richard edwin - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : richard edwin |
இடம் | : manapparai |
பிறந்த தேதி | : 05-Feb-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 121 |
புள்ளி | : 21 |
உன் கண்களின் வழியாக
காதல் என்னும் ஊரிலே
கற்பனை என்னும் தெருவிலே
எனக்கு கிடைத்தது
கவிதையின் வீட்டு முகவரி...
என் காதல் எழும் காதல்
விழும் காதல் கரைந்த காதல்
காற்றோடு பேசும் காதல்
கார்காலம் தெறிக்கும் காதல்
கண்மணி கடக்கும் காதல்
தேடிப்பாதம் பிடிக்கும் காதல்
மூச்சொன்று முளைக்கும் காதல்
நாணமொன்று நடக்கும் காதல்
நடுவானின் வெண்ணிலா காதல்
காலையில் உதித்து
மாலையில் உதிர்ந்து
நடுவில் கொஞ்சம் ஒளிரும் காதல்
கண் நட்ட விதை ஒன்று
மனமென்ற மண்ணில் முளைத்து
பார்வை என்ற பனிப்பூவை
பகலில் தூவி சென்று
வண்ணம் தெறிக்கும் பனிப்பூவை
எண்ணம் நிறைக்கும் கண்ணோடு
திண்ணம் கனவில் கரையும் காதல்
முகவரி:
A.Richard Edwin
Department of Mechanical,
psna college of engineering and technology,
kothandar
அன்புக் கடலில்
காதல் தேவனின்
ஆனந்தக் கல்வெட்டு
தீவினிலே...
இமைகளால் அலங்கரிக்கப்பட்டு
ஸ்வரங்களால் மீட்டப்பட்ட
எண்ணிக்கையில் அடங்காத
சொப்பனக் கூடாரங்கள்.
காதல் காற்றில்
வண்ணக் கனவுகளின்
வாலிப துள்ளல்கள்.
மின்னல் தூளிகளில்
மயக்கும் மெத்தைகள் - அதில்
மயிலிறகு போர்வைகள்.
பாசக் குயில்களின்
நேசிக்கும் நெஞ்சங்களில்
நித்தமும் பொழிகிறது
நிலா மழை.
வார்த்தைகள் பின்னும் பூக்கள்
வண்ணங்களோடு , நாணத்தையும்
சேர்த்தே சிந்துகிறது.
உதிர்ந்த வார்த்தைகளை எடுத்து
ஆசை நூலில் அழகாய்
கோர்க்கிறது தென்றல்.
கனவு குதிரைகளின்
காலடி தடங்களில்
களவு சொற்களின்
கவிதை திருவிழா.
தீவின
வாடிவாசலை திறக்க
பலகோடி கைகள் கோர்க்க
எட்டுத்திசை எங்கும் எழுந்தனவே
தமிழினத்தின் தன்மான கைகள்.
யார் தலைவர்?,யார் பொதுச்செயலாளர்?
என்கின்ற கட்சி கணக்கை
சொல்லி கொள்ளாமல்,
யார் நீ?,நீ யார்?
என்கின்ற வேற்றுமை கணக்கை
வெட்டியெறிந்து விட்டு,
நான்,நீ,நாம் தமிழர்கள்
என்ற இனமான கணக்கில்
தரணி முழுதும் கூட்டி,
பழமையான பண்பாட்டையும்
காலம் வென்ற கலாச்சாரத்தையும்
அழிக்க வந்த கூட்டத்தை
மிரள வைத்த கூட்டம் - என்
சிங்கத் தமிழ் கூட்டம் என்பதை
உரக்கச் சொன்னீர் உலகிற்கு!
காளையை மீட்டெடுத்த
புறநானூற்று முத்துக்களே!
தமிழின வெற்றியின் தடைக்கற்களை
தடம்புரள செய்வீர்!
வேற்றுமை வேதம் ம
தற்பொழுது இந்தியாவில் மதம் என்ற வார்த்தை அதிகமாக பேசப்பட்டு வருகிறது.காரணம் என்னவென்றால் தன்னுடைய மதத்தை பரப்புவதற்கு அல்லது வளர்பதற்கு பல்வேறு யுத்திகளை அந்தந்த மதத்தை சேர்ந்தவர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.
மதம் என்றால் என்ன?,மதம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது?,தோற்றுவிக்க காரணம் என்ன?,அதன் செயல்பாடு என்ன?,அதன் சேவை என்ன?.இன்னும் பல கேள்விகள் நமக்குள் எழுகின்றன.
இது ஒருபுறம் இருக்க மதத்தை பரப்பி அல்லது மதத்தை வளர்த்து,அதனை செயல்படுத்த அவசியம் என்ன?.ஏன் எந்த மதத்தையும் சாராமல் இந்தியாவில் வாழ முடியாதா? அல்லது உலகில் வாழ முடியாதா?.
நம் இந்திய பல மாநிலங்களாக பிரிக்கப்பட்டு இருக்கிறது.அது எவ்வா
கல்யாணம் கொண்டால்
கருத்தரிப்பது நீ....
காதல் கொண்டால்
கருத்தரிப்பது நான்....!
புரியவில்லையா பெண்ணே.....
என் கை பிடித்தால்
உன்னில் பிறப்பது
புவி குழந்தை...!
உன் மெய் பிடித்தால்
என்னில் பிறப்பது
கவி குழந்தை...!
நீ பிரசவித்தால்
அது நம் குழந்தை...!
நான் பிரசவித்தால்
அது என் குழந்தை...!
போதும் பெண்ணே....
காதலை கைவிட்டு
கரத்தை பிடித்து விடு...!
என் சிரத்தில்
கவி கருதரிப்பதை
நிறுத்திவிடு..!
------------------------------
குறிப்பு: தோழர் நாகூர் கவியின் "காதல் பிரசவம்" கவிதையில் "பிரசவித்தாய்" என்ற வார்த்தை படித்தபோது பிறந்த கவிதை.