றி மானவ்ரகளிடம் பயத்தை ஏன் உருவாக்க வேண்டும் மனு | Petition at Eluthu.com


பிரபலமான எண்ணங்கள்

மேலே