வே புனிதா வேளாங்கண்ணி - சுயவிவரம்

(Profile)தமிழ் பித்தன்
இயற்பெயர்:  வே புனிதா வேளாங்கண்ணி
இடம்:  சோளிங்கர், தமிழ்நாடு
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  18-Jan-2013
பார்த்தவர்கள்:  4393
புள்ளி:  2081

என்னைப் பற்றி...

நான் இல்லத்தரசி.
எனக்கு எழுதுவது படிப்பது மிகவும் பிடிக்கும்.
இதன் மூலம் அதிகமான தோழிகள் தோழர்கள் தோழமைகள் கிடைத்திருக்கிறார்கள்.
மனமும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ் பேசுவதே குறைந்து வரும் காலகட்டத்தில் தமிழே மூச்சாக இவ்வளவு பேரை எழுத்துதளத்தில் பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது.

என் படைப்புகள்
வே புனிதா வேளாங்கண்ணி செய்திகள்
வே புனிதா வேளாங்கண்ணி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-May-2017 4:06 pm

அஞ்சறை பெட்டியிலே
அத்தனைபேரின் ஆயுளையும்
அடக்கி வைத்திருக்கும்
அம்மாவின் சமையல்..

பலாக்காய் குழம்பும்
பலாக்கொட்டை வருவலும்
நாவில் நீர் சொட்ட வைக்கும்...

மிளகு ரசமும் பருப்பு துவையலும்
அப்பப்பா...என்ன சுவை...என்ன சுவை...

பொரித்த குழம்பும்
புடலங்காய் கூட்டும்
எண்ணெய் கத்தரி குழம்பும்
சோற்று வத்தலும் அடித்துக்கொள்ள‌
ஆளே இல்லை..அம்மாவின் சமையலில்...

அம்மியில் அரைத்து வைக்கும்
மீன் குழம்பின் மணம்
திகட்டாத தேவாமிர்தம்...

பண்டிகை தினங்களில் மட்டுமே
இட்டலி..தோசை...ஆட்டுக்கல்லில்
அரைத்து பூப்போல ஊற்றிவைக்கும்
இந்த இட்டலிக்கு சில நேரங்களில்
ஆட்டுக்கால் பாயாவும்...

கம்பு

மேலும்

அருமை 10-Sep-2017 5:41 pm
வே புனிதா வேளாங்கண்ணி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-May-2017 4:03 pm

தவழும் போது
பார்த்து சிரித்து
அமரும்போது
அடிபடாமல்
வாரி அணைத்து
எட்டடி எடுத்து வைத்து
நடக்கும் போது
கை தட்டி உற்சாகம் கொடுத்து..

வாரி அணைத்து முத்தமிட்டு
பள்ளிச்சீருடையில்
அவளை பார்த்து
திரிஷ்டி சுற்றிவைத்து..

பால்சோறும்..பருப்புசோறும்
பக்குவமாய் ஊட்டி விட்டு
பூங்கா அழைத்துச் சென்று
விளையாட வைக்கும்
இந்த அம்மம்மாவை பார்க்கும்போது
எம் பிள்ளைகளுக்கு இந்த பாக்கியம்
கிட்டவில்லையே என்று ஏங்கவைக்கிறது...
அம்மா....அம்மா...

மேலும்

வே புனிதா வேளாங்கண்ணி - படைப்பு (public) அளித்துள்ளார்
06-May-2017 12:13 pm

அலைபேசியின்
அலையால்அழிந்து வரும்
சிட்டுக்குருவியின் கனவை
ஒவ்வொரு வீடுகளிலும்
பானை கட்டி உணவு வைப்போம்
சிட்டுக்குருவியின்
வாழ்வை திருப்பி தர‌
கை கோர்ப்போம்....

விபரம் தெரிந்த நாள் முதல்
இந்த காவிரி பிரச்சினை..
ஓடிக்கொண்டே இருக்கிறது
நீர் மட்டும் ஓடுவதே இல்லை
நம் பிள்ளைகளின் தலைமுறைக்காவது
இந்த நீர் கிடைக்குமா
கர்நாடகம் யோசிக்குமா?
அல்லது நாம் ஒன்றாக கை கோர்ப்போமா..
கை கோர்ப்போம்... காவிரி கரை புரண்டோட...

ஒவ்வொரு ஊரிலிலும்
வீதியிலும் இருக்கும்
மது எண்ணும் அரக்கன்
பல குடும்பங்களை
சூறையாடினான்..
சூறையாடுகிறான்..
இன்னும்..இன்னும்..
சூறையாடிக்கொண்டுதான் இருப்பான்...
இந்

மேலும்

வே புனிதா வேளாங்கண்ணி - படைப்பு (public) அளித்துள்ளார்
06-May-2017 12:09 pm

பெரியோர்களுக்கு
நடைபயிற்சி பயில‌வும்

பிள்ளைகளுக்கு
கிரிக்கெட் ஆடவும்

தாத்தா பாட்டிகளின்
பஞ்சாயத்து அரங்கேற்றவும்

காக்கா குருவிகளின்
ரீங்கார சந்தையாகவும்

காளையர்களின்
கபடிக் கூடமாகவும்

மங்கையரின்
பாண்டி ஆட்டக்களமாகவும்

அம்மாவுக்கு
வறட்டி காயும் இடமாகவும்

சலைவைத் தொழிலாளிக்கு
துணி உலர்த்தும் தள‌மாகவும்

மாறிப் போனது
நீர் வற்றிய குளங்கள்

மேலும்

வே புனிதா வேளாங்கண்ணி - குமரிப்பையன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Mar-2017 4:06 am

(இது போட்டிக்கான பதிவு)

நதியாக நீயும் இருந்தாலே நானும்
நீயிருக்கும் தூரம் வரை கரையாகிறேன்

இரவாக நீயும் நிலவாக நானும்
நீயிருக்கும் நேரம் வரை உயிர் வாழ்கிறேன்

பூலோகம் ஓர் நாள் காற்றின்றி போனால்
எந்தன் உயிர் உந்தன் மூச்சு காற்றாகுமே

ஆகாயம் ஓர்நாள் விடியாமல் போனால்
எந்தன் ஜீவன் உந்தன் கையில் விளக்காகுமே

±+++++++++++++++++++++++++++
படம் : உன்னை நினைத்து
பாடல் : என்னை தாலாட்டும்
இசை : சிற்பி
பாடலாசிரியர்: யுகபாரதி
பாடியவர்கள் : சுஜாதா, உன்னி மேனன்
++++++++++++++++++++++++

மேலும்

மெய்யன் நடராஜ் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
04-Apr-2017 10:22 am

============================
==========================
கனவுகள் பலபல கண்களில் வளர்த்து
=காதலின் விசும்பினில் கவினுற வந்தாள்
மனதினில் வாலிப மயக்கமும் அணிந்து
=மணங்கொளும் ஆசையின் மலர்களை விரித்தாள்

தினந்தின மவனது திருக்கர முடிச்சிடும்
=திருமண தினம்வர தவங்களு மிருந்தவள்
இனசன இசைவுட னிருவரு மிணைந்தன்
=இதந்தரும் நிகழ்வதன் இனிமையில் திளைத்தாள்

தனக்கென பிறந்தவன் தழுவிட வருகையில்
=தலைகுனிந் தொருபடம் தரைதனில் வரைந்தாள்
உனக்கென எனதுயிர் உடலென அனைத்தையும்
=உடையவன் கரங்களில் உரிமையாய்க் கொடுத்தாள்

மணிவிரல் மீட்டிடும் மரகத வீணையின்
=மெல்லிய நரம்பென இசைந்துமே கொடுத்தாள்

மேலும்

மிக்க நன்றி ஐயா. 07-Apr-2017 1:20 pm
மிக்க நன்றி 07-Apr-2017 1:19 pm
காதல் வாழ்க்கைக் கவிதையும் வண்ண ஓவியமும் போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் தொடரட்டும் இலக்கிய பயணம் 07-Apr-2017 5:09 am
முகமூடி அணிந்த வேஷங்களில் உள்ளங்கள் ஏமாந்து போகிறது 07-Apr-2017 2:16 am
வே புனிதா வேளாங்கண்ணி - Shyamala Rajasekar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Apr-2017 12:04 pm

இசையில் மயங்கி விட்டேனடா - நான்
இதயம் நெகிழ்ந்து நின்றேனடா
அசையா விழியால் பார்த்தேனடா - நீ
அருகில் வந்தால் பூப்பேனடா!

ஊமைக் கனவாய் ஆனதடா - என்
உள்ளமும் கனன்று எரியுதடா
ஆமை யாய்ப்புலன் அடங்கிடுமோ - உன்
அன்பே என்னை மாற்றுமடா!

கொடியில் படர்ந்த மலர்களுமே - உன்
கோலம் காண ஏங்கிடுதே
துடிக்கும் பெண்மை நிலையுணர்ந்தே - நீ
தோளில் தாங்க வந்திடடா!

காற்றின் உறவில் அரும்பவிழ - அதில்
களிப்புடன் வண்டு மதுசுவைக்கும்
ஏற்றுக் கொண்டிட வருவாயா - கண்ணா
ஏனோ நீயும் எனைமறந்தாய்!

மேலும்

வே புனிதா வேளாங்கண்ணி - Shyamala Rajasekar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Apr-2017 12:16 pm

இருவிரலி டுக்கில் எழும்பிப் புகைந்தே
உருக்குலைத்(து) ஆளை ஒழிக்கும் - வருந்துயர்
எண்ணித் தவிர்த்திடுவாய் என்றும் நலங்கெடுக்கும்
வெண்சுருட்டே வேண்டாம் விடு.

உடலை யுருக்கி யுயிரைப் பறித்துச்
சுடலைக் கனுப்பும் சுருட்டு! - விடத்தை
விடாதுள் ளிழுத்தால் விரட்டி வருவான்
கடாவில் மறலி கடிது.

தானே தனக்கென வைத்திடும் கொள்ளியாய்
ஊனே அழிக்கும் உணராயோ - வானேறு
வாழ்வில் விழுந்திட, வீணாகும் இல்லறமே
பாழ்சுருட்டை விட்டிடப் பார்.

மேலும்

...............................................................................................................................................................................
...............................................................................சீதைடா...

கல்லூரியில் படிக்கிறபோது என் நண்பர்களுக்கு வயசுக் கோளாறு போல நாடகம் போடுகிற கோளாறு

வந்து விட்டது. படிப்பு, பரீட்சை என்று மல்லு கட்டுகிற எங்களுக்கு நாடகம் நடத்துவது அவ்வளவு

சுலபமாயில்லை. இந்திய மாணவர் சங்கத்தில் சேர்ந்து முச்சந்தி கூடும் இடங்களில் தெரு நாடகம்

போடுவதென்றால் என் நண்பன் பழனியப்பனுக்கு அப்படி ஒரு ஈடுபாடு..

மேலும்

நன்றிப்பா. 01-Apr-2017 11:19 am
நன்றாக சிரித்தேன் , எனக்கு சிரிப்பை தந்தமைக்கு மிக்க நன்றி ,கதையருமை நாுன முதல் பரிசூ தந்து விடுவேன் 31-Mar-2017 11:40 pm
நன்றாக இருக்கிறோம் தோழமை... ஆஹா... பதவி உயர்வா... வாழ்த்துகள்..வாழ்த்துகள்..தோழமை.. 31-Mar-2017 5:01 pm
நலம்தான் புனிதா... பதவி உயர்வு கிடைத்ததில் பணிச்சுமை அதிகமாகி விட்டது. குழந்தைகளுக்கு படிப்பு வேறு. தளத்துக்கு வர இயலவில்லை..... நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்களை எல்லாம் நிறைய miss செய்தேன். நன்றி புனிதா... 31-Mar-2017 11:47 am
வே புனிதா வேளாங்கண்ணி - பூ சுப்ரமணியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Mar-2017 10:14 pm

சிறுகதை

உன்னால் முடியும் கவிதா !

பிள்ளையார்கோவில் திருப்பத்தில் கவிதாவும் அவள் உயிர்த் தோழி பத்மாவும் நடந்தார்கள்

“ என்ன கவிதா ..? நீ எங்களுடன் புடவை எடுக்க சரவணா ஸ்டோர்க்கு வரணும். நாளை தமிழ் புத்தாண்டு. நாம் எல்லோரும் புதுப்புடவை கட்டிக்கொண்டு ஆபீஸ்க்கு தமிழ் புத்தாண்டுக்கு மறுநாள் வரவேண்டும். . நீ என்ன சொல்றே ?
தங்களுடன் வரும் தோழிகளைச் சுட்டிக்காட்டி சரவணா ஸ்டோர்க்கு அவர்களெல்லாம் என்னுடன் வர சம்மதித்து விட்டாங்க. நீ மட்டும் வரமாட்டேன்னு ஏன் பிகு பண்ணிக்கிறே கவிதா “ என்றாள் பத்மா.

“ நான் பிகு பண்ணலே பத்மா ! என் மாமியார் வீட்டிலே நான் உங்களோட சரவணா ஸ்டோர்க்கு டிர

மேலும்

கதை அருமை... 09-Mar-2017 4:57 pm
வே புனிதா வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) Priya Aissu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-Nov-2016 3:40 pm

வண்ணக் கனவுகள்
வந்த வண்ணம் உள்ளன...
மணல் லாரிகளை
மண்ணுக்குள் தள்ளவேண்டும்....
காவிரியில் நீர் ஓட வேண்டும்...
நதியெல்லாம் தூர் வார வேண்டும்..
சாதிகளை தீயிட்டு கொளுத்தவேண்டும்...
வீட்டுக்கு பல மரங்கள் நடுதல் வேண்டும்..
விவசாயத்தின் பயனை வீதிதோறும்
பரப்பவேண்டும்...
தவறுக்கு தண்டனை உடனடி கிடைக்கவேண்டும்
தமிழுக்கு மணிமகுடம் சூட்டவேண்டும்..
பயமில்லாமல் சாலையில் பெண்கள் நடக்கவேண்டும்
பாரதியை மீண்டும் காணவேண்டும்...

மேலும்

மிக்க நன்றி தோழரே... 15-Dec-2016 12:23 pm
மிக்க நன்றி ப்ரியா... 15-Dec-2016 12:22 pm
வண்ண வண்ண கனவுகள் சிறப்பு தோழியே....!! 17-Nov-2016 10:54 am
வண்ணக் கனவுகள் காணும் கண்கள் தான் வண்ணமிழந்து போகிறது 13-Nov-2016 9:27 am
வே புனிதா வேளாங்கண்ணி - வே புனிதா வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Nov-2016 3:09 pm

வளர்பிறையும் அழகு
தேய்பிறையும் அழகு
உன்னாலே..ஆகாய வெண்ணிலவே..

அனுதினமும்
அனைவரையும்
அழகாய் கவி எழுத‌
அச்சாணி அமைக்கிறாய்...

காதலனோடு கைகோர்த்து
கடலலையை ரசிக்கவைக்கும்
ரசனையின் அழகு நீ..

வெண்ணிலவே... உலகுக்கே
விளக்கேற்றி வைத்து விட்டு
விடிய விடிய காத்திருக்கும்
விட்டில் பூச்சியும் நீயே...
வழித்துணையும் நீயே..

ஆகாய வெண்ணிலவே
அன்னையின் தாலாட்டில்
என்றும் உனக்கே முதலிடம்...

மேலும்

மிக்க நன்றி ப்ரியா... 15-Dec-2016 12:22 pm
அன்னையின் தாலாட்டில் என்றும் உனக்கே முதலிடம்........அழகு தோழி...!! 03-Dec-2016 2:53 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (329)

ரசீன் இக்பால்

ரசீன் இக்பால்

குளச்சல் (நாகர்கோவில்)
இஜாஸ்

இஜாஸ்

இலங்கை
கங்கைமணி

கங்கைமணி

மதுரை
இராமகிருஷ்ணன் வெ

இராமகிருஷ்ணன் வெ

திருப்பூர்

இவர் பின்தொடர்பவர்கள் (329)

சிவா

சிவா

Malaysia
பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (330)

user photo

santhosh pugalendhi

தர்மபுரி
பானுஜெகதீஷ்

பானுஜெகதீஷ்

கன்யாகுமரி
RATHNA

RATHNA

தூண் & துரும்பு

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே