சேர்த்தவர் : அமிர்தா s, 13-Jul-14, 1:18 pm
Close (X)

கேள்வி குறியாகும் அரசு பள்ளிகள்

கேள்வி குறியாகும் அரசு பள்ளிகள் மனு | Petition

ஒரு பெரும் ஆதங்கத்தோடு இந்த மனுவை சேர்க்கிறேன், இது சரியென்றால் வழிமொழியுங்கள்.

எங்களது பகுதியில் நூற்றாண்டு அரசு மேல்நிலை பள்ளி உள்ளது, பல ஆயிரம் பெரிய மனிதர்களை உருவாக்கிய பள்ளி அது, இன்று பல வசதிகளுடன் இயங்கும் இதில் வகுப்பறைகள் எல்லாம் வெறுச்சோடி கிடக்கின்றது, அனைத்து மாணவர்களும் பெற்றோர்களும் தனியார் பள்ளியை நோக்கியே ஓடுகின்றனர், இதன் காரணம் தான் என்ன?

அரசு பள்ளியில் தரமான கல்வி அளிப்பதில்லையா? அல்லது தரமற்ற ஆசிரியர்களை தேர்வு செய்து பணியில் நியமிக்கப்பட்டுள்ளனரா?

ஒரு ஆசிரியர் தனியார் பள்ளியில் பணியில் இருக்கும் போது 100% தேர்ச்சியை கொடுக்கும் போது அவரே அரசு பள்ளிக்கு பணிக்கு வரும் போது ஏன் 100% தேர்ச்சி வருவதில்லை?

இதை அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து 100% தேர்ச்சி கொண்டுவர வலியுறுத்த வேண்டும், மீண்டும் அரசு பள்ளிகள் புத்துயிர் பெற வேண்டும்.

100% தேர்ச்சி கொடுக்காமல் மெத்தனமாய் திரியும் ஆசிரியர்களை பணியில் இருந்து நீக்க வேண்டும் அல்லது அவர்களது 10 மாத சம்பளத்தை திரும்ப செலுத்த வலியுறுத்த வேண்டும்.

நானும் இந்த மனுவை வழிமொழிகிறேன்
இந்த மனுவை 6 பேர் வழிமொழிந்துள்ளனர்.
(அனைத்து நபரும் தொலைபேசி எண் சரிபார்க்கப்பட்டவர்கள்)

கேள்வி குறியாகும் அரசு பள்ளிகள் மனு | Petition at Eluthu.com



மேலே