கார்த்திகா - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  கார்த்திகா
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி :  23-Aug-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  28-May-2013
பார்த்தவர்கள்:  4762
புள்ளி:  3411

என்னைப் பற்றி...

எழுத்துகளை நேசிக்கும்
எழுதுகோல் நான்!

என் படைப்புகள்
கார்த்திகா செய்திகள்
கார்த்திகா - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Aug-2018 12:05 pm

பூச்சியம்
*************

எதிர்பார்ப்புகள் அற்ற
அந்த ஒற்றை கணத்திற்காய்த்
தவமிருக்கிறேன்

மரங்களின் இலை
உதிரும் தவிப்பு
சருகாகும் எஞ்சிய நேரம்

வேண்டுதல்கள்
சாபங்கள்
குறைகள் நிறைகள் போற்றுதல்கள்
கெஞ்சுதல் மிச்சங்கள்
எச்சத்தின் வடுக்கள்
மீறிய உணர்ச்சிக் கொட்டுதல்
யாவும் யாவரும்
கழிக்கும் பொழுது
அந்தக் கணம்
பிரிவு அல்ல அது
புரிதலின் பேருண்மை
நிஜம் பாராட்டும் நிழல்களின் தேசம்

காத்திருப்பின் கணம்
கனமற்றதாகுக
இருப்பினும்
எதிர்பார்ப்புகள் அற்ற
வெற்று வெளி
காற்றின் ஸ்பரிசம்
உயிரின் தனிமை
மகிழ்வும் துயரும்
வேறுபாடும்
வேறு இல்லாத

வெற்று நொடியை

மேலும்

சிந்தனைக்குரிய கவிதை அமைப்பு பாராட்டுக்கள் 22-Jan-2020 12:15 pm
கார்த்திகா - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2018 12:06 am

நிமிர்ந்த நன்னடை
நேர் கொண்ட பார்வை
காலை எழுந்தவுடன்
முகம் சரி செய்யும் கண்ணாடி
செம்மை பூசிய இதழ்கள்
கண் மையிட்டு
காதுகளில் தொங்கும் வளையங்கள்
திரும்பி பார்க்க வைக்கும்
கொஞ்சு மொழி
தன்னை அழகாய்
அழகழகாய்
வெளிக் கொணரும் பாங்கு
என்னால் முடியும்
புரிந்து கொள்
நான் யார் என்பதையும்
நீ தான் செய்கிறாய்
கண் நீருக்கு விலங்கிட்டு
சுயமரியாதை காட்டும் அதை
நீவிர்
திமிர் என்று விளம்பினால்
மிகச் சரியே ..


-கார்த்திகா அ

மேலும்

வாழ்வியல் கற்பனை வரிகள் இலக்கிய நடை படைப்புக்கு பாராட்டுக்கள் 22-Jan-2020 12:13 pm
அருமை..! மிடுக்கு..! 03-Jul-2018 6:38 am
நிர்ப்பந்தம் என்ற கூட்டிற்குள் நிதர்சன வாழ்க்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Feb-2018 7:16 pm
கார்த்திகா - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2018 10:08 am

மூச்சிலாக் காற்று
****************
எப்பொழுதோ தொலைத்த
ஞாபக வீட்டிற்குள்
கவனமாக அடி எடுத்து வைக்கிறேன்
முட்களின் கூர்முனைகள்
பாதங்களின் அழுத்தம் ஏற்கொண்டு
உடைந்து போனதும்
நகங்களின் கூர்
செதுக்கப்பட்டது
இன்னும் ஆழமாக
பழகிடாத இருள்
பயமற்றது
முன் நடந்து
வான் பற்றி
விண்மீன் கொய்கிறேன்
சட்டெனக் கையிற் சுடுகிறது
நேற்றிரவில் சிதைந்த
குட்டிப் பூந்தேகம்
வழிகின்ற கண் நீர் வழித்து
வழி திரும்புகையில்
தீயினும் வலியது
வேண்டி நிற்கின்றன
வெளிச்சமிழந்த விடியல்கள்..

-கார்த்திகா அ

மேலும்

கார்த்திகா - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Oct-2017 8:47 pm

நுரைத்தெழும்பும் நதிகள்
**************************** எப்பொழுதுமே திறந்த
ஒரு வானத்தைப் போன்றே
அது நகராமலிருக்கிறது
எப்பொழுதும் மூடிய
வனத்தை மேலும் அடர்ந்ததாக்குகிறது
மத்தாப்பு பொரிந்து
யாதொன்றும் நிலையில்லாத
ஒன்றில் நிலையாகிறது
நட்சத்திரக் குவியல்
கண்சிமிட்டி அழைக்கிறது
புரியாத ஒன்றில்
புரிந்திடும் பொருள் பொதிந்த அவை
கீழிருந்து சிறகடித்து வட்டமடிக்கும்
கிளிக்கூட்டம் விரல்களுக்கு
மிக அருகில்
தொட வந்தெனை நுகரும்
அவைகளின் ஸ்பரிசம்
தீண்டுவதற்குள்
மலையுச்சியிலிருந்து
குதித்தே விட்டேன்..
ஆழ்கடலின் நீலச் செழுமையில்
நீந்தக் கற்றுக்கொண்டு இருக்கிறது
அக் குட்டிக் கி

மேலும்

யதார்த்தங்களுக்குள் வாழ்க்கை சிக்குண்டு கிடக்கிறது உள்ளங்கள் வசந்தமாகி எண்ணங்கள் தூய்மையாகி மனிதங்கள் வேராகி துன்பங்கள் இன்பமாகி வறுமையும் செழுமையாகி பெண்ணியம் கண்ணியமாகி ஆண்மையும் ஒழுக்கமாகி இனிதாய் வாழ்க்கை இனி அமைந்திட தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் 18-Oct-2017 12:33 pm
கார்த்திகா - கார்த்திகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Oct-2016 3:15 pm

யாரோடும் காணாத நட்பு
விரலோடு சேர்ந்த குளிர்
கொஞ்சமாய் பனித் துளிகள்
இதமாய் இதழ் கோர்க்கும்
பட்டு ரோஜாக்கள்
நீண்ட முன்பனி இரவு
கதை சொல்லும் விழிகள்
நிஜமாய் இனிக்கிறது
வானின்று தூவிய
சின்ன மழைத் துளிகள்...

மேலும்

இறைவன் ஆசியில் நலமாக இருக்கிறேன் 17-Oct-2016 6:29 pm
நன்றி நட்பே....நலம் ...நீங்க நலமா .... 17-Oct-2016 5:36 pm
உண்மைதான்..காத்திருப்பின் பின் இயற்கையின் வருகையும் அழகு தான்..நீண்ட நாட்களுக்கு பின் எப்படி நலமா? 17-Oct-2016 8:40 am
கார்த்திகா அளித்த படைப்பில் (public) sherish மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
10-Jun-2016 6:40 pm

வெண் முத்துச்சிதறல்கள்
**************************************


ஒன்று இரண்டு மூன்று
எண்ணிக் கொண்டே வருகிறேன்

யார் சிரிக்கிறார்கள்
அதிகம் யார் புன்னகை செய்கிறார்கள்

அந்த நீல வண்ண சுடிதார் பெண்ணை
ரொம்பப் பிடித்துப் போனது
அவள் சிரித்துக் கொண்டே இருக்கிறாள்

இல்லையில்லை
நீலம் எனக்கு பிடித்ததாலும்தான்

கருப்பு வண்ண சேலை
சிரிப்பதற்கு வெகுவாய் எதிர்பார்க்கிறேன்

ஆரஞ்சு சிரிப்பின் அளவில்
கொஞ்சம் சிக்கனமாய்

எனக்கு முன்
புன்னைகைக்கும் இதழ்களை
வெகுவாக நேசிக்கிறேன்
அவற்றில் நானே பிம்பம்

தேடிக் கொண்டே அலைமோதுகிறேன்
திரும்பவும் சிரிப்பு
கும்மாளமிடும் சிரிப்பைக் காணவில்லை

மேலும்

'கருப்பு வண்ண சேலை சிரிப்பதற்கு வெகுவாய் எதிர்பார்க்கிறேன் ' எதிர்பார்ப்புதானே வாழ்க்கை! அருமை தோழியே! 28-Jun-2016 11:21 pm
மிக்க நன்றி natpe... 19-Jun-2016 8:07 pm
மிக்க நன்றி தோழமையே.... 19-Jun-2016 8:06 pm
மனிதர்களின் வண்ணங்கள் மாற்றங்கள் நிறைந்தவை தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Jun-2016 5:33 am
கார்த்திகா அளித்த படைப்பில் (public) kavithasababathi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
31-May-2016 9:41 pm

ஒன்று இரண்டு மூன்று
எண்ணிக் கொண்டே வருகிறேன்

யார் சிரிக்கிறார்கள்
அதிகம் யார் புன்னகை செய்கிறார்கள்

அந்த நீல வண்ண சுடிதார் பெண்ணை
ரொம்பப் பிடித்துப் போனது
அவள் சிரித்துக் கொண்டே இருக்கிறாள்

இல்லையில்லை
நீலம் எனக்கு பிடித்ததாலும்தான்

கருப்பு வண்ண சேலை
சிரிப்பதற்கு வெகுவாய் எதிர்பார்க்கிறேன்

ஆரஞ்சு சிரிப்பின் அளவில்
கொஞ்சம் சிக்கனமாய்

எனக்கு முன்
புன்னைகைக்கும் இதழ்களை
வெகுவாக நேசிக்கிறேன்
அவற்றில் நானே பிம்பம்

தேடிக் கொண்டே அலைமோதுகிறேன்
திரும்பவும் சிரிப்பு
கும்மாளமிடும் சிரிப்பைக் காணவில்லை

அட கல்லூரிகளை கடந்த பின்னர்
சிரிப்பை எங்கே வாங

மேலும்

மிக்க நன்றி ஐயா ...தங்கள் வாழ்த்துக்களில் மிகவும் மகிழ்ந்தேன்.....தங்களைப் போன்றவர்களின் பாராட்டுகளில் தான் கவி விதையாய் இளம் நெஞ்சங்களில் ஊன்றப்படுகிறது மிக ஆழமாய்.....மிக்க நன்றி ஐயா.... 10-Jun-2016 1:04 pm
mikka nanri natpe.... 10-Jun-2016 12:59 pm
"மீண்டும் மீண்டும் மீண்டு ,...." தளத்தில் மட்டுமல்ல , பத்திரிகை , நூல்களில் கூட காணாமல் தொலைந்து போயிருப்பது கவிதை மட்டுமே. கவிதை ஓர் அபூர்வமான , அழிந்து போன ஒரு பறவை இனம் போல் ஆகிவிட்டது. உங்களைப் போல இளம் கவிஞர்கள் மாறுபட்டும், துல்லியமாகவும் எழுதுவதால் மனம் மகிழ்கிறது. வெகு நாட்களுக்குப் பிறகு ஓர் அற்புதமான கவிதை , அதன் சிரிப்பொலி,, அதன் நிறம் .. உயரிய இலக்கிய நடை.. உன்னத உணர்வு.. பாராட்டுகள் பெண்ணே.. வாழ்த்துக்களுடன் ...! 06-Jun-2016 11:40 pm
அழகான கண்ணோட்டம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Jun-2016 6:33 am
கார்த்திகா - கவித்தாசபாபதி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
31-May-2016 3:48 pm

ருத்ரா  நாகனின்
ஜென்ம யாசகம், 
கவித்தாவின் 
ரகசிய சிநேகிதி....   
வேறு நிலாக்களில்   

புலமியின் 
வசந்தங்களின் மெல்லிய 
வருடங்களின் வருடல்கள் .
யுகம் தாண்டும் சிறகுகளில் ...     

ஒரு காட்டுவாசி .
காலச்சுவடுகளில்  ... 


மேலும்

கவித்தாசபாபதி அளித்த படைப்பில் (public) arjun anbu மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Apr-2016 9:37 pm

நட்சத்திரமாய் நீ
*************************

அமாவாசைகள் தோற்ற ஓர்
அடர்ந்த ராப்பொழுதொத்த,
இருள் கூடிக்கூச்சலிடும்
இதயத்தின் ஆழ்குகைக்குள் - என்
எழுஜென்ம இன்பம் பிசைந்து
சாறெடுத்து, சாந்தாக்கி
எழுப்பிய நினைவுப்பேழையுள்,
அடைத்து வைக்கிறேன்,
உன் சிரிப்பின் பொழுதுகளை.

அதிர்ந்து சிரித்துவிடாதே!!..
உடைபேழை வழிவழியும்,
சிரிப்புச் சிதறல்களில் சிக்கிநான்
சிதைந்துவிடக்கூடும்.

கைவிரித்து, காற்றடைத்து,
விரலிடைப்புகும்
தென்றலைத் தீயாக்கி,
காதோரம் சூடேற்றும்
ஸ்பரிசங்களின் வழி,
யாருமறியா உன்னிதழ் கூறும்,
யாவருமறிந்த ரகசியங்கள்.

ஓவ்வொரு உதட்டசைவிலும்
மரித்து

மேலும்

அருமை...சொல்ல வார்த்தைகளே இல்லை 19-Apr-2016 7:39 pm
நயமும் சந்தமும் பொருளும் முன் பின் ஓடிப்பிடித்து மொழியின் அழகாய் மனதில் காட்சியாய் தருகிறது..பல விளக்குகள் அணைந்த காதல் நேசத்தில் இன்னும் அணையாமல் புயலிலும் மிளிரும் வாழ்க்கையின் நேசம் கவியின் பரிசம் 16-Apr-2016 11:03 pm
மிக அழகான வரிகள் ! 16-Apr-2016 6:36 pm
அதி அற்புதமாய் சொற்களனைத்தும்....திரும்பத் திரும்ப வாசித்தேன் .....சொற்களின் வனப்பில் வியந்தேன் நட்பே.....தேர்ந்தெடுத்து மிக அற்புதமான கவிகளை விருந்தளிக்கும் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.... 16-Apr-2016 11:49 am
கவித்தாசபாபதி அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
15-Apr-2016 9:37 pm

நட்சத்திரமாய் நீ
*************************

அமாவாசைகள் தோற்ற ஓர்
அடர்ந்த ராப்பொழுதொத்த,
இருள் கூடிக்கூச்சலிடும்
இதயத்தின் ஆழ்குகைக்குள் - என்
எழுஜென்ம இன்பம் பிசைந்து
சாறெடுத்து, சாந்தாக்கி
எழுப்பிய நினைவுப்பேழையுள்,
அடைத்து வைக்கிறேன்,
உன் சிரிப்பின் பொழுதுகளை.

அதிர்ந்து சிரித்துவிடாதே!!..
உடைபேழை வழிவழியும்,
சிரிப்புச் சிதறல்களில் சிக்கிநான்
சிதைந்துவிடக்கூடும்.

கைவிரித்து, காற்றடைத்து,
விரலிடைப்புகும்
தென்றலைத் தீயாக்கி,
காதோரம் சூடேற்றும்
ஸ்பரிசங்களின் வழி,
யாருமறியா உன்னிதழ் கூறும்,
யாவருமறிந்த ரகசியங்கள்.

ஓவ்வொரு உதட்டசைவிலும்
மரித்து

மேலும்

அருமை...சொல்ல வார்த்தைகளே இல்லை 19-Apr-2016 7:39 pm
நயமும் சந்தமும் பொருளும் முன் பின் ஓடிப்பிடித்து மொழியின் அழகாய் மனதில் காட்சியாய் தருகிறது..பல விளக்குகள் அணைந்த காதல் நேசத்தில் இன்னும் அணையாமல் புயலிலும் மிளிரும் வாழ்க்கையின் நேசம் கவியின் பரிசம் 16-Apr-2016 11:03 pm
மிக அழகான வரிகள் ! 16-Apr-2016 6:36 pm
அதி அற்புதமாய் சொற்களனைத்தும்....திரும்பத் திரும்ப வாசித்தேன் .....சொற்களின் வனப்பில் வியந்தேன் நட்பே.....தேர்ந்தெடுத்து மிக அற்புதமான கவிகளை விருந்தளிக்கும் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.... 16-Apr-2016 11:49 am
கிநரேந்திரன் கருமலைத்தமிழாழன் அளித்த எண்ணத்தை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 5 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
15-Apr-2016 6:00 pm

தமிழ்   ஒரு   பூக்காடு பாவலர்  கருமலைத்தமிழாழன் 
 முத்தமிழே !    ஞாலத்தில்   முந்தி   வந்தே            
---மூவாமல்    கன்னியென   இலங்கு   கின்றாய்
தித்திக்கும்    அமுதமெனச்   சுவையாய்   நாவில்            
---திகழ்கின்றாய் !   முச்சங்கப்    புலவ   ராலே
எத்திக்கும்   புழ்மணக்கும்   ஏற்றம்   பெற்றாய் !            
---எழுந்துவந்தே   கடற்கோள்கள்    அழித்த   போதும்
வித்தாக    முளைத்துநின்றாய் !  மூவேந்   தர்தம்            
---வளர்ப்பினிலே    பூக்காடாய்   செழித்து   நின்றாய் ! 

 எழுத்திற்கும்    சொல்லிற்கும்   நெறிவ   குத்தே           
---எழுதுகின்ற   உலகத்து   மொழிக   ளுக்குள்
எழுத்திற்குள்   அடங்காத   உணர்வை;  காதல்            
---எழுப்புகின்ற   மெய்ப்பாட்டை   இல்ல   றத்தை
தழுவுகின்ற   கூடலினை   ஊடல்   தன்னை           
 ---தாய்செவிலி   பாங்கிபாங்கன்    வாயில்   கூற்றை
வழுவாத   மறத்தைவாழ்வின்     பொருளைக்   கூறும்            
---வண்தமிழோ   இலக்கணத்துப்   பூக்கா   டென்பேன் ! 

 நிலம்ஐந்தாய்   பகுத்ததனைத்   திணைக   ளாக்கி           
 ---நிகழ்கின்ற   நிகழ்வுகளைத்   துறைக   ளாக்கிப்
 புலப்பண்பைக்    கருஉரியாய்   அகத்தில்   வைத்தும்           
 ---புகழ்வீரம்   புறமாக்கிப்   பத்துப்   பாட்டாய்
நிலவிடும்எட்   டுத்தொகையாய்    அறமு   ரைக்கும்            
---கீழ்க்கணக்காய்க்    காப்பியமாய்    தொன்னூற்   றாறாய்ப்
பலப்பலவாய்   வாழ்வியலை   எதிரொ   லிக்கும்           
 ---பசுந்தமிழோ    இலக்கியத்துப்   பூக்கா   டென்பேன் !       

 நங்கையிடம்   தூதாக   நடக்க   வைத்து           
 ---நரிதன்னைப்   பரியாக்கி   சாம்பல்   தன்னை
மங்கையாக   உயிர்ப்பித்து   முதலை   உண்ட           
---மதலையினை   உமிழவித்துப்    பாய்சு   ருட்டி
 இங்குனக்கோ    இடமின்றேல்   எனக்கு    மில்லை           
 ---என்றாழ்வார்   பின்செல்ல   வைத்துப்   பாட்டால்
 எங்குமுள்ள    இறைவனையே   ஆட்டி   வைத்த           
---எழிற்றமிழோ    பக்திமணப்    பூக்கா   டென்பேன் ! 

 கீர்தனைகள்    எனப்புரியா    மொழியில்   பாடக்          
  ---கீழ்மேலாய்த்   தலையாட்டும்    மாடாய்   ஆனோம்
சீர்த்தகுரல்   கைக்கிளையும்   துத்தம்   தாரம்           
 ---விளரியொடு   உழைஇளியும்    ஏழாய்   நின்று
ஆர்த்தசுரம்   பன்னிரண்டு   பாலைக்   குள்ளே           
 ---அரும்பண்கள்    நூறோடு   மூன்றில்    தேனைச்
சேர்த்தளிக்கும்    துளைநரம்பு    கருவி   கொண்ட           
 ---செந்தமிழோ    இசைநிறைந்த    பூக்கா   டென்பேன் ! 

 போர்க்களத்தில்    அறம்பார்த்தும்   விழுப்புண்   மார்பைப்           
 ---பொருதுபெறப்   போட்டியிட்டும்   பிறர்இல்   நோக்கா
பேர்ஆண்மைக்    காளையரைக்   களவில்   பார்த்தும்           
 ---பெருங்காளை   அடக்கிவரக்   கற்பில்   சேர்ந்தும்
பார்சுற்றிக்    கடல்கடந்து    பொருளை    ஈட்டிப்           
 ---பகிர்ந்தளித்தும்   சாதியற்ற   சமத்து   வத்தில்
 ஊர்இணைந்தும்    வாழ்ந்திருந்த   சங்க   கால           
 ---ஒண்தமிழோ   வாழ்வியலின்   பூக்கா   டென்பேன் !             

 அன்றில்போல்    அன்பிணைந்த   காதற்   பண்பை           
 ---அழகான   இல்லறத்தை    மக்கட்   பேற்றை
துன்பத்தை    இன்முகமாய்    ஏற்கும்   நெஞ்சை            
---துவளாமல்   வினையாற்றும்   பக்கு   வத்தை
 நன்மைதரும்    மக்களாட்சி    மாண்பை    செங்கோல்            
---நடத்துகின்ற    அமைச்சர்தம்   மதியைச்   சொல்லும்
 சின்னவடி   முப்பாலால்   செழித்தி   ருக்கும்            
---சீர்தமிழோ    குறள்மணக்கும்   பூக்கா   டென்பேன் ! 

 வானத்தில்   ஊர்தியினைப்   பறக்க   விட்டு            
---வளியடக்கிக்    கடல்நீரில்    கலத்தை   விட்டு
 ஞானத்தால்    அணுப்பிளந்து   பூமிக்    கோளோ            
---ஞாயிற்றைச்   சுற்றுகின்ற    செய்தி    சொல்லி
வானளாவ    நிற்கின்ற    கோபு   ரங்கள்           
---வழியடைத்து    நீர்தேக்கும்    அணைகள்   என்றே
நானிலமும்    வியக்கின்ற   அறிவைப்   பெற்ற          
--நற்றமிழோ   அறிவியலின்   பூக்கா   டென்பேன் !  

நெருப்பாக   இருந்தவளோ   நெருப்புக்   குள்ளே           
 ---நிதம்வெந்து   மாயும்மன்   றல்கை   யூட்டை
ஒருகுலமாய்    வாழ்ந்தவரைப்   பகைமை   யாக்கி            
---ஒற்றுமையைச்    சிதைத்திட்ட   சாதிப்   பேயை
 உருக்குலைக்கும்    மூடத்தை   ஏற்றத்   தாழ்வை            
---உழல்கின்ற   பெண்ணடிமை   ஆண   வத்தைக்
கருவறுக்கும்   பாரதியார்   பாவேந்   தர்தம்            
---கனல்தமிழோ   புரட்சியூட்டும்    பூக்கா   டென்பேன் !             

 கொடிபடரத்    தேரீந்தும்   காட்டிற்    குள்ளே           
 ----கோலமயில்   குளிர்போக்கப்   போர்வை   தந்தும்
துடித்திட்ட   பறவைக்குச்   சதைய    ரிந்தும்            
---துலக்கிட்டார்    கருணையொன்றே   துணையா   மென்று
 வடித்திட்ட   யாதும்ஊர்    கேளிர்   என்னும்            
---வகையான   கருத்தாலே    உலகைச்    சேர்க்கும்
விடியலுக்கோ    அன்பென்னும்   விளக்கைக்   காட்டும்          
  ---வியன்தமிழோ   மனிதநேயப்    பூக்கா   டென்பேன் !  

முத்தமிழோ   அறிவியலின்   மொழியாய்    ஓங்கி            
---முன்னேறிக்    கணிப்பொறியில்   இடம்பி   டித்தே
 எத்திசையில்   இருப்போரும்   அறியும்   வண்ணம்           
 ---ஏற்றவகைக்   குறியீட்டில்   எழுத்த    மைத்து
வித்தாக    மென்பொருளும்    சொல்தொ   குப்பும்            
---விசைப்பலகை    எனப்பொதுவாய்   ஆக்கி   ஞாலம்
மொத்தமுமே    ஒருநொடியில்    படிக்க   மாறு            
---முகிழ்ந்ததமிழ்   இணையத்துப்   பூக்கா   டென்பேன் !  

ஆட்சிமொழி   தமிழ்என்னும்     பூவைச்   சேர்த்தே            
---அங்காடிப்    பெயரெல்லாம்   தமிழ்ப்பூ   வாக்கி
மாட்சிதரும்   மழலையர்தம்    பள்ளி   யெல்லாம்            
---மணக்கின்ற    தமிழ்ப்பூவை    மலரச்   செய்து
காட்சிதரும்    பொறியியலை   மருத்து   வத்தைக்            
---கவின்கொஞ்சும்    தமிழ்ப்பூவின்    தோட்ட   மாக்கி
நாட்டிலெல்லா    துறைகளிலும்   பதியம்   வைத்து            
---நற்றமிழின்    பூக்காட்டை   வளர்போம்   நன்றாய் !

மேலும்

இனிதாய் எண்சீரில் எழிலான தமிழுக்கு ஏற்றம் கொடுத்த கவிஞரின் கரங்களுக்கு காணிக்கையாக்குவோம் முத்தங்களாய் 16-Apr-2016 2:19 pm
இதுபோன்ற கவிதைகள்தான் கவிதை எழுத பல பாடங்களை கற்றுக்கொடுக்கிறது, நன்றி அய்யா 16-Apr-2016 12:35 pm
தமிழ் வரலாற்றை எண் சீர்களில் சுருங்க சொன்ன அழகு அருமை ஐயா .. வாழ்க தமிழ் வளர்க நற் கவிதைகள் 15-Apr-2016 6:22 pm
இரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தை (public) ஆனந்தி மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
15-Apr-2016 7:24 pm

  பலரின் கைவண்ணத்தில் பலவிதமான சுவையோடு  கவிதை தொக்கு. இதுவரை சுவை ஊட்டியவர்கள் 

7) புனிதா வேளாங்கண்ணி
6) வேளாங்கண்ணி
5) சந்தோஷ் 
4) மணி அமரன்
3) கோபி சேகுவேரா
2) காதலாரா
1) கவிஜி

மேலும் இதில் சுவை கூட்ட விரும்பும் ஆர்வமுடையவர்கள் தோழர் கவிஜியை தனிவிடுகையில் தொடர்பு கொள்ளலாம். 


-இரா.சந்தோஷ் குமார்.   

மேலும்

கவிதை தொக்கு : அயல்நாட்டில் நான் இருந்தபோது பதிவானதை இன்று தற்செயலாக காண நேர்ந்தது. படித்தேன் பகிர்ந்தேன் பாராட்டுக்கள் மீண்டும் தொடரட்டும் கவிதை தொக்கு நன்றி 25-Nov-2016 4:16 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (466)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
richard edwin

richard edwin

manapparai
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
வாசு

வாசு

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (467)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
சிவா

சிவா

Malaysia
krishnan hari

krishnan hari

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (469)

user photo

Nijanthan

coimbatore
Senthil-Sk

Senthil-Sk

Dharapuram

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே