To View in English
விதிமுறைகளும் நிபந்தனைகளும்:

வணக்கம்!

எழுத்து இணையதளத்தின் சேவைகளை உபயோகிக்கும் முன்னர் இந்த இணையதளத்தின் விதி முறைகளை கவனமாக படிக்கவும்.

கீழே உள்ள விதிமுறைகளை உங்களது வலைப்பதிவு பின்படுத்தாவிட்டால், உங்களது வலைப்பதிவு இத்தளத்திலிருந்து எந்த அறிவிப்பின்றி நீக்கப்படும்.

1. எழுத்து இணையதளத்தின் சேவைகளை முழுமையாக உபயோகிப்பதற்கு இந்த இணையத்தளத்தில் உறுப்பினர் கணக்கும் கடவுச் சொல் ஒன்றும் அவசியம். இவற்றினைப் பெறும்போது இன்னொருவரின் பெயரையோ மின்னஞ்சல் முகவரியையோ அவரின் முன் அனுமதியின்றி வழங்கக் கூடாது.
2. ஒரு உறுப்பினரின் கணக்கினை இன்னொருவருக்கு மாற்றவோ விற்கவோ கூடாது.
3. எவ்வாறான முன் அறிவிப்புமின்றி உறுப்பினர்களின் கணக்குகளை முடக்கவும், நீக்கவும் நிர்வாகத்திற்கு முழு அனுமதி உண்டு.
4. 13 வயதிற்கு மேற்பட்டவர்களே இந்த சேவையினை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப் படுவார்கள்.
5. எழுத்து இணையதளத்தினை சட்டதிற்கு புறம்பான வகையில் பயன்படுத்தக் கூடாது.
6. தனி நபர் ஒருவரை/குழுவைப் பற்றி இழிவான/தவறுதலான/அந்தரங்க கவிதைகளை எழுதுதல் கூடாது.
7. கவிதையின் உட்பொருள் / உள்ளடக்கம் நயமற்றதாகவோ அல்லது ஆபாசம் நிறைந்ததாகவோ இருக்கக் கூடாது. அவ்வாறான கவிதைகள் சமர்பிக்கப்படின், எழுத்து இணையத்தளத்தில் தங்களுடைய கணக்கு (account) முடக்கி விடப்படும்.
8. குழந்தைகளுக்கு எதிரான/தவறுதலான கவிதைகளை எழுதுதல் கூடாது.
9. இந்திய சட்டத்திற்கு இந்த தளம் உற்பட்டது. சட்டத்திற்கு எதிராக உள்ளவற்றை அனுமதிக்கப்படமாட்டாது.
10. விளம்பரங்களை மட்டும் நம்பி பதிவுகள் இருக்கக் கூடாது.
11. பணம் சம்பாதிக்கும் வழிகளை மட்டும் நம்பி பதிவுகள் இருக்க கூடாது.
12. எழுத்து உறுப்பினர்கள் தத்தம் நாடுகளில் உள்ள சட்ட திட்டங்களுக்கு எதிரான விடயங்களை பதிவு செய்வதினை தவிர்க்கவும்.
13. எழுத்து விதிமுறைகளை மீறும் பதிவுகளையும், பிற உறுப்பினர்களினால் விரும்பப்படாத பதிவுகளையும் நீக்குவதற்கு நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு.
14. தோழர்கள் எழுத்தில் தங்களது கவிதைகளை சமர்ப்பிக்கும் போது, தங்களது தொலைபேசி எண்ணையோ அல்லது இணையதள இணைப்பையோ கொடுக்க அனுமதி கிடையாது. அவ்வாறு கொடுத்தால் அந்த கவிதையை நிராகரிக்கும் உரிமை எழுத்துக்கு உண்டு.
15. அதேபோல் தங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கும் போதும் தங்களது தொலைபேசி எண்ணையோ அல்லது இணையதள இணைப்பையோ கொடுக்க அனுமதி கிடையாது.
16. மேற்கண்ட விபரங்களை உங்கள் தனிப்பட்ட பக்கத்தில் (profile) கொடுத்துக் கொள்ளலாம்.


மேலே