பாண்டியராஜன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பாண்டியராஜன் |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 423 |
புள்ளி | : 89 |
பனிக்காலம் குளிர்வித்த அதே காற்று கோடையில் சுடுவதைப்போல,
உடனிருந்து பேசிச் சிரித்த நினைவுகளே பிரிவின் போது கண்ணீராய்,
நம் காதலோ இனி கானல் நீராய்!
மஞ்சத்தண்ணி ஊத்துற நாள்ள, மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்து இளஞ்சிவப்பு கலர்ல மாமன் மேல ஊத்துன தண்ணி கலர்ல வானம் மாற பொழுது சாய்ஞ்சிருச்சு!
கொல்லைல வச்ச கொடிப்பிச்சி மலர்ந்து வாசம் தெருவெல்லாம் பரவிடுச்சு!
ஆனாலும் அத பறிச்சு வச்சு அழகு பாக்க மாமன் பக்கத்துல இல்லாததால பறிக்காம விட்ட பூ சோகத்துல தலை குனிஞ்சு தொங்கிருச்சு
மார்கழியில் பூத்த மலர்க்கு குளிர்ந்தது!
குளிர்ந்த மலரது குளிர் போக்க நினைத்த வண்டு,
குளிர் போக தேன் குடித்தது!
ஈரத்தின் ஈரத்தினால் தீ தீயாய் தகிக்கிறது.
அதை அணைக்கவும் ஈரத்தின் ஈரமே வேண்டும்.
கதை மற்றும் கவிதை எழுதுவது எப்படி ?
இமைகள் வருடும் நெருக்கத்தில் , மூச்சு விட முடியா இருக்கத்தில் ஒரு முறை அணைத்து விடு .
வாழ்ந்து விடுவேன் இப்பிறவியை.
இமைகள் வருடும் நெருக்கத்தில் , மூச்சு விட முடியா இருக்கத்தில் ஒரு முறை அணைத்து விடு .
வாழ்ந்து விடுவேன் இப்பிறவியை.
உனக்கு ஞாபகம் இருக்கிறதா ?
முதல் முதலாய் எப்போது நான் உன்னிடம் பேசினேன் என்று?
பசுமரதத்தாணி போல இன்னும் ஞாபகம் இருக்கிறது!
பள்ளி நண்பனை போல் சிறந்த நண்பன் யாரும் வர போவதில்லை என நினைத்த எனக்கு , உன்னை போல தோழி யாரும் வர முடியாது என உணர வைத்தவள் நீ !
என் தாய் தங்கை போல, நீயும் நான் கூறாமல் என்ன நினைத்தேன் என சொல்ல தெரிந்தவள் !
கல்லூரிக்கு நீ மருதாணி வைத்து வந்தால் , கைகள் சிவக்கின்றதோ இல்லையோ அழகாக இருக்கின்றது என நான் கூறக் கேட்டு வெட்கததில் உன் கன்னங்கள் சிவக்கும் !
கடவுள் உனக்கு முட்டை கண்களை படைத்தது நான் முட்டைக் கண்ணி என அழைக்கத் தானோ என தோன்றும்!
எத்தனையோ இரவுகள் தூங்காமல் பேசி இர
காற்றோடு ஆடும் கார்மேகம் அழகா ,
உன் காதோராம் ஆடும் கருங்கூந்தல் அழகா ?
பௌர்ணமி வானின் நிலா அழகா,
கண்ணக் குழிகள் விழும் உன் முகம் அழகா?
மழை கண்ட மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாடும் மீன்கள் அழகா ,
என்னை கண்டும் காணாமல் நடிக்கும் உன் வேல் விழிகள் அழகா?
கார்மேகம் மழை பொழியாமல் காற்றோடு போகலாம்.
உன் கார்கூந்தல் வெளிறி வெண்மை ஆகலாம் !
பௌர்ணமி நிலா தேய்பிறை காணலாம்,
கண்ணக் குழிகள் மறைந்து கண்ணமே குழியாகும் வயதாகலாம்!
மழை இல்லா குளம் வற்றி மீன்கள் அங்கு மறையலாம் ,
உன் கண்கள் பொலிவு மாறலாம் காலங்கள் மாறும் போது!
என்றும் மாறாத , என்றும் மறக்காத நாம் காதலே அழகு !
நான் ஐந்து மாத கருவாக இருக்கும் போதும் ஐந்து மைல் நடந்து பட்டாசு ஆலையில் வேலை செய்தாய்!
என் கல்லூரி படிப்பிற்காக கண்டவரிடம் கடன் வாங்கி என்னை கம்ப்யூட்டர் என்ஞினியர் ஆக்கினாய்!
இந்த படிப்பினால் தானே உன்னை பிரிந்திருக்கிறேன் இன்று!
ஒரு வேளை படிக்காமல் இருந்திருந்தால் நம் ஊரில் நம் வீட்டில் உன்னுடன் இருந்திருப்பேன் இன்று !