- சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்
இடம்
பிறந்த தேதி :  01-Oct-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-May-2011
பார்த்தவர்கள்:  1743
புள்ளி:  1847

என் படைப்புகள்
செய்திகள்
பா கற்குவேல் அளித்த படைப்பில் (public) Bharath selvaraj மற்றும் 16 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
28-Feb-2016 12:02 am

1.~*

வாழ்ந்த சித்திரங்கள் ,
ஆங்கே வலிகளின் சுவடுகளாய் ;
முதியோர் இல்லம் !

2.~*

பொய்த்த மழை ,
நாற்றோடு கருகிய நம்பிக்கை ;
விவசாயி தற்கொலை !

3.~*

மாறிய பிறப்புறுப்பு ,
மகிழ்வு தராத சுகப்பிரசவம் ;
அச்சத்தில் பெண்சிசு !

4.~*

கனவினில் புத்தகம் ,
கடவுளுக்கு நன்றிகூறி எழுகிறான் ;
குழந்தைத் தொழிலாளி !

5.~*

தண்டனை ரத்து ,
கைமாறிய காந்திய நோட்டுகள் ;
சட்டம் விற்பனைக்கு !

6.~*

விலைபேசிய மாது ,
இலவசமாய் கொடுத்துச் சென்றாள் ;
பாலியல் நோய் !

7.~*

அழுகையுடன் மகள் ,
விற்பனைக்குத் தயாரான காணிநிலம் ;
வரதட்சணைக் கேள் !

8.~*

பிரிவுக்கு ஒருவிலை ,
நிர்ணயித

மேலும்

சமூகத்தில் இன்று நடக்கும் அவலங்கள் கண்முன்னே ஹைக்கூ ஆக..... அருமை கற்குவேல் பொய்த்த மழை , நாற்றோடு கருகிய நம்பிக்கை ; விவசாயி தற்கொலை ! பிரிவுக்கு ஒருவிலை , நிர்ணயித்தது உயர் பல்கலைக்கழகம் ; விரைவில் வல்லரசு ! மாறிய பிறப்புறுப்பு , மகிழ்வு தராத சுகப்பிரசவம் ; அச்சத்தில் பெண்சிசு ! தண்டனை ரத்து , கைமாறிய காந்திய நோட்டுகள் ; சட்டம் விற்பனைக்கு ! நான் வெகுவாய் ரசித்தவை... 30-Mar-2016 1:02 am
மனித வாழ்க்கையை சித்தரிக்கும் ஹைக்கூ மலர்கள் மணம் எங்கும் நிறைகிறது ! 29-Mar-2016 3:26 pm
சமூக சிந்தனை கலந்த அருமையான வரிகள் 28-Mar-2016 3:30 pm
அனைத்தும் மிக அருமை...! தண்டனை ரத்து , கைமாறிய காந்திய நோட்டுகள் ; சட்டம் விற்பனைக்கு ! கனவினில் புத்தகம் , கடவுளுக்கு நன்றிகூறி எழுகிறான் ; குழந்தைத் தொழிலாளி ! அனைத்துமே மிக அருமை..! சமூக சிந்தனை மிக சிறப்பு..! வாழ்த்துக்கள்..! 20-Mar-2016 7:26 pm
மதிபாலன் அளித்த படைப்பில் (public) Kumaresankrishnan மற்றும் 14 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
27-Feb-2016 1:16 am

""""""""""""""""""""""""""""""""""""""""""""""
* நீரிலும் வாழ முடிந்தால்
நெருக்கடி தீரும் -
நிம்மதியாய் தவளை.

* பசுமையை விழுங்கி
உடம்பு வளர்க்கிறது
நெடுஞ்சாலை.

* இன்னும் சில மனைகளே
மீதம் உள்ளன -
நிலவில் விளம்பரம்.

* முறைவைத்துத் தலைமை
முன்னேறும் கூட்டுப்படை -
வலசைப் பறவை.

* இறப்புக்குப் பிறகும்
வாழ்க்கை இருக்கிறது -
செருப்பு.

* ஊழல் ஒழிப்பு மாநாடு
வெளிச்சம் தந்தது
திருட்டு மின்சாரம் .

*ஜன்னலே வீடு
எச்சிலே ஆயுதம்
பசியாறும் சிலந்தி !

*கழுத்துவரை ஓடும்
நதிவெள்ளத்துக்கு நன்றி -
நிர்வாண நாணல்.

* கண்விழித்து முயற்சி செய்தும்
கரு உருவாகவில்லை -
எழ

மேலும்

மிக்க நன்றி 29-Mar-2016 5:18 pm
அருமையான வரிகள் ! 29-Mar-2016 3:24 pm
கருத்துக்கு நன்றி . 28-Mar-2016 5:29 pm
* பசுமையை விழுங்கி உடம்பு வளர்க்கிறது நெடுஞ்சாலை. பசுமைப் புரட்சி போல்...புரட்சி செய்யும் ஹைக்கூ வரிகள் அருமை 28-Mar-2016 3:28 pm
ப்ரியா அளித்த படைப்பை (public) பாரதி நீரு மற்றும் 16 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
01-Mar-2016 7:06 am

வெட்டியக்கோடாரியில்
காயா ஈரம்
மரத்தின் கண்ணீர்
_________________________________________

மழையை பூமிக்கு தூதனுப்பி
காத்திருக்கிறது காதலோடு
வானம்
__________________________________________

தினமும் என்கைபட்டே
உன் ஆயுள் குறைகிறது
நாள்காட்டி
__________________________________________

நிலவழகியின் சிரிப்பில்
சிதறிய முத்துக்கள்
நட்சத்திரங்கள்
___________________________________________

இரவும் பகலுமாய்
கண்ணாமூச்சி ஆடுகிறார்கள்
சூரியசந்திரன்
____________________________________________

கல்யாண மண்டபத்தில்
கவலையோடு நிற்கிறது
கன்றைபிரிந்த வாழை
____________________

மேலும்

மனதை வருடும் அழகு வரிகள்..... 12-Aug-2016 9:12 am
தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சித்தோழி....!! 30-Mar-2016 11:02 am
தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி நண்பரே...!! 30-Mar-2016 11:01 am
வெட்டியக்கோடாரியில் காயா ஈரம் மரத்தின் கண்ணீர் மழையை பூமிக்கு தூதனுப்பி காத்திருக்கிறது காதலோடு வானம் தினமும் என்கைபட்டே உன் ஆயுள் குறைகிறது நாள்காட்டி கல்யாண மண்டபத்தில் கவலையோடு நிற்கிறது கன்றைபிரிந்த வாழை மனதை தொட்டவை அழகான துளிபாக்கள் அருமை ப்ரியா, 30-Mar-2016 1:20 am
மனோ ரெட் அளித்த படைப்பை (public) பாரதி நீரு மற்றும் 10 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
29-Feb-2016 6:51 am

என்னைப் பாதித்த நிகழ்வுகள்
நடமாடும் நதிகளாகப் பாயும்
நவரச ஹைக்கூக்கள் இவை.
 
1.நகைச்சுவை
-------------------
கொசுவைக் கொன்றபடியே
பக்கத்து வீட்டில் புலம்பினார்கள்
நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை!
 
2.அழுகை
--------------
புடலங்காய் விதைத்தால்
புற்றுநோய் விளைகிறது.
ரசாயனப் பூச்சிக்கொல்லிகள்!
 
3.அவலம்
--------------
நான்கு கைகள் இருந்தும்
தானம் தரவில்லை.
உண்டியல் அருகே கடவுள்!

4.வியப்பு
--------------
ஆடி முடித்தவனைக் கரை சேர்க்க
ஆடிக் கொண்டே வருகின்றன
நாளைய பிணங்கள்.
 
5.கருணை
--------------
முன்னாள் தலைவர் சிலை,
எச்சம் போடாமல் சென்றது
நவீன காலத்துக் காக்கை.
 
6

மேலும்

உங்களின் வியப்பைக் கண்டு நான் வியந்தேன்! 22-Aug-2017 12:24 am
அர்த்தம் யதார்த்தம் நிறைந்த அருமையான துளிபாக்கள் மனோ, வெகு நாட்களுக்கு முன்பு பதிவிட்ட நல்ல படைப்பை இவ்வளவு நாட்கள் சென்று வாசித்து ரசித்ததில் மனம் சற்றே வருத்தப்படுகிறது.... 1.நகைச்சுவை ------------------- கொசுவைக் கொன்றபடியே பக்கத்து வீட்டில் புலம்பினார்கள் நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை! 2.அழுகை -------------- புடலங்காய் விதைத்தால் புற்றுநோய் விளைகிறது. ரசாயனப் பூச்சிக்கொல்லிகள்! 3.அவலம் -------------- நான்கு கைகள் இருந்தும் தானம் தரவில்லை. உண்டியல் அருகே கடவுள்! 4.வியப்பு -------------- ஆடி முடித்தவனைக் கரை சேர்க்க ஆடிக் கொண்டே வருகின்றன நாளைய பிணங்கள். வெகுவாய் வருடியது மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன்.... 30-Mar-2016 1:49 am
நவரசத்துடன் நவகிரகங்கள் போல் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு பார்வையுடன் மிக அழகாக படைத்துள்ளீர். வாழ்த்துக்கள்...! 20-Mar-2016 10:23 pm
நவரசமாய் ஹைக்கூ அருமை 16-Mar-2016 5:55 pm
கார்த்திகா அளித்த படைப்பை (public) மணிவாசன் வாசன் மற்றும் 10 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
25-Feb-2016 12:07 am

மஞ்சள் பூக்களுக்கு
நடுவில் அலைகிறது பட்டாம்பூச்சி
தென்றல் வரும் நேரம்

தாய் மர நிழலில்
துயிலும் மலர்கள்
சருகுகளின் மடி இதம்

அதிகாலை வாசம்
நெற்றியில் முத்தமிடுகிறது
கிழக்கு வெயில்

நேற்றும் இன்றும்
நடந்த சிநேகத்தில்
வழியெங்கும் புன்னகை

என்னைப் பார்த்து
ஈறுகளில் சிரிக்கிறது மழலை
இன்றும் கண்கள் சுருக்கியபடி

மழை நனைத்த பாதங்கள்
குளிர் கொண்டு மூடுகின்றன
முன்பனிக்கால இரவுகள்

தலை குளித்த குருவியின்
சிறகிலிருந்து உதிர்கிறது
முதல் மழைத்துளி

நீலக் கடல் சுமந்த
பறவை அலையெனக் கொள்கிறது
கூடடையும் ஞாபகங்கள்

வேண்டுமென்று கேட்கவில்லை
இயல்பாய் தோள்

மேலும்

அனைத்தும் அருமை.... வேண்டுமென்று கேட்கவில்லை இயல்பாய் தோள் சாய்கிறது காதல் அழகான உணர்வு.... 30-Mar-2016 1:07 am
ஒவ்வொரு பத்தியும் மிகவும் சிறப்பாக உள்ளது. அருமை ! 29-Mar-2016 3:23 pm
தாய் மர நிழலில் துயிலும் மலர்கள் சருகுகளின் மடி இதம் நேற்றும் இன்றும் நடந்த சிநேகத்தில் வழியெங்கும் புன்னகை ..... மிகவும் அருமை. 29-Mar-2016 11:03 am
அனைத்தும் மிக அருமை...! என்னைப் பார்த்து ஈறுகளில் சிரிக்கிறது மழலை இன்றும் கண்கள் சுருக்கியபடி - மிக அருமை வேண்டுமென்று கேட்கவில்லை இயல்பாய் தோள் சாய்கிறது காதல் - அழகு அனைத்துமே மிக அருமை..! வாழ்த்துக்கள்..! 20-Mar-2016 7:04 pm
கவித்தாசபாபதி அளித்த படைப்பை (public) குமரேசன் கிருஷ்ணன் மற்றும் 12 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
26-Feb-2016 12:06 am

“மௌனம் கசியும் பாறைகள்”
***************************************

அதிகாலைப் பனிமேடை
குருவிகளின் கூட்டிசையில்
கௌசல்யா சுப்ரபாதம்

*

பச்சைமலைக் காடு
காட்டையே கட்டியிழுக்கிறது
வனவாசியின் கூப்பிடுகுரல்

*

கள்மரத்துப் பானைகளில்
சொட்டுசொட்டாய் வடிகிறது
தோட்டக்காரனின் தாகம்

*

வலையில் சிக்காத கடல்மீன்கள்
சிக்கிவிடுகின்றன
அவர்கள் பாட்டில்

*

யுகங்கள் கடந்துபோய்விடவில்லை
நின்றயிடத்திலிருந்தே வாழ்த்தும்
அருவிகள்

*

மஞ்சள் குருதியில்
மினுங்கும் மேனி
பொன்அந்தி மாலை

*

ஓடைகள் நதிகளாவதை
மலைத்து ரசிக்கின்றன
கசியும் பாறைகள்

*

அமாவாசை

மேலும்

அமாவாசை இரவு எங்கு தவிக்கிறதோ பிள்ளை(யின்) நிலா .....அழகிய ஹைக்கூ வரிகளுடன்...இன்னும் படிக்கத் தூண்டும் தவிப்புடன்...அருமை 29-Mar-2016 11:14 am
அனைத்தும் மிக அருமை..! அழகு..! சிறப்பு..! 20-Mar-2016 7:12 pm
இனிமையான ஹைக்கூ வாழ்த்துக்கள் 06-Mar-2016 4:21 pm
நல்ல தேடல்கள்... இயற்கையோடு கொஞ்சம் உலவமுடிகிறது... குருவிகள் கூட்டிசையில் புதியசுரங்கள்.. என இருக்கலாமோ....சுப்ரபாதம் வேண்டாம் எனத்தோன்றுகிறது.. வனவாசியின் குரல்..அழகு சொட்டுசொட்டாய் தோட்டக்காரனின் தாகம் மனதுள்... கடல் மீன்கள், அருவி, கசியும் பாறைகள், நீந்தும் நதி, அழகு.. தவிக்கும் நிலா ...கங்கையின் தவிப்பு...நல்ல மீட்டல்... வாழ்த்துக்கள் நண்பரே.. 06-Mar-2016 1:09 pm
- படைப்பு (public) அளித்துள்ளார்
24-Aug-2015 10:45 pm

நாங்கள்
மேகி சாப்பிட்டோம்..

ஓட்ஸூம் கெலாக்ஸூம்
எங்களுக்கு டயட் ஆனது..

ஜீரணம் செய்வதற்கு
கோக் பருகினோம்..

சட்டினி சார்ஸான பொழுது
புளிப்பில் உருகினோம்..

சோளப்பொறியை பாப்கார்ன் என்றழைத்தபோது ஃப்ளேவர்களில்
மயங்கினோம்..

ப்ரான்ட் பார்த்து தாகம் தீர்க்க
பழகிக்கொண்டோம்..

இட்டிலிக்கு சட்டினி இல்லையெனில்
எரிச்சல்படுபவர்கள் பீட்சாவுக்கு
மிளகாய்பொடிகளை தூவிக்கொண்டோம்..

இப்படித் தான் நாங்கள் மறந்துக்கொண்டிருக்கிறோம்
இந்தியாவில் இன்னும் நதிகள்
இருக்கின்றன என்பதையும்
அரிசியின் இரகங்களையும்
உங்கள் வீட்டில் என்ன குழம்பு
என்று கேட்பதையும்...
--கனா காண்பவன்

மேலும்

மனிதன் என்பதே மறந்த நமக்கு மற்ற மறதிகள் எல்லாம் எழுத படாத விதிகள்தான்... வாழ்கையில் தொலைத்தவனுக்கு தான் வலி தெரியும் ஆனால் வாழ்கையே தொலைத்தவனுக்கு வலியும் அதற்கான வழியும் தெரியாது ... எடுத்துக் கொண்ட பாடு பொருளில் கணக் கச்சிதமாய் வரிகள் பொருந்தி வந்திருக்கிறது... முடித்த விதம் வெகு சிறப்பு தோழரே... உணர்ந்தேன்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 26-Aug-2015 12:49 am
நம்மை நாமே தொலைத்துக் கொண்டிருக்கிறோம்..அருமை கனா.. 25-Aug-2015 11:19 am
ஆமாம் நட்பே!! உலகில் நாகரிகம் வேகமான ஓட மனிதனும் ஆமை போல் நடக்கும் பழமைகளை விட்டு நீங்கி விட்டான் உணர்ந்தால் என்றும் நாகரிகம் நஞ்சு தான் 25-Aug-2015 12:52 am
- படைப்பு (public) அளித்துள்ளார்
22-Aug-2015 11:14 am

த்ரிஷாவும் சித்தார்த்தும்
கொஞ்சிக்கொள்வது..

ஜெய்யிடம் நயன்தாரா
திட்டித் திட்டி காதல் சொல்வது...

துல்கர் சொல்லும் கண்மணியில்
கண்கள் சுருங்க நித்யா சிரிப்பது...

விழிகள் நான்கும் தொடாத குறையாய்
நெருங்கி நிற்க மாதவனும் சாலினியும்
புன்னகைத்திருப்பது..

இளஞ்சூரியன் துணையோடு யாரோ
இருவரின் நிழல் மஞ்சள் பூக்களின் மீது
முத்தமிட்டுக்கொள்வது..

ரோஸ்காரி சிவப்புக்காரன் நெஞ்சில்
முகம் புதைத்து முதுகில் கையுரசியது..

எண்பது வயதில் கட்டிப்பிடித்தவாறு
வெளிநாட்டு தம்பதியர்கள் செத்துப்போயிருப்பது..

கூகுள் நறுக்கி கொட்டிய இவற்றுள்
சில படங்கள்..
நாம் ஹாய் சொல்லிய சில நாளிலிருந்து நமத

மேலும்

இன்றைய கூகுள் நறுக்கி கொட்டியதை சுட சுட படையலிட்டு பரிமாறி வைக்கப் பட்டது படைப்பு எனும் விருந்தில்... எவ்வளவு அழகான சிந்தனை... அதை விட அதை சொன்ன விதத்தில்தான் இந்த படைப்பு அவ்வளவு உயரத்தில் சிறந்து நிமிர்ந்து நிற்கிறது... மிக ரசித்தேன் தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 22-Aug-2015 9:27 pm
நண்பரே!!! வாழ்க்கையில் தினம் தினம் நேரும் நிதர்சனங்களை நாட்கள் கடக்க எம்முடன் தொடர்கின்றன என்ற தத்துவம் பேசும் வரிகள் என்றும் உங்கள் கவிதை தனித்துவம் தான் நண்பரே!! 22-Aug-2015 5:42 pm
தாகு வின் கவிதைகள் என்றும் வித்தியாசம் தான்...அருமை... 22-Aug-2015 2:17 pm
நல்லாயிருக்கு தோழா 22-Aug-2015 11:45 am
- படைப்பு (public) அளித்துள்ளார்
17-Aug-2015 11:41 am

சாக்பீஸ் துண்டுகள் எறியப்பட்டன
கண்கள் திரும்பியும்
கவனம் சிதறியிருந்தது...

கிசுகிசுத்த கரிகளால்
கோபத்தோடு வெட்கமும்
வராமலிருக்கவில்லை..

தொடரோட்டம் துவங்க
நீ கண்சிமிட்டிய பின்னரே
விசில் சத்தம் கேட்டது..

அறிவுப்பு பலகையில் அடுத்தடுத்து
இருந்த நம் பெயர்களால்
தேர்வு முடிவுகளை கண்டுக்கொள்ளவில்லை..

நீண்ட நேரம் நாம் பேசுவதற்காகவே
ஆண்டு விழா நிகழ்ச்சிகளை
அவர்கள் நடத்தினர்..

சத்தியமாக
நீயும் நானும் காதலிப்பதாக
நினைத்திருந்தோம்..
--கனா காண்பவன்

மேலும்

காதல் என்ற சொல்லை தூய்மை படுத்தும் உங்கள் வரிகள் வரிகள்.ஆரோக்கியமான நட்பின் அன்பெனும் மாத்திரையாய் உங்கள் கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்.நலமா? 19-Oct-2015 11:21 pm
அச்சு பிசறாத புரிதல்களால் புத்துயிர் பெறுகிறது சிந்தனைகள்.. உண்மை.. மிக்க நன்றி தோழரே.. 18-Aug-2015 11:45 am
மிக்க நன்றி தோழமை... 18-Aug-2015 11:44 am
நன்றி தோழமை.. 18-Aug-2015 11:44 am
- படைப்பு (public) அளித்துள்ளார்
13-Aug-2015 9:25 am

இறைச்சி கொழுப்புகளின்
ருசியற்ற சமைக்காத வாடைகளில்
புத்தன் சுவாத்திருக்கக் கூடுமென
போதிமரங்கள் பேசிக்கொள்கையில்
அதன் வேர்களின் மண் கீறிய திமிரலில் சில கால்கள் தடுக்குவதாக
திரும்புகின்றன..

அவிழ்ந்த சிறுமலர் நறுமணங்களில்
இன்னும் மெல்லியதாய் நபிகள்
புன்னகைத்து அமர்ந்திருந்தாரென
பிறை சூழ்ந்த நட்சத்திரமொன்று
சொல்லி ஜொலிக்கையில்
ஐந்து முனைகளிலொன்று
சில காதுகளை தைக்கிறது...

ஒரு கன்னமென்பது உங்கள் நம்பிக்கையெனவும்
இன்னொரு கன்னமென்பது உங்கள் பொறுமையெனவும்
இயேசு மொழிந்தார் என சிலுவையொன்று
உபதேசிக்க சில கைகள் கோடரியை ஓங்குகின்றன..

அன்பிற்கு படைக்கப்பட்ட யாவும்
அன்பிற்கே என இறை

மேலும்

பொதுவாக நம்பிக்கை என்பது வாழ்கையில் இருக்க வேண்டும் ஆனால் கடவுள் நம்பிக்கை என்பது வாழ்க்கைக்குள் இருக்க வேண்டும்... இதை இடம் மாற்றி பொருள் தேடும் புரிதல் இல்லாததால்தான் மனிதனை நேசிக்க மறந்து விட்டான் மனிதன்... மனிதனை நேசிக்காதவனை கடவுள் வெறுப்பார் என்று கூட தெரியாமல் கடவுளை நேசிக்கும் மனிதனை என்ன செய்வது? வாழ்வின் ஒளித்தடங்களை ஒரு முறை ஒத்திகை பார்க்க செய்து விட்டு போகிறது படைப்பு... மிக சிறப்பு தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 14-Aug-2015 3:17 am
புரிதலான நல்ல கேள்வியை கொண்ட பின்னூட்டம்.. உங்கள் கேள்விக்கு ஆம் என்றே பதில் சொல்ல தோன்றுகிறது.. மிக்க நன்றி ஐயா... 13-Aug-2015 5:15 pm
பாராட்டிற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழமை... 13-Aug-2015 5:14 pm
நன்றி தோழா.. 13-Aug-2015 5:13 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (124)

வித்யா

வித்யா

சென்னை
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (124)

சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்

இவரை பின்தொடர்பவர்கள் (125)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
பானுஜெகதீஷ்

பானுஜெகதீஷ்

கன்யாகுமரி
மங்கை

மங்கை

தமிழ்நாடு

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே