தமிழ் எழுத்துக்கள் (Tamil Letters)
தமிழில் 12 உயிரெழுத்துக்களும், 18 மெய்யெழுத்துக்களும், 216 உயிர்மெய் எழுத்துக்களும், ஓரு ஆய்த எழுத்துமாக மொத்தம் 247 எழுத்துக்கள் தமிழ் நெருங்கணக்கில் உள்ளன.
உயிரெழுத்துக்கள் (12)
தமிழ் உயிரெழுத்துக்கள் (Tamil Uyireluthukkal) மொத்தம் 12. உயிர் எழுத்து தனித்து இயங்கும் சொல் ஆகும் (ஈ, மா, வை) உயிரெழுத்து இல்லாத சொல் எந்த மொழியிலும் இல்லை.
உயிர்மெய்யெழுத்துக்கள் (216)
மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றுடனும் உயிரெழுத்து சேரும்போது உருவாகும் எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்கள் ஆகும்.
கிரந்த எழுத்துக்கள்
கிரந்த எழுத்துக்கள் ஆங்கில மற்றும் அறிவியல் சொற்களையும், வடமொழிச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.
எழுத்து.காம் இணையத்தள புத்தகம் வழியாக 247 தமிழ் எழுத்துக்கள் கற்றுக்கொள், பிறருக்கும் கற்பி. Learn tamil letters online.