மங்காத்தா - சுயவிவரம்

(Profile)தமிழ் பித்தன்
இயற்பெயர்:  மங்காத்தா
இடம்:  Delhi
பிறந்த தேதி :  01-Jan-1970
பாலினம்
சேர்ந்த நாள்:  25-Aug-2012
பார்த்தவர்கள்:  5169
புள்ளி:  1829

என்னைப் பற்றி...

தில்லியில் குறைந்த செலவில் சிறந்த முறையில் புத்தகப் பிரசுரம், தமிழ் ஆங்கிலம் ஹிந்தி மொழிபெயர்ப்புகள் பணிகளை விரைவாகச் செய்து கொள்ள அணுகலாம்.

எழுத்து உறுப்பினர்கள் தங்களது படைப்புகளை புத்தகமாக வடிவமைத்துப் பிரசுரமாக்க, குறைந்த பிரதிகள் மற்றும் குறைந்த செலவிற்கான பணிகளுக்கும் அணுகலாம்.

என் கணக்கு போன்றே இருக்கும் எந்தவொரு போலி கணக்கையும் பார்த்து ஏமாந்து விடவேண்டாம் (எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை)

தொடர்புக்கு மங்காத்தா 8010204152

உயிரோட்ட தொடர்புக்கு mangaaththa @ gmail . com
தமிழில் பதிந்துரையாடலாம் (online chat in tamil)

இந்த தளத்தை உபயோகிக்கும் அனைத்து நபர்களுக்கும் (படைப்பாளிகள், ரசிகர்கள் (வாசகர்கள்), இதில் இருந்து நகல் எடுக்கும் நபர்கள், (மேற்கோளுக்காக) (திருட்டு விசிடி எனும் பொருளில் இல்லை) ஓர் அன்பான அழுத்தமான வேண்டுகோள்.

இந்த தளம் சில அரிய வசதிகளை கொண்ட பொதுச்சொத்து. ஒரு தமிழரின் உயர்ந்த நோக்கத்தில் தமிழர் சமூகத்திற்காக இலவசமாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அற்புத தளம்.

இதில் பதிவேற்றும் தங்களின் படைப்புகள் காப்புரிமை கொண்டதல்ல என்பதையும் தங்களின் படைப்புகள் திருட்டுக்கு உட்பட்டவை என்பதையும் எவர் வேண்டுமானாலும் நகல்-வெட்டு-ஒட்டு செய்து தமது பெயரை அவற்றில் பதித்து தமது படைப்புகளாக வேறு இடங்களில் பதிவிட்டுக் கொள்ளலாம் என்பதையும் உணர்ந்து செயல்படுக.

தயவுசெய்து தனது சுயநல போக்கிற்காக இதை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபடாதீர்கள். சொந்த விருப்பு வெறுப்புகளை பகிர்ந்து அரசியல் ஆதாயம் தேடும் ஒரு கூடமாக இந்த தளத்தை மாற்றி விடாதீர்கள்.

மேலும்....

சுயவன்மங்களை கணக்கு தீர்க்கும் செயல்களையோ, சொந்தக் கதைகள் காட்டி நியாயம் தேடி பிறரின் நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் செயல்களையோ தவிர்க்க வேண்டுகிறேன். பரபரப்புக்காக முரண்களை தமது எழுத்து மூலம் வளர்க்கும் பழக்கம் வேண்டாம்.

இது இன்பம் தரும் ஒரு பூஞ்சோலையாக என்றுமே திகழ எப்போதும் தங்களின் ஆதரவை தொடர்ந்து வழங்கி வாருங்கள்.

அனைவரும் ஒன்று கூடும் ஒரு தளமாக எப்போதுமே இதை வைத்திருக்க தங்களின் அனைவரின் ஒத்துழைப்பும் நற்செயல்களும் ஒவ்வொரு தருணத்திலும் தேவை என்பதை உணர்ந்து உலா வாருங்களேன்.

என் படைப்புகள்
மங்காத்தா செய்திகள்
மங்காத்தா - எண்ணம் (public)
01-Feb-2022 7:20 pm

இதே தளத்தின் புகழ் பெற்ற உறுப்பினர் காயத்ரி தேவி எழுதிய அழகிய காதல் கவிதைகளின் தொகுப்பு "தென்னங்கீற்றுகளின் சாட்சியாக" விரைவில் வெளி வர இருக்கிறது. விரும்புவோர் தொடர்பு கொள்ளவும். 

மங்காத்தா பதிப்பகம் - புது தில்லி - 8010204152

அழகிய வண்ணங்களில் காதல் ரசம் சொட்டும், காதல் உணர்வைத் தூண்டும் ரசனையான வரிகளால் ஆன, அனைவரும் அவசியம் வாங்கி படித்து இன்புற வேண்டிய காதல் கவிதை தொகுப்பு -"தென்னங்கீற்றுகளின் சாட்சியாக"

மேலும்

மங்காத்தா - கேள்வி (public) கேட்டுள்ளார்
22-Feb-2018 12:50 pm

மெய்மைகளில் (தத்துவங்கள்) இறை மறுப்பு பற்றி விவாதிக்கலாமா? வாருங்களேன்.

இல்லாத ஒன்றை இருப்பதாக கூற முடியாது எனும்போது இருப்பதை இல்லாததாக கூற இயலுமா? உதாரணம் இறை மறுப்பு. அறிவு சார் மெய்மைக் கூற்றுகளை எதிர்பார்க்கிறேன்.

மேலும்

மங்காத்தா - இதயம் விஜய் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Feb-2018 2:10 pm

1. சந்திரோதயம்
சந்திர உதயம் சந்திரவுதயம் என்று வர வேண்டுமல்லவா. ஏன் இப்படி என்று விளக்கம் தாருங்கள்.

2. சந்திரோவியம், சந்திரவோவியம்
இவற்றுள் எது சரி.

மேலும்

மிக்க நன்றி கவிப்பிரிய வைத்திய நாதன் 19-Mar-2018 6:40 pm
திரும்ப திரும்ப படிப்பேன் இந்த விளக்கம்....மனம் கவர்ந்த ஒன்று. 19-Mar-2018 5:42 pm
மனம் மலர்ந்த அன்பின் நன்றிகள் நண்பரே 19-Mar-2018 3:01 pm
நல்ல சிந்தனை 01-Mar-2018 1:54 pm
மங்காத்தா - ராஜ்குமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jan-2018 11:26 am

மனித வாழ்விற்கு தண்ணீர் கிடைப்பதற்கு இருண்ட காலம் ஏற்பட்டது. ஏன்?

மேலும்

அரசியல் வணிகமானதும். வணிகத்தில் அரசியல் புகுந்ததும் தான். வணிகர்கள் அரசை தமது கைக்குள் போட்டுக் கொள்ள லஞ்சம் கொடுக்க, அதை திருப்பி எடுக்க அரசியல் வாதிகளின்செல்வாக்கை பயன்படுத்தி வளங்களை சுரண்டும் வணிகமாக்க, அரசியல் வாதிகளோ தமது அதிகாரத்தை பணத்திற்கு விற்கும் வணிகமாக்க இந்த சூழலில் சுழலில் சிக்கி காய்ந்ததுதான் இந்த தண்ணீர். அத்னால் தனியார் மயமாக்கலால் தண்ணீர் வணிகப் பொருளாய் மாறி, அதன் வணிகத்திற்கு குந்தகம் வராமல் பார்த்துக் கொள்ள இருக்கும் நீர் வளங்களை எல்லாம் மாசுபடுத்தினால்தான் நீரை விற்கலாம் எனும் நோக்கம் பெருக, சூழல் நீரை மாசுப்படுத்தி, குடிநீரை விற்கத் தொடங்கினர். 27-Jan-2018 12:21 am
அடுத்த தலைமுறை மீது அக்கறையில்லாத அறிவீனம்! பணம் பணம் என்ற பேராசை! இவ்விரண்டாலும் நடக்கும் காடழிப்பு,மலையழிப்பு,ஆற்றுமண் சுரண்டல். ஓட்டைப் பற்றி மட்டும் நினைத்து நாட்டை நடத்தும் அரசியல்! இதனால்,புதிய அணைகள்,தடுப்பணைகள் கட்டாமை,பெய்யும் மழைநீரைத் தேக்காமை! இதற்கு நம்மாலான கைங்கர்யம், வீட்டைச் சுற்றிச் சிமிண்ட் தளம் அமைத்து மழைநீர் உள்ளே இறங்காமல் செய்தமை! ஆளுக்கொரு வாகனம் வைத்திருத்தல்! சோம்பேறித்தனத்தால்,தொட்டிகளில் துளசி கூட வளர்க்க மனமற்றிருத்தல்! நவீன கண்டுபிடிப்புகள்,நுகர்வுக் கலாச்சாரத்தால்,மின்னணுச் சாதனங்களின் பெருக்கம்! அதனால் மிகுந்த புவி வெப்பம்,வளி மாசு,ஓசோன் ஓட்டை. 23-Jan-2018 1:07 pm
மங்காத்தா - ராஜ்குமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jan-2018 9:06 am

அரசன் பிரித்து எழுது

மேலும்

அ+ரசன் அதாவது ரசனை இல்லாதவன். சத்தியம், அசத்தியம். சாத்தியம், அசாத்தியம் என்பதுபோல, ரசன் - ரசனை உள்ளவர்ன். அ ரசன் ரசனை இல்லாதவன். எப்பூடீ..... கிகீகிகீகிகீ 27-Jan-2018 12:15 am
பிரிப்பதென்றே முடிவெடுத்தால் என்ன செய்வது ?அறம் சார்ந்து ஆட்சி செய்பவன் அரசன். பின்னாளில் அறம் சார் அரசார் என்று வந்து இறுதியில் அரசன் என்று வந்திருக்குமோ. இது வெறும் ஊகம் மட்டுமே!! சரி... இனிக் கொஞ்சம் சேர்த்தெழுத சொற்கள் கொடுங்கள் 24-Jan-2018 11:58 pm
மங்காத்தா - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jan-2018 7:21 pm

எழுத்துத்தள கவிஞர்கள் எல்லோருக்கும் வணக்கம்.

"ஆறுவது சினம்" எனும் தலைப்பில் ஒரு நூறு சொல்லுக்கு பேச்சு எழுதுங்க பாப்போம்

மேலும்

நாலு வரி சொல்லுதுக்கே இங்கே ஆட்கள் குறைவு . நூறு என்ன கணக்கு சர்பான் ? 1 ஆறுவது சினம் சொன்னது அவ்வை 2 தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு ---சொன்னது வள்ளுவர் 3 ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு சொன்னது கண்ணதாசன் 4 ஆறு முகக் கடவுள் முருகன் எல்லோரும் அறிந்தது . 5 ஆறு அலையோடு பாய்ந்தால் அழகு ஆறு ஆற்றலோடு பாய்ந்தால் வெள்ளம் --இது ஆற்றுச் சினம் 6 சினம் கொண்டு எதிர்த்த நக்கீரரை எரித்தான் சிவபெருமான் . ஆறு தலை கொண்ட இறைவன் நெற்றி விழியால் நெருப்பு கக்கிய சினம் இது . சின வடு ஆறிட திருமுருகாற்றுப் படை பாடி மீண்டு வந்தான் கவிஞன் . 7 அணைத்து ஆறுதல் சொல்வது அன்னை வழி . 8 ஆறு அந்தகர்கள் ஆனை தொட்டு அடையளப் படுத்திய கதை உபநிடதத்தில் உள்ளது வாலைப் பிடித்தவன் கயிறென்றான் . தும்பிக்கையைப் பிடித்தவன் பாம்பென்றான் காலைப் பிடித்தவன் தூணென்றான் . வயிற்றைத் தொட்டவன் சுவர் என்றான் காதைத் தொட்டவன் முறம் என்றான் கொம்பைப் பிடித்தவன் என்ன சொன்னானோ ? --ஆறு ஆறுவது ஆறுதல் என்ற முப்பொருளில் சொன்னோம் . அம்புட்டுதான் நம்ம கணக்கு . 01-Feb-2018 10:39 pm
சின்னம்ம்! = சின்னம்மா 27-Jan-2018 12:12 am
சினம் இதை நீட்டித்தால் அது சீனம். அழுத்தினால் அது சின்னம். குறுக்கினால் அது சின. எழுப்பினால் (கேள்வி) அது சினமா? அழுத்தி எழுப்பினால் அது சின்னம்ம்! இவற்றில் ஆறுவது சினம் என்று இருந்தால்.ஆறாதது எதுவென கேள்வி எழும். சினம் ஆறுவது என்றால் ஓடுவது எது எனும் கேள்வியும் எழும். பாதி ராவுல (raw வுல) உட்கார்ந்து தட்டச்சு செய்தாலே இப்பிடித்தான் கன்னா பின்னான்னு எதனாச்சும் வந்திருது. தூங்கி எழுந்திருச்சி அப்புறமா தட்டச்சு செஞ்சி சொல்லுதேங்.... சரியா...? 27-Jan-2018 12:11 am
இறுதியில்,சினத்தைக் கொல்லும் கருவிகளாம் என்பதோடு,என்பதில் ஐயமில்லை என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்! 25-Jan-2018 12:27 am
மங்காத்தா - எண்ணம் (public)
29-Dec-2017 12:27 am

தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை.

டிசம்பர் 2017 தமிழருக்கான மாதமாக அறிவிக்கப்பட்டது நாடு ஒன்றால்

மேலும்

மங்காத்தா - கேள்வி (public) கேட்டுள்ளார்
29-Dec-2017 12:21 am

அதிர்ஷ்டவசம் என்பது
அதிர்ஷ்டம், என்பதன் தொடர்ச்சி
அதிர்ஷ்டம் என்பது
திருஷ்டம், திருஷ்ய, திருஷ்யம், என்ற சொற்குடும்பத்திற்குள்ளானது.

திருஷ்ய, திருஷ்டி, என்றால் பார்வை, பார்த்தது எனும் பொருள் படும்,
இத்துடன் அ முன்சேர்க்கை கொள்ள, அதன் பொருள் எதிர்ப்பதம் தரும்.
சத்தியம், அசத்தியம், சாத்தியம், அசாத்தியம் என்பதுபோல.

அப்படியெனில், திருஷ்ய, திருஷ்டம் இவையுடன் அ சேர்த்தால்ல் அதிருஷ்ய, அதிருஷ்டம் என்று வரும்.
பார்த்த - பாராத,
எதிர்பார்த்த, எதிர்பாராத

திர்ஷ்டம் - அதிர்ஷ்டம்

பார்த்த, பாராத
அதிர்ஷ்டம் இதற்கு எதிர்ப்பதம், 'அ;வை எடுத்து விட்டால் வரவேண்டும்தானே?
ஆனால் எதிர்ப்பதம் திடீர்

மேலும்

தமிழ் இன்னும் திராவிடத்தில் சிக்கித் திணறுவதால் அதையே தமிழ் என்று குறிப்பிட்டு தமிழில் ஐயம் என்றேன். இதையே ஐயாம் (I am ) என்று இருந்தால் அது ஆங்கிலமாகி இருக்கும் அல்லவா? ஹிஹிஹிஹி... தெளிவாக குழப்புகிறேன் என நினைக்கிறேன். இப்போது நிறைய மொழிபெயர்ப்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் இது போன்ற குழப்பங்கள் வந்து போவது இயல்பாக உள்ளதால் அவ்வப்போது இது போன்ற பதிவேற்றங்களை தொடர்வேன் என நம்பலாம். 05-Jan-2018 10:03 am
தொடர்ந்து ....... "அப்படியெனில், திருஷ்ய, திருஷ்டம் இவையுடன் அ சேர்த்தால்ல் அதிருஷ்ய, அதிருஷ்டம் என்று வரும். பார்த்த - பாராத, " அகலிகைகைக்கு அவள் கணவன் கௌதம முனிவன் வேடத்தில் வந்து புணர்ந்து தீங்கிழைக்கிறான் இந்திரன். உண்மையறிந்த முனிவன் இந்திரனையும் சபித்து மனத்தால் மாசற்ற தன் தரும பத்தினியையும் பிறர் கண்ணுக்கு காணாமல் போகக் கடவாய்-- அதிருஷ்ய என்றுதான் சபித்தார் . கல்லாகப் போ என்றல்ல ! சிவன் தவத்தை காமன் தன் கணைகளால் கலைக்க முற்பட்ட போது வெகுண்ட பரமன் விழித்து மன்மதனை எரித்துச் சாம்பலாக்கிவிடுகிறார் . அவனைப் பிழைப்பூட்டி திருஷ்ய --பத்தினி ரதியின் கண்களுக்கு மட்டும் தெரிவாய் என்று கருணை புரிகிறாள் பார்வதி அன்னை. அங்கு அதிருஷ்ய இங்கு திருஷ்ய . பாதிக்கப் பட்ட இருவருக்கும் கருணையினால் கிடைத்தது அதிருஷ்டமே. விரிக்கின் குட்டிப் பிரவசனமாகிவிடும். இன்று சிவாலயங்களில் பரமன் ஆருத்திரா" தரிசனம்" தரும் நன்னாள். எழுதும் எனக்கும் படிக்கும் உங்களுக்கும் புண்ணியமே. தொடரும் ..... 02-Jan-2018 9:07 am
முதலில் இந்த அதிஷ்டம் தமிழ் மொழிச் சொல் அல்ல..இது வட மொழியில் இருந்து வந்திறங்கியது நம் தமிழுக்கு. த்ருஷ்டம் என்றால் கண்ணால் பார்க்க கூடியது. அத்ருஷ்டம் என்றால் பார்க்க முடியாதது. அதாவது கடவுள் கூரையைப் பிரித்துக் கொடுப்பதை பார்க்க முடியுமோ?? இல்லை எமக்கு லாட்டரிச் சீட்டு விழும் என்பதை எமது மன கண்ணால் அல்லது அறிவுக்கண்ணால் முன் கூட்டியே அறிய முடியுமோ என்றால் அதுவும் இல்லை!! அதனாலேயே அத்ருஷ்டம் -பார்க்கமுடியாதது "அ" வை எடுத்த பின் வரும் த்ருஷ்டம் பார்க்கக் கூடியது என பொருள் படும் போலும்... இனி இந்த அத்த்ருஷ்டம் தமிழில் மருவி அதிஷ்டம் அதிஸ்ட்டம் அதிட்டம் என ஆகியது. துர் என்பது கெட்ட அல்ல கூடாத அல்லது அல்லாத இல்லாத என பொருள்படும் வட மொழி முன்னொட்டு (prefix ) ஆகும். எனவே அதிஷ்டம்அல்லாத என்பது துர் அதிஷ்டம் என அழைக்கப்பட்டிருக்கலாம். அதிஷ்டத்தை தமிழில் பாக்கியம் என்று அழைத்தால் அதற்கு எதிர்மறை துர்ப்பாக்கியம் என்று எதற்கு வந்திருக்க வேண்டும் நல்ல கேள்வி அதிர்ஷ்டம் - அருள் துரதிர்ஷ்டம் - சாபம் அதிஷ்டம் என்பது தமிழில் பேறு பயன் ,நல்லூழ் என அழைக்கப்படும் அருள் என எங்கும் வாசித்ததாக ஞாபகம் இல்லை வரம் எனக் கூறலாம் அப்படியென்றால் தான் அதன் எதிர்மறை சாபமாகும் 29-Dec-2017 10:05 am
தமிழ் ஐயமா சமிஸ்கிருத ஐயமா அல்லது குழப்ப மையமா ? சமிஸ்கிருத சொற்களை வைத்துக் கொண்டு ஏகமாய் குழப்பியிருக்கிறீர்கள் . நானும் என்னால் ஆனா கைங்கர்யத்தை அல்லது கைங்கரியத்தைச் செய்கிறேன் . ஏனெனில் எனக்கு சமிஸ்கிருதம் தெரியாது . " அதிர்ஷ்டம் என்பது திருஷ்டம், திருஷ்ய, திருஷ்யம், என்ற சொற்குடும்பத்திற்குள்ளானது." திருஷ்டம் ---கண்டது எதிர்மறை அதிர்ஷ்டம் ---காணாதது அதுவரை காணாது திடீரென கிடைத்தது . அதுதானே அதிர்ஷ்டம் . அதிர்ஷ்டம் என்ற சொல்லே எதிர்மறைப் பொருளால் உருவான நேர்மறை சொல்லானபின் அதற்கு ஒரு எதிர்மறை சொல் உருவாக்கவேண்டியது மொழியாளர் கடமை அன்றோ ! அதனால் துர் அதிர்ஷ்டம் --துரதிர்ஷ்டம் என்றனர் . பாக்கியம் ---- வெறும் அதிர்ஷ்டம் இல்லை ---தொடரும் 29-Dec-2017 9:46 am
மங்காத்தா - முத்துகிருஷ்ணன்-ராமச்சந்திரன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
03-Jan-2016 4:16 am

நூல் ஓர் அறிமுகம் - தென்னங்கீற்றுகளின் சாட்சியாக :


இணையதளத்தில் படிப்பது எனக்கொரு வசதி தேவையான விடயத்தை மட்டும் படித்து விட்டு கருத்தை எழுதிவிடுவேன், சமீபத்திய ஒரு உதாரணம் இலக்கிய முரசு திரு அகன் அவர்கள் இந்திய பொருட்களை பயன்படுத்த வேண்டியும்  அதனால் இந்திய பொருளாதாரம் எப்படி முன்னேறும் என்றும் ஒரு சிறு கட்டுரையை பகிர்ந்திருந்தார்,  இதே போல் திரு.மலர்1991 போன்றோர்களும் சமூக,பொருளாதார/மொழி சார்ந்த விடயங்களை எழுதி வருகிறார்கள் ,  இதென்ன எப்போதும் போராளிபோல என்று நினைத்தாரோ தெரியவில்லை காதல் கவிதைகள் நிறைந்த ஒரு நூலை காயத்ரி தேவி என்பவர் எழுதியுள்ளார் அவர் சம்மதித்ததின் பேரில் நானே (மங்காத்தா பதிப்பகம்) வெளியிடப்போகிறேன் என்று இந்த புத்தகத்தை பாருங்கள் என்று எனக்கு அனுப்பி வைத்தார் பார்த்தேன், படித்தேன் பிரமித்தேன் அட்டை முதல்  ஒவ்வொரு பக்கத்திலும் வண்ண மலர்களாலும், நவீன பெண் ஓவியங்களால்  அலங்கரிக்கப்பட்டுள்ளது அதில் உள்ள படைப்புகளும் எனக்கு ஒரு புது வித அனுபவத்தை தந்தது என்பது உண்மையே (ஒரு வேலை முதல் முறையாக ஒரு புத்தகம் முழுவதும் காதல், காதல்.. காதல்... என்பதாலோ என்னவோ) எப்படி இருப்பினும் அணிந்துரை, முன்னுரையில் இருந்து ஒவ்வொரு கவித்தலைப்பும்  கவி வரிகளோடு இணைந்தே வந்துள்ளது, இந்த எழுத்தாளர் எனக்கு அறிமுகம் இல்லாதவர் அன்றியும் இவர் படைப்புக்களை பார்த்தால்  இவரோட சொந்த உள்ளுணர்வுகளின் வெளிப்பாடோ? என்று எனக்கு தோன்றுகிறது அதிலும் ஒரு துளி 'காத்திருக்கும் விடியல்' என்ற தலைப்பில் நடுவில் வரும் வரிகள் " அடுத்த மாதம் ஆடியாமே? ஆவணியில் தேதி வைக்க அவசரமாய் தாக்கல் ஒன்றை இப்பொழுதே சொல்லி விடு, முந்தி வரும் கார்திகயோ, பிந்தி வரும் தை மாதமோ, மணநாளை நீட்டி வைத்து உன்னோடு என் வாழ்நாளை தேய்ந்து போக வைக்காதே'  இன்னும் நிறைய படித்ததில் பிடித்த வரிகள் உள்ளன இதில்,   ஆசிரியர் காயத்ரி தேவிக்கும், வெளியிடப்போகும் மங்காத்தா பதிப்பகத்தாருக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் சார்பில் வாழ்த்துக்கள்.

மு.ரா. 

மேலும்

புத்தகப் பிரியருக்கு வணக்கம். தமிழ் காதல் கவிதை தொகுப்பு என்பதால், தமிழ் நாட்டில் விற்பனை செய்ய அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. மாவட்ட வாரியாக முகவர்களும் ரசிகர்களும் கிடைத்தால் அதிக மகிழ்ச்சி. இணைந்து செயல்பட ஒருமித்த அன்பர்களை வரவேற்கிறேன். வாழ்க தமிழ். வெல்க தமிழர் 05-Jan-2016 9:00 pm
தயக்கம் ஏன், நடக்கட்டும் வெகு விரைவில் - மு.ரா. 05-Jan-2016 6:06 pm
நூல் அறிமுகத்திற்கு இந்த பின்னூட்டமே ஒரு மகுடம்தான், நன்றி - மு.ரா. 05-Jan-2016 6:03 pm
புத்தகங்கள் என்பது அழகான நண்பன் அவனுடன் பேசும் போது மட்டும் ஒரு வரியில் ஆயிரம் கோணங்கள் சிந்தை தரும்.., பக்கங்கள் எழுத்தோடு முட்டி விளையாடும் பார்வைகள் நெஞ்சோடு தவழ்ந்து விளையாடும்.எழுதியவன் பார்க்காது எழுத்தின் மொழியைத்தான் விழிகள் ரசித்து மனதின் வழியில் எண்ணங்கள் ஓடிக்கொண்ட இருக்கும் அருவி போல்.உங்கள் புரிதல் மிகவும் அழகியது புத்தகம் எனும் வைரத்தை பட்டை தீட்டிய எழுத்தின் விரலுக்கும் பதிப்பின் வரவுக்கும் வாழ்த்துக்கள் 04-Jan-2016 11:32 pm
முனோபர் உசேன் அளித்த படைப்பை (public) முனோபர் உசேன் மற்றும் 5 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
18-Feb-2015 6:09 pm

"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...

"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..

"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "

"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".

"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச

மேலும்

அருமை !சில இடங்களில் ஒற்றுப் பிழைகள் உள்ளன சரி செய்யவும் ! உணர்ச்சிகள் மிக ஆழமாக உள்ளன ! 13-Oct-2020 1:20 pm
அருமை ... 07-Nov-2017 9:09 am
நன்று .பாராட்டுகள் 06-Jul-2016 4:44 pm
நல்ல வரிகள் அதில் சில வலிகள் உண்மையை உவமையை பாடியதற்கு நன்றி ....... உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்க வளர்க .... 20-Aug-2015 12:50 am
மங்காத்தா அளித்த எண்ணத்தை (public) கார்த்திக் மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
25-Jan-2015 8:12 pm

படைப்புகளில் சிறந்த கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் ஒவ்வொரு மாதமும் தெரிவு செய்யப்படுகின்றன. பரிசும் பெறுகின்றன. மாதம் ஒரு முறை அப்படி பரிசு பெறும் நபர், தமது படைப்புகளை தொகுத்து புத்தகமாக பெற விரும்பினால், மங்காத்தாவை அணுகவும். சுயசெலவில் (மங்காத்தாவின் செலவில்) பரிசு பெறும் நபரின் படைப்புகளைத் தொகுத்து புத்தகமாக பதிப்பித்து பிரசுரித்து எண்ணிக்கையில் 100 பிரதிகளை அளிக்க சித்தமாக உள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வழங்கல் பொங்கல் சிறப்புப் போட்டியில் தெரிவு செய்யப்பட்டு பர (...)

மேலும்

என்னா கவிக்குயிலின் குஞ்சே, நம்மயெல்லாங் ஞ்யாவகங் வெச்சிருக்கீயளே அதுவே ரொம்ப உற்சாகமா இருக்கு.... நல்லா இருக்கீயளாஆஆ...... 28-Jan-2015 10:43 am
அய்ங்.... இப்பிடி சொல்லிப்புட்டு நளுவிட்டுப் போனா எப்புடீ? அங்கிட்டிருந்து கொஞ்சொங் இங்கிட்டிருந்து கொஞ்சொங் தேடிப் புடிச்சி இங்ஙன கொஞ்சொங் அனுப்பீ வெயுங்க.... புத்தகமாப் போடணுமில்லெ....! 28-Jan-2015 10:41 am
தொலைந்து போன கவிதைகள் பலபல தொகுக பட்ட கவிதைகள் சில மன்காதாவின் செயலுக்கு மனதார வாழ்த்துக்கள் இன்னும் மனம் ஆறவில்லை வாழ்த்துக்கள் ......வாழ்த்துக்கள்......... 26-Jan-2015 7:06 am
உண்மை ஊக்கம் அளிக்கும் பக்கங்கள் சிலவே ......அது இது போன்ற துவனியில் மட்டுமே பிரதிபலிக்கும் ......படைப்பை பிரசுரமாக்கும் வாழ்த்துக்கள் ....நல்லவர்கள் நன்றாக இருப்பார்கள் ......நன்றாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கை உண்டு .........நன்றி 25-Jan-2015 10:36 pm
கிருத்திகா தாஸ் அளித்த எண்ணத்தை (public) மீ மணிகண்டன் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
25-Jan-2015 11:12 am

அட ...

நண்பர்களே ... ஒரு நல்ல செய்தி ... என்னுடைய சிறுகதை *வினை சுடும்* இன்றைய தினமலர் - வாரமலரில் வெளியாகியுள்ளது என்பதை அனைவரோடும் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் நண்பர்களே...

- கிருத்திகா தாஸ்...

மேலும்

ஹஹா.. நன்றி தம்பி...!! 26-Jan-2015 11:11 pm
மிக்க நன்றிகள் ஐயா...!! 26-Jan-2015 11:10 pm
மட்டற்ற மகிழ்ச்சி ... இவை ஆரம்பம் தான் உனக்கான ஆகாயம் விரிந்து கிடக்கிறது ... வெற்றிச் சிறகுகள் விரித்தாட .. 26-Jan-2015 11:11 am
சுட்டு விட்டோம் ..வென்றும் விட்டோம் .. இங்கே நின்று விடவும் மாட்டோம் .. தொடருங்க. .. 25-Jan-2015 10:02 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (217)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
பத்மநாதன் லோகநாதன்

பத்மநாதன் லோகநாதன்

ச்'சாஆ, மலேஷியா
சாதிக்குல் அமீன்

சாதிக்குல் அமீன்

ராமநாதபுரம்
ஆஷைலா ஹெலின்

ஆஷைலா ஹெலின்

திருவனந்தபுரம் , கேரளா

இவர் பின்தொடர்பவர்கள் (218)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
krishnan hari

krishnan hari

chennai
பார்த்திபன்

பார்த்திபன்

பெங்களூரு

இவரை பின்தொடர்பவர்கள் (218)

என் படங்கள் (4)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே