கிருத்திகா தாஸ் - சுயவிவரம்
(Profile)
பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : கிருத்திகா தாஸ் |
இடம் | : தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 17-Feb-1903 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 08-May-2013 |
பார்த்தவர்கள் | : 5189 |
புள்ளி | : 1524 |
நண்பர்களுக்கு வணக்கம்..
ஒரு இலக்கியவாதி ஆவது எப்படி ? அறிந்து கொள்ள ஆர்வம் ..
நண்பர்களுக்கு வணக்கம்..
ஒரு இலக்கியவாதி ஆவது எப்படி ? அறிந்து கொள்ள ஆர்வம் ..
....................................................................................................................................
இங்கே நிம்மதி
நிம்மதி எங்கே எங்கே என்று தேடிக் கொண்டிப்பார்களாம் மாந்தர். ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும் கிடைக்காத ஒன்று கா.து. பானு நயினார் வளாகத்தில் கிடைத்தது என்றால் அது ஆச்சரியமாக இருக்கத்தானே செய்யும்?? அதுவும் ஒரே இடத்தில், இருபது இருபத்திரெண்டு பேருக்கு நிம்மதி கிடைத்ததென்றால் அது உலக அதிசயம்தானே??
மேற்படி கா.து. பானு நயினார் வளாகத்தில் ஒரு ஏடிஎம் மெஷின் இருக்கிறது.. நாங்கள் சுத்துவர பதினெட்டுப்பட்டி தெருவில் இருப்பவர்களின் டூ வீலர்கள் பிரே
.....................................................................................................................................................
அதிலேயுமா- நகைச்சுவை குட்டி நாடகம்
டாக்டர் பாண்டுரங்கத்தின் கிளினிக். வாசனும் வானதியும் தம்பதிகள். தங்கள் குழந்தையோடு கிளினிக்குக்கு வருகின்றனர்.
வாசன்: டாக்டர், எங்களை ஞாபகம் இருக்கா? ரெண்டு வருசம் முன்னாடி உங்க கிளினிக்கிலே பரிசோதனைக் குழாயிலே குழந்தையை உருவாக்கி அதை என் மனைவி சுமக்கிற மாதிரி பண்ணீங்களே..!
டாக். : அட, ஆமாம்.. உங்க விந்தணு, உங்க மனைவியோட கருமுட்டை ரெண்டையும் டெஸ்ட் டியூப்லே இணைச்சி, கருக்குழந்தை கொஞ்சம் வளர்ந்ததுக்க
உனக்கு என்னைப் பிடித்திருக்க வேண்டும்
இல்லையென்றால்
திரும்பிப் பார்த்து இருக்க மாட்டாய்..!
நீ என்னை நேசித்திருக்க வேண்டும்
இல்லையென்றால்
எனக்குப் பிடிக்கும் என்பதற்காக
பச்சைத் தாவணியில் திருவிழாவிற்கு
வந்திருக்க மாட்டாய்..!
உனக்கு என்னிடம் பாசம் இருந்திருக்க வேண்டும்
இல்லையென்றால்
நான் பட்டினி கிடந்த போது
உன் வீட்டுப் பலகாரம்
கொடுத்தனுப்பியிருக்க மாட்டாய்..!
உனக்கு என்னிடம்
காதல் இருந்திருக்க வேண்டும்
இல்லையென்றால்
ஈரம் கசிந்த விழிகளோடு
உன் திருமண அழைப்பிதழை
கொடுத்திருக்க மாட்டாய்..!
உனக்கு என்னை
நிச்சயம் பிடித்திருக்க வேண்டும்
இல்லையென்றால்
உன் கு
புழுதி படிந்திருக்கும் என்
நேற்றைய பிம்பங்களை
என் அறையின்
இடது பக்கச் சுவரில்
சாய்த்து வைத்திருக்கிறேன்.
கனவு கண்டு கொண்டிருப்பதாய்
எனக்கு நானே
பொய் உரைத்துக் கொண்டு
எதிர்க் கோட்டில்
நடந்து கொண்டிருக்கிறேன்.
இருப்பினும்
என் விழி மையத்துக்குள்
நான் செல்லாத திசைகள்
மீதான நிழல்கள்.
காற்றடிக்கும்போது படபடக்கும்
பொய்கள் அத்தனையையும்
ஈர அலைகளுக்குள்
காகிதக் கப்பல்களென
மிதக்க விட்டுவிட்டேன்.
இந்நேரம்
அவை மூழ்கியிருக்கும்.
சுழன்று கொண்டிருந்த
காற்றினடியில்
உருண்டிருந்த மணலுக்குள்
புதைத்து விட்டேன்
உடைந்து விட்ட என் பிம்பத்தை
அப்படியே ப்ரதிபலித்த
கண்ணாடித் துண்டு ஒன்றை.
என்
என்றோ ஒரு நாள்
கற்பாலத்தினருகே கண்டெடுத்த
தூரிகை கொண்டு
இளஞ்சிவப்பு நிறத்தில்
இரண்டு கண்ணீர்த் துளிகளை
வரைந்து கொண்டிருக்கிறேன்
இப்போது.. மேலும் கீழும்
கொஞ்சமாய் அலையும் துடுப்புகளினோடு
கொஞ்சம் விடுபட்டுப் போன
சிறு அலைகள்
என் வலப்பக்க நாசிக்குள்
நெருப்புமிழ்ந்து விட்டுக்
கடந்து போய்ப் புகுந்து கொண்டது
இளஞ்சிவப்பு கண்ணீர்த்
துளிகளுக்குள்..
காடென்று பெயரிட்டுச்
சின்னச் செடியொன்றை
சிறு கோப்பைக்குள்
வளர்த்து வந்தேன் முன்பு..
கோப்பை நுனியிலிட்ட
சிறு துளை வழி
காடெங்கிலும் வழிந்தது
மணல் தட்டிய துடுப்பின் வாசம்..
இன்னும் எனக்கு
நினைவிலுண்டு
என் கைப்பைக்குள்
பத்திரப்படுத்தியி
நேற்றைய நிலவொன்றும்
அத்தனை பிடித்தமானதாய்
இருந்திருக்கவில்லை தான்
என் அறை விளக்கோடு
ஒப்பிடுகையில்...
இன்னும் திறக்கப்படாத
அந்த மரப் பெட்டிக்குள்
என்ன இருக்குமென்ற கற்பனை
தீர்ந்து போய் விடக் கூடாதென
இன்னும் திறக்காமலே
வைத்திருக்கிறேன்
அந்தப் பெட்டியை...
இருள் மங்கிய வெளிச்சத்தில்
மட்டும் படிக்கலாமென்று
சிறு புத்தகமொன்றை
பத்திரப்படுத்தி இருந்தேன்..
இரவு விளக்கின் மங்கிய ஒளியில்
அந்தப் புத்தகத்தின் பக்கமொன்றில்
பதிந்த என் நிழல் உருவத்தைப்
பார்த்துக் கொண்டே இருந்தேன்..
விடிந்து விட்டது...
கருப்பு வெள்ளை மழை
கடைசி கணத் தூரல்
சங்கிலியோடு பிணைந்திருந்த பூ
சாலையோரம் நசுங்கியிரு
........................................................................................................................................................................
அதிகாலை வேளையில் அரசவை கூடியிருந்தது. ஒரு மேடையில் அமர்ந்த நிலையில் தளர்ந்து காணப்பட்டாள் மகாராணி.. தொண்டையில் பாய்ந்த வாளோடு தளபதியின் சடலம் சந்தனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது.
மந்திரி பிரதானிகள் அமர்ந்திருந்தனர். மக்களும் திரண்டிருந்தனர்..! அத்தனை பேர் முகத்திலும் ஆச்சரியம், கேள்விக்குறி..!
தம் சீடர்கள் பல்லக்கு சுமந்து வர, பாணிணி முனிவர் வருகை தந்தார். ஆசனத்தில் அமராமல் அங்கிருந்த திண்டில் கால் நீட்டி
............................................................................................................................................................................................
அணிமா, பாணிணி முனிவரின் ஆசிரமத்தில் ஒடுங்கியிருந்தாள். அவள் யோசிக்க வேண்டியது நிறைய இருக்கிறது.. நிறைய்ய.. நிறைய்ய..
முதலில் சம்பவங்களை வகைப்படுத்த வேண்டும்..
ஒன்று : கடுங்கண் சேரலாதர் திடீரென்று இறக்கிறார்; மதுரமொழிச் சேரலாதர் அரசராகிறார்; கீர்த்திவதனா அரசியாகிறார்.
இரண்டு: கீர்த்திவதனாவின் குருகுலத்து மாணவர் சதியில் ஈடுபடுத்தப்படுகிறார்.
மூன்று: பணிப்பெண் நச்சிலையால் மரணமடைகிறாள்.
நான்கு:
.................................................................................................................................................................
பாணிணி முனிவரின் சீடர் கந்தவேள் என்பவர் அணிமாவின் அண்ணன் முறை. அணிமாவை விட ஐந்து வயது மூத்தவரான அவர், இப்போது பிரம்மச்சரிய விரதம் கடைப்பிடித்து குருகுல வாசத்தில் இருந்தாலும் அவர் கண்ணுக்கு மட்டும் அணிமா இன்னும் பாவாடை தடுக்க ஓடும் சிறு பிள்ளையாகவே தென்படுவாள். பாணிணி முனிவரின் ஆசிரமத்துக்கு அணிமா வருகிற போதெல்லாம் கந்தவேளின் சீராட்டோடு நைவேத்தியப் பலகாரங்களும் நிறையக் கிடைக்கும்.!
பணியிலிருந்து விலக்கப்பட்டது அணிமாவுக்குச் சங்கட