kalaimahel hidaya risvi - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : kalaimahel hidaya risvi |
இடம் | : kalmunai,srilanka |
பிறந்த தேதி | : 01-Apr-1964 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 01-Dec-2010 |
பார்த்தவர்கள் | : 267 |
புள்ளி | : 20 |
பெயர்:-ஹிதாயா ஏ.மஜீத் ரிஸ்வி.
புனைப் பெயர்:-கலைமகள் ஹிதாயா,நிஷா.
பிறந்த இடம்:-சாய்ந்தமருது.
தொடர்புகளுக்கு,
முகவரி:-677 ,அஹமட் வீதி,சாய்ந்தமருது-14 .
(677,ahamed road,sainthamaruthu-14.)
மின்னஞ்சல்:-inulhidaya @ ymail.com
http;//www.kalaimahelhidayarisvi.blogspot.com
படைப்பாற்றல்:-கவிதை(மரபு,புதிது),சிறுகதை,விமர்சனங்கள்,கட்டுரைகள்,
மெல்லிசைப்பாடல்கள்,வானொலி நாடகங்கள்.
எழுதியுள்ள நூல்கள்:-
* நாளையும் வரும் (புதுக்கவிதைத் தொகுதி).
* தேன் மலர்கள்-மரவுக் கவிதைத் தொகுதி
(இது இலங்கை முஸ்லிம் பெண் கவிஞரின் முதலாவது தொகுதி).
* இரட்டை தாயின் ஒற்றைக் குழந்தை -புதுக்கவிதைத் தொகுதி
(கவிஞர் மஸீதா புன்னியாமினுடன் இணைந்து 2000 ம் ஆண்டில் வெளியீட்டுள்ளார்.)
பெற்ற விருதுகள்:-
* 1988ல் இளைஞர் சேவைகள் மன்றமும்,இளைஞர் விவகார விளையாட்டுத்துறை
அமைச்சும் இணைந்து நடாத்திய கவிதைப் போட்டியில் அகில இலங்கை ரீதியாகவும்,
மாவட்ட ரீதியாகவும் முதலாம் இடத்தைப் பெற்றமைக்காக ஜனாதிபதி விருது.
* 1999 ஆம் ஆண்டு "ரத்ன தீப"சிறப்பு விருது பெற்ற முதலாவது பெண் கவிஞர்.
* 2002 இல் முஸ்லிம் கலாச்சார அமைச்சின் அனுசரணையோடு நடாத்தப்பட்ட உலக
* இஸ்லாமிய மா நாட்டில் வைத்து இளம் படைப்பாளிக்கான விருது.
* 2007 ம் ஆண்டு உயன்வத்தையில் நடைபெற்ற இலக்கிய விழாவில் "கலையரசு"விருது.
* 2009 இல் பல்கலை வேந்தர்,ஞானக்கவி,சட்டத்தரணி,பிரதியமைச்சர்,
அல்-ஹாஜ் கெளரவ எஸ்.நிஜாமுதீன் (பா.உ)அவர்களால்
நிந்தவூர் ஆர்.கே.மீடியா பணிப்பாளர் ராஜகவி ராஹில் (இலங்கை வானொலி அறிவிப்பாளர்)
அவர்களின் சார்பில் "கவித்தாரகை" பட்டம் பெற்று கெளரவிக்கப்பட்டார்.
சிறப்புக் குறிப்புகள்:-
* இலங்கையிலுள்ள தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர்.
* இலங்கையிலுள்ள தடாகம் கலை இலக்கிய மலரின் பிரதம ஆசிரியர்.
* மலேசியாவில் அமைந்துள்ள உலகத் தமிழ் கவிஞர் பேரவையின் அங்கத்துவர்.
* இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியின் மாதர் மஜ்லிஸ் பிரதி தயாரிப்பாளர்களில் ஒருவர்.
* இலங்கையிலுள்ள பேராதனைப் பல்கலைகழகத் தமிழ்த் துறைப் பேராசிரியர்
க.அருணாச்சலம் அவர்களது 'மலையக இலக்கியம்' ஆய்வில் இவரது கவிதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
* இலங்கை அரசின் பாடப் புத்தகமான தமிழ் மொழியும் இலக்கியமும் தரம்-09 நூலில்
'வாழும் வழி' எனும் கவிதை இடம் பெற்றுள்ளது.
* சென்னையில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஏழாம்
மாநாட்டில் இலங்கையிலிருந்து கலந்து சிறப்பித்த முஸ்லிம் பெண் கவிஞர் இவராவார்.
* இவரது பல கவிதைகள் 'பஸீர் அஹமட் அல் அன்சாரி அல் காதிரி'
அவர்களால் அரபு மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
* இலங்கையிலிருந்து வெளிவரும் அனைத்து பத்திரிகைகளிலும்,இந்தியாவிலிருந்து
வெளிவரும் சமரசம் பத்திரிகைகளிலும் இவரது கவிதைகள் மற்றும் படைப்புக்கள் வெளிவந்துள்ளன.
* இலங்கையிலுள்ள தடாகம் கலை இலக்கிய வட்டத்தினால்
வருட வருடம் கலை உள்ளங்களை கலைத்தீபம் விருது வழங்கி
கெளரவித்து வருகின்றார்.(இதுவரை சுமார் 50க்கு மேற்பட்ட கலை உள்ளங்கள் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்கள்.)