நா கூர் கவி - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  நா கூர் கவி
இடம்:  தமிழ் நாடு
பிறந்த தேதி :  26-Dec-1980
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Aug-2013
பார்த்தவர்கள்:  12759
புள்ளி:  10410

என்னைப் பற்றி...

பிறந்த மண்
நாகூர் கரை
புகுந்த மண்
நாடறிந்த காரை...

கவிஞர்கள் எனை
கவி என்றே
செல்லமாக அழைப்பார்கள்...

நாகூரும் கவியும்
இணைந்ததால்
நான் நா "கூர்" கவியானேன்...

பல பொழுதுகள்
கற்பனையில்
கண்டதை
கண்டபடி கிறுக்குவேன்...

சில பொழுதுகள்
கற்பனை கடலில்
காதல் கப்பலில்
நினைத்தபடி பயணிப்பேன்...

ஒரு பொழுது
கவி பயணத்தை நிறுத்திவிட்டு
புவி பயணத்தை தொடருவேன்....

மறுபொழுது
புவி பயணத்தை நிறுத்திவிட்டு
கவி பயணத்தை தொடருவேன்....

இப்படியே மாறி மாறி
என் பொழுதுகள்
நகர்ந்து கொண்டிருக்கும்...

இப்பொழுது
அப்பொழுதுப்போலில்லாமல்
எப்பொழுதும் எழுத்து இணையத்தில்
உலா வருகிறேன்....

எழுத்து மீது விசுவாசம் கொண்டு
எழுத்து வசம் வந்தேன்....
எண்ணற்ற தோழர்கள்
என்னை வாசமாக்கினார்கள்....
அவர்களது அன்பால்
என்னை வசமாக்கினார்கள்....!

அன்புடன்

நாகூர் கவி.












என் படைப்புகள்
நா கூர் கவி செய்திகள்
நா கூர் கவி - நா கூர் கவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Nov-2016 7:06 pm

இராப் பகலு பாராம
சேத்துல நா கால் வச்சேன்
நீங்க வருஷமெலாம்
சோத்துலதான் கை வைக்க...

பொழுதெல்லாம் அந்த
வயலுலதான் நா கெடந்தேன்
பட்டினியால் அழுவாம
தேசத்த நாங் காத்தேன்...

அயல்நாட்டு படிப்பெல்லாம்
நீங்க நல்லாதான் படிச்சிங்க
எங்க நிலப்பரப்ப பாக்காம
சேர்ந்து எல்லோரும் நடிச்சிங்க...

வெவசாயம் முதுகெலும்பு
நமக்குன்னு சொன்னீங்க
வெவரம் பத்தாம முதுகெலும்ப
திக்கொன்னு சுக்குநூறா ஒடச்சிங்க...

கிராமத்து சுத்த காத்தேயும்
நரகப் புகையால ஏனோதான் கெடுத்தீங்க
சிட்டென்ற இனத்தையே அழிக்கதான்
செல்போனு டவரிங்கு கொடுத்தீங்க...

தண்ணீரைதான் காசாக்க பாக்குறீங்க
எங்கண்ணீரையும் தூசாக்கி போகுறீங்க

மேலும்

அழகான வரி நண்பரே வாழ்த்துக்கள்...விவசாயம் தன் சாயத்தை இழந்து விலாசம் தெரியாமல் போய்விடுமோ.... 12-Apr-2017 6:40 pm
முத்திரை பதிக்கிறீர் . 27-Mar-2017 2:13 pm
கவிதை வயலில்-நீர் செய்த விவசாயம் விவசாய விசுவாசம் விவசாயமில்லையேல் விட்டு ஓடும் சுவாசம்! கவியே அபாரம்! 26-Feb-2017 1:33 am
நா கூர் கவி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2016 7:06 pm

இராப் பகலு பாராம
சேத்துல நா கால் வச்சேன்
நீங்க வருஷமெலாம்
சோத்துலதான் கை வைக்க...

பொழுதெல்லாம் அந்த
வயலுலதான் நா கெடந்தேன்
பட்டினியால் அழுவாம
தேசத்த நாங் காத்தேன்...

அயல்நாட்டு படிப்பெல்லாம்
நீங்க நல்லாதான் படிச்சிங்க
எங்க நிலப்பரப்ப பாக்காம
சேர்ந்து எல்லோரும் நடிச்சிங்க...

வெவசாயம் முதுகெலும்பு
நமக்குன்னு சொன்னீங்க
வெவரம் பத்தாம முதுகெலும்ப
திக்கொன்னு சுக்குநூறா ஒடச்சிங்க...

கிராமத்து சுத்த காத்தேயும்
நரகப் புகையால ஏனோதான் கெடுத்தீங்க
சிட்டென்ற இனத்தையே அழிக்கதான்
செல்போனு டவரிங்கு கொடுத்தீங்க...

தண்ணீரைதான் காசாக்க பாக்குறீங்க
எங்கண்ணீரையும் தூசாக்கி போகுறீங்க

மேலும்

அழகான வரி நண்பரே வாழ்த்துக்கள்...விவசாயம் தன் சாயத்தை இழந்து விலாசம் தெரியாமல் போய்விடுமோ.... 12-Apr-2017 6:40 pm
முத்திரை பதிக்கிறீர் . 27-Mar-2017 2:13 pm
கவிதை வயலில்-நீர் செய்த விவசாயம் விவசாய விசுவாசம் விவசாயமில்லையேல் விட்டு ஓடும் சுவாசம்! கவியே அபாரம்! 26-Feb-2017 1:33 am
நா கூர் கவி அளித்த எண்ணத்தை (public) முத்துகிருஷ்ணன்-ராமச்சந்திரன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
10-Oct-2016 12:17 pm

நலமா...?

மேலும்

நம்பிக்கையின் யதார்த்தம் .. 15-Feb-2017 6:49 pm
நம்பிக்கையான வரிகளுக்கு நன்றி - மு.ரா. 19-Oct-2016 6:44 am
வாழ்த்துக்கள், தொடருங்கள். 12-Oct-2016 6:51 am
ஆஹா... விழுவதும் அழுகுதான்.. கவியே வருக.. விழுக.. எழுக.! இல்லையில்லை. எழுதுக..!! 11-Oct-2016 3:59 pm
நா கூர் கவி - எண்ணம் (public)
10-Oct-2016 12:17 pm

நலமா...?

மேலும்

நம்பிக்கையின் யதார்த்தம் .. 15-Feb-2017 6:49 pm
நம்பிக்கையான வரிகளுக்கு நன்றி - மு.ரா. 19-Oct-2016 6:44 am
வாழ்த்துக்கள், தொடருங்கள். 12-Oct-2016 6:51 am
ஆஹா... விழுவதும் அழுகுதான்.. கவியே வருக.. விழுக.. எழுக.! இல்லையில்லை. எழுதுக..!! 11-Oct-2016 3:59 pm
நா கூர் கவி - நா கூர் கவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Oct-2016 11:57 pm

முழங்கால் முடக்கம்
இவருக்கன்று
முயற்சியின் உருவம்
இவர்தான் என்று
மூளைக்குள்ளே ஏற்றிடு தோழா
மூடர்முன்னே கூறிடு தோழா...

கடின உழைப்பு மூலதனம்
கண்டும் போனால் மூடத்தனம்
காணொளி சொல்லும் பாடம் தினம்
கருத்தில் கொள்வாய் நீயும் தினம்...

ஊனமென்று ஒருபோதும் சொல்லாதே
ஊக்கத்திற்கு தடைபோட்டு நில்லாதே
உதவாக்கரை சொல் என்றும் கல்லாதே
ஊனச்சொற்கள் எவரையும் வெல்லாதே...

வாழ்வில் விளக்கினை ஏற்றிட பாரு
வாழ்வும் விளக்கி ஏற்றிடும் பாரு
முட்டுக்கட்டை போடுவது யாரு
முடிந்தால் அதனை போட்டிடு கூறு...

உலகை மாற்றிடும் திறமைகள்
பற்பல கொண்டவர் மாற்றுத்திறனாளி
உவந்து படித்து இதை நீ அறிந்தால்
கற்றவர் ம

மேலும்

கவிதை பாடல் வரிகளாக ஜொலிக்கிறது அருமை வாழ்த்துக்கள் 30-Apr-2017 3:56 pm
மிக அருமை கவியாரே வாழ்த்துக்கள் 24-Oct-2016 4:47 pm
அருமை, பாராட்டுக்கள் 12-Oct-2016 7:02 am
உண்மைதான்..வாழும் வாழ்க்கையை முழுமையாக வாழ நினைத்தாலே குறைபாடுகள் உடைய மனிதனும் முழுமையடைந்த நிலையில் ஆயுள் கடப்பான்..வாழ்க்கை இது தானா என்று சலித்து வாழ்பவன் எல்லாம் இருந்தும் மனதில் குறைகள் ஆயிரங்கள் சேமித்து வாழ்க்கையை முடிப்பான் 06-Oct-2016 12:06 am
நா கூர் கவி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Oct-2016 11:57 pm

முழங்கால் முடக்கம்
இவருக்கன்று
முயற்சியின் உருவம்
இவர்தான் என்று
மூளைக்குள்ளே ஏற்றிடு தோழா
மூடர்முன்னே கூறிடு தோழா...

கடின உழைப்பு மூலதனம்
கண்டும் போனால் மூடத்தனம்
காணொளி சொல்லும் பாடம் தினம்
கருத்தில் கொள்வாய் நீயும் தினம்...

ஊனமென்று ஒருபோதும் சொல்லாதே
ஊக்கத்திற்கு தடைபோட்டு நில்லாதே
உதவாக்கரை சொல் என்றும் கல்லாதே
ஊனச்சொற்கள் எவரையும் வெல்லாதே...

வாழ்வில் விளக்கினை ஏற்றிட பாரு
வாழ்வும் விளக்கி ஏற்றிடும் பாரு
முட்டுக்கட்டை போடுவது யாரு
முடிந்தால் அதனை போட்டிடு கூறு...

உலகை மாற்றிடும் திறமைகள்
பற்பல கொண்டவர் மாற்றுத்திறனாளி
உவந்து படித்து இதை நீ அறிந்தால்
கற்றவர் ம

மேலும்

கவிதை பாடல் வரிகளாக ஜொலிக்கிறது அருமை வாழ்த்துக்கள் 30-Apr-2017 3:56 pm
மிக அருமை கவியாரே வாழ்த்துக்கள் 24-Oct-2016 4:47 pm
அருமை, பாராட்டுக்கள் 12-Oct-2016 7:02 am
உண்மைதான்..வாழும் வாழ்க்கையை முழுமையாக வாழ நினைத்தாலே குறைபாடுகள் உடைய மனிதனும் முழுமையடைந்த நிலையில் ஆயுள் கடப்பான்..வாழ்க்கை இது தானா என்று சலித்து வாழ்பவன் எல்லாம் இருந்தும் மனதில் குறைகள் ஆயிரங்கள் சேமித்து வாழ்க்கையை முடிப்பான் 06-Oct-2016 12:06 am
குமரிப்பையன் அளித்த படைப்பை (public) கோப்பெருந்தேவி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
16-Aug-2016 9:18 am

பல அடுக்கு பாதுகாப்பு
நாட்டின் மூலையெல்லாம்...
கோலகாலமாய் என்
நாட்டின் சுதந்திர தினம்.!

கமண்டோ கண்காணிப்பில்
நட்டு வைத்த கம்பத்தில்...
கட்டவிழ்க்கபட்டது என்
நாட்டு தேசியகொடி.!

குண்டு துளைக்காத
முச்சுவருக்குள் நின்று...
பேசபட்டது என் நாட்டு
சுதந்திர உரை.!

வானத்தில் பறக்கிறார்
பார் காண என் பிரதமர்...
கடன் வெள்ளத்தில்
மிதக்கிறது என் பாரதநாடு.!

கார்ப்பரேட்டுகளுக்கு இங்கு
கார்ப்பெட் விரிப்பு....
சுமக்கிறேன் என் முதுகில்
வரிகளை.. வலிகளோடு..!

கோடிகடனாளி வெளிநாடு ஓட
என் சிறுகடன் விவசாயி...
உள்ளறையில் ஓடுகிறான்
சுருக்கு கயிற்றை தேட..!

மாதாவின் பெயர் கூவி
மனிதர்க

மேலும்

உணர்வுபூர்வமான வரிகள் 22-Mar-2019 9:05 pm
வாசித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் தோழமையே.! 16-Oct-2016 12:03 pm
உணர்வு மிகுந்த கருத்துக்கள். அழகான ஆழமான பதிவு 15-Oct-2016 6:03 pm
கருத்தை பதித்தமைக்கு நன்றிகள் தோழமையே.! 13-Oct-2016 9:30 am
நா கூர் கவி - செல்வா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Aug-2016 11:53 pm

வரையாத ஓவியங்கள்
வடியாத கவிதைகள்
என உள்ளன
பல காகிதங்கள்

வடிந்தபபின்னும்
வடிக்காவிடினும்
தேவையில்லை எனின்
குப்பையாகக்
கசக்கிய காகிதங்கள்

வடிந்தவை வலுவற்றது
எனில் கருத்துகள்
வலம் வரும்
காகிதக் கப்பல்கள்

வாசம் வீசும் வார்த்தைகள்
வாழ்வில் வசந்தம் வீசாவிட்டால்
அந்த காகிதங்கள்
காகிதப் பூக்கள்தான்

காதல் நனைந்தக் காகிதங்கள்
உணர்வுகள் உறைந்தக் காகிதங்கள்
கனவுகள் கற்பனைகள் கலந்தக் காகிதங்கள்
பக்கங்கள் மட்டும் நிரம்பும் காகிதங்கள்
பல காகிதங்கள் என் மனப் புக்கத்தில்
இன்றும் நிரம்பா வெள்ளைக் காகிதங்கள்

- செல்வா
பி.கு: கவிதைமணி இந்த வாரம் வந்துள்ளது

மேலும்

நன்றிகள் - செல்வா 04-Aug-2016 12:21 am
எண்ண காகிதம் காவியம் எழுத்தில் காகிதம் ஓவியம் 04-Aug-2016 12:07 am
agan அளித்த எண்ணத்தில் (public) manoranjan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
10-Oct-2015 9:21 am

தோழமைகளுக்கு வணக்கம்

18.10.15 அன்று நம் குடும்ப விழா சென்னையில் சிஐடி காலனி , கவிக்கோ அரங்கில் மாலை 4 மணிக்கு நடைபெறும் . அழைப்பிதழ் அனுப்பிட முகவரி இல்லாததால் இவர்களுக்கு செய்தி பகிர தோழமைகள் வேண்டற்படுகிறார்கள்.:

அனுசரண் 
அருள்மதி
கொங்குதும்பி 
அனுசரண் 
வெ.கண்ணன் 
தனராஜ் 
மின்கவி 
புதல்வன் 
செந்தேள்
அமிர்தா 
தீபக் பாஸ்கர் 
ஒருவன் 

அனைவரும் சுற்றம்நட்பு சூழ வருக தமிழ்ப்பால் பருக ...

காத்திருக்கும் அகன்

மேலும்

தமிழமுதம் உண்ண அடியேனும் வருகிறேன்... முடிந்தவரையில் நட்புக்களுக்கு முன்னரே அறிவித்துவிட்டேன்... நன்றி அகனாரே... 11-Oct-2015 12:06 am
அனைவரும் சுற்றம்நட்பு சூழ தமிழ்ப்பால் பருக வருகிறோம் அழைப்புக்கு நன்றி 10-Oct-2015 3:14 pm
உள்ளேன் அய்யா 10-Oct-2015 12:09 pm
agan அளித்த எண்ணத்தில் (public) kayal vilzhi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Aug-2015 7:43 pm

உதவுங்களேன்.......


இவர்களுக்கு தெரியப்படுத்துங்களேன் ...எவராவது.....(என்னால் அதிகம் தட்டச்சு செய்ய இயலவில்லை
.சிரமத்திற்கு மன்னிக்கவும்)

விருது பெறுவோர் தத்தம் முகவரி, புகைப்படம் உடன் அனுப்புக. என் சுயவிவர பக்கத்தில் என் மின்னஞ்சல் முகவரி காண்க. விரைவு விழைவு.

மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது பெறுவோர்:

விருதாளர்கள் : 

 தோழர்கள் ,
கவிதை அனுசரண்
மொழிபெயர்ப்பு
நாதன்மாறா

(

மேலும்

தகவலுக்கு நன்றி. நாளை மறுதினம் அனுப்பி விடுகிறேன். 04-Oct-2015 10:01 am
சரி.நல்ல வரிகளை மீட்டெடுத்து எழுத வேண்டாம் .காலத்தை மிச்சப்படுத்தும் எண்ணம். விரைவு விழைவு 02-Oct-2015 9:25 pm
எனது நிழல் படமும் முகவரியும் மின்னஞ்சலில் அனுப்பி விட்டேன். ஆய்வுரையில் சிறு குழப்பம். நான் எதுவும் எழுத வேண்டாம். குறியிட்டால் மட்டும் போதும் என எழுதியுள்ளீர்கள். அதேவேளையில் பக்க வரையறை கிடையாது எனவும் எழுதியுள்ளீர்கள். விளக்கி விடுங்களேன். மேலும் 6 அக்டோபர் வரை கால அவகாசம் தாருங்களேன். 02-Oct-2015 6:22 pm
பயன் கருதா பணியாற்றுபவன் பாதங்களை நோக்கி பாராட்டே அழகுமிகு பாதையாகும்...... 11-Aug-2015 6:39 pm
நா கூர் கவி - agan அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Aug-2015 8:38 am

5ஆம் தொகுப்பில் இடம் பெறுவோர் ,விருது பெறுவோர் தத்தம் முகவரி, புகைப்படம் உடன் அனுப்புக. என் சுயவிவர பக்கத்தில் என் மின்னஞ்சல் முகவரி காண்க. விரைவு விழைவு.

மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது பெறுவோர்:

விருதாளர்கள் :

தோழர்கள் ,
கவிதை

பழனிகுமார்
சுசிந்திரன் ,
லம்பாடி ,
அனுசரண்
கவிதாசபாபதி ,
பாட்டாளி புத்திரன் ருத்ரா ,
சர்நா ,
ராம் வசந்த் ,
தாகு ,
ஜின்னா ,
சேயோன் ,
கிருஷ்ணதேவ் ,
சுந்தரேசன் புருஷோத்தமன்
மனோபாலா
வெள்ளூர் ராஜா ,
கிருத்திகாதாஸ் ,
நாகூர் கவி ,
(...)

மேலும்

மிக்க நன்றி ஐயா..விழாவில் பங்கேற்று நண்பர்கள் அனைவரையும் நேரில் காணும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். விழா நாள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளிவந்தால் என்னைப் போன்ற தூரத்து இடங்களிலிருந்து வரும் நண்பர்களுக்கு டிக்கெட் ரிசெர்வேஷன் செய்ய வசதியாக இருக்கும். பங்களிப்புத் தொகை மற்றும் கோரப்பட்டிருக்கும் தகவல்களை விரைவில் அனுப்பி விடுகிறேன். விழா இனிதே நடந்தேற வாழ்த்துக்கள் .. 09-Aug-2015 5:26 pm
மிகவும் நன்றி சார் மக்கள் தொண்டு, மகேசன் தொண்டு என்று சொல்வர் சிலர். அகன் அவர்களின் தொண்டு, அகிலமே போற்றும் தொண்டு. வாழ்த்துக்கள் அகன் சார். வாழ்க பல்லாண்டு நலமுடன். 09-Aug-2015 5:06 pm
ஆவலுடன்......... விழாவிற்கு காத்திருக்கிறோம். 5 ம் தொகுப்புக்கு படைப்பை தேர்ந்தெடுத்தமைக்கும். எனது படைப்பாக்கத்திற்கான முதல் விருதுக்கு தேர்வு செய்தமைக்கும் மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன். விரைவில் 5 ம் தொகுப்புக்கான பங்களிப்பு தொகையுடன் மின் அஞ்சல் அனுப்புகிறேன் அய்யா . நன்றி நன்றி 09-Aug-2015 4:34 pm
பனிக்கும் ஓய்வுண்டு தங்கள் பணிக்கு ஓய்வில்லை... விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள்...! 09-Aug-2015 1:04 pm
நா கூர் கவி - எண்ணம் (public)
09-Jun-2015 7:49 pm

வரலாறு படைத்த வரலாறு - குஞ்சாலி மரைக்காயர்

பேராசிரியர் டாக்டர் நாகூர் ரூமி


சாத்தானுக்குப் பல பெயர்கள் உண்டு. அதில் ஒன்று வாஸ்கோடகாமா. ஆமாம். வாஸ்கோடகாமா போர்ச்சுக்கலில் இருந்து முதன்முறையாக இந்தியாவுக்குக் கடல் மார்க்கத்தைக் கண்டுபிடித்தார், கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் இறங்கினார் – இப்படித்தான் பள்ளிக்கூட சரித்திர நூல்களில் படித்திருக்கிறோம். ஆனால் உண்மையான வரலாறு வேறுவிதமான முகத்தைக் காட்டுகிறது.

கடல்வழிகாணுதல், வாணிபமெல்லாம் அவனுக்கு கொசுறு நோக்கங்கள்தான். நாடுபிடிப்பதும், போர்ச்ச (...)

மேலும்

குஞ்சாலி மரைக்காயர் வீர தீர தியாகங்கள் ஓரளவு அறிந்ததுண்டு தெளிவாக முழுமையாக அறிய முடிந்தது உங்கள் பகிர்வால்! ரூமி சாருக்கு நீண்ட ஆயுள் கிடைக்க துஆச் செய்வோம், இன்னும் பல எழுத்துக்களை அவர் இச்சமுதாயத்திற்கு படைத்தளிக்க வேண்டும்! வாழ்த்துகள் இருவருக்கும்! 10-Jun-2015 9:53 am
மிக சிறந்த பதிவு... பல நல்ல வரலாற்று விசயங்களை சொல்லி விட்டு போகிறது பதிவு... இதை கட்டுரை பக்கத்திலேயே சேர்க்கலாமே... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 10-Jun-2015 12:09 am
நன்றி நன்றி நன்றி .......... 09-Jun-2015 10:05 pm
ஹ....ஹ..... சரி சரி ...அது பொய் ஒரு போதும் ஆயுதத்தால் அக்கால கட்டத்தில் விடுதலை பெற்றிருக்க முடியாதே நள்ளிரவில் சுதந்தரம் எனும் பெரிய நூல் வாங்கி வாசித்தால் இன்னும் பல செய்திகள் அறிய வருவாய் 09-Jun-2015 10:00 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2000)

மு கா ஷாபி அக்தர்

மு கா ஷாபி அக்தர்

பூவிருந்தவல்லி , சென்னை .
விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.

இவர் பின்தொடர்பவர்கள் (2780)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
manojk172

manojk172

coimbatore

இவரை பின்தொடர்பவர்கள் (2780)

user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்
Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே