உமர் - சுயவிவரம்
(Profile)
பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : உமர் |
இடம் | : |
பிறந்த தேதி | : 24-Jun-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 4155 |
புள்ளி | : 1604 |
நிலையில்லா ஓடத்தில்
நீயும் நானும் பயணத்தில்
நித்திரையின் ஆரம்பத்தில்
நிகழ்ந்துவிட்ட மாற்றத்தில்
முத்திரையும் பதித்துவைக்க
சித்திரமும் செதுக்கிவைக்க
கையுறையும் காலுறையும்
காணாமல் போனதென்ன
நீந்தவும் தெரியாது
நீச்சலும் அறியாது
விரைப்பான முறுக்கோடு
சிறப்பாக நீந்தி
நீர்க்கடலை பிளந்து
நீந்தியதன் மாயமென்ன..!
கனவில் என்னை அர்பணிக்கிறேன்
நினைவில் உன்னை அரவணைகிறேன்
பகலில் உன்னை தேடி தொலைகிறேன்
மரணம் வரை காத்து கரைகிறேன்
இந்த காதல் என்ற ஒன்றிலே
காலம் முழுவதும் உன்னுடன் வாழ்கிறேன்
உங்கள்
😍தமிழ் அழகினி✍️
என்னை அறியா மனதில் வந்தன எதிர்மறை எண்ணங்கள் ...
வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை ....
ஆனால், ஏதோ ஒன்று என்னை பின்தொடர்ந்து வருகிறது ....
என்னசெய்ய என்னுள் இருக்கும் மனதை கேட்க தான் செய்தேன் ....
மனமோ ஏதும் கூறவில்லை ....
என்ன செய்வது என்று அறியா பேதையாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் இவ்வுலகில் ....
என்ன செய்ய என்று யாரிடம் கரணம் கேட்டாலும் யாரும் கூறஇயலாது ...
என் வலி என் மனதில் மட்டுமே
"என்னய்யா..தலைவர் குடியேறப் போற புது வீட்டுக்கு முன்னாடி இவ்வளவு போலீஸ்...என்னாச்சு..?!"
"அட நீ வேற... வீட்டு முகப்புல பேர் எழுதுன பயபுள்ள... கோதை இல்லம் னு எழுதுறதுக்கு பதிலா.. போதை இல்லம்னு எழுதிட்டான்யா..."
"அடப்பாவி..!!"
"ஹலோ... திவ்யா இருக்காங்களா..?"
"திவ்யாவா...அப்படி யாரும் இல்லியே.....ப்ரியான்னுதான் இருக்கா....அவளும் வெளிய போயிருக்கா.."
"சரி...சரி...ப்ரியா வந்தா நான் போன் போட்டதா சொல்லுங்க.."
"நீங்க யாரு..?!"
"நான் னு சொல்லுங்க தெரியும்.."
"யாரு நீங்க..உங்க பேரு என்ன..?!'
"தெரியாத ஆட்கள்ட்ட பேர் சொல்லக்கூடாதுனு எங்கம்மா சொல்லியிருக்காங்க..."
"அடிங் கொய்யால......"
அதிகாலை பொழுதே...!
செல்லமாய்...
இதமாய்....
என்னவளின் இதழில்
ஒரு முத்தம் இட்டு வை...!!
அவள் கண்ணசைத்து விழித்தால்...
என் பெயரை சொல்லி...
எனை அழைத்துப் பேச..
அவள் காதில் மெல்ல ஓதி விட்டு செல்லு..
இடுக்கண் தலை தூக்கி
கிடுக்கிப் பிடி
பிடித்திருந்த காலத்தில்
உன்னை ஈன்று எடுத்த எனக்கு
என்ன ஒரு துன்பத்தைக்
கொடுத்து விட்டாயடா மகனே.
போர்க்களத்தில்
நீ மாண்டிருந்தால்
நெஞ்சம் நிமிர்த்தி
நான் வாழ்ந்திருப்பேன்.
வழிப்போக்கில் நீ
மாண்டிருந்தால்
தாறுமாறாக
வண்டி செலுத்திருப்பாய்
தவறு உன்னிடம் என்று
என்னை நானே
தேர்த்திக் கொண்டிருப்பேன் .
கூடி விளையாடி
கூட்டமாய் நீர்த்தாக்கில்
இருக்கும் போது மாண்டிருந்தால்.
உன்னை அறியாமல்
நடந்த விபத்து என
மனக் காயத்தை ஆத்திருப்பேன் .
நோயின் தாக்கம் கண்டு
பேயின் பார்வை பட்டு
பாயில் வீழ்ந்து மடிந்திருந்தால்
காலத்தின் தண்டனையென
ஏற்றுக் கொண்டிருப்பேன்.
கன்னமிரண்டின் உரசலுக்கு
*************************************************************************
வண்ணவண்ண வண்டினங்கள் பறந்துலவி சேர்க்கையிட
புன்னகைப் பூக்களதும் வாய்திறந்து தேனவிழ்க்க
பெண்மோகம் தூண்ட ஆணுணர்வு விஞ்சிநிற்க
சன்னலோரப் பார்வையில் என்னையிழுத்துச் சாய்த்தவளே
எண்ணங்கள் ஆயிரமாய் என்மனதை வாட்டுதடி
கன்னமிரண்டின் உரசலுக்கு உணர்ச்சிகள் கூடுகையில்
பின்னமோ உன்மனது முழுமைதான் எப்போ
வாலிப வண்ணத்தின் ஓவியமே நீ
மானிட எண்ணத்தின் காவியமே நீ
ஜானிடை மெல்லியதின் தங்கமே னி
வானடை மழைதன்னின் மேகமே னி
காலத்தின் வேகத்தில் நொடிமுள்ளே நீ
காதலின் மோகத்தில் பனைகள்ளே நீ
பேரிடர் மோதலின் பனிப்பூவே நீ
கோரிடும் வறியோர்க்கு செல்வமே நீ
வந்திடுவாயோ...மணம் தந்திடுவாயோ...மனம்
வென்றிடுவாயோ...வனம்
மாற்றிடுவாயோ...சுமை
போக்கிடுவாயோ..சுகம்
கூட்டிடுவாயோ.. எமைச்
சேர்ந்திடுவாயோ...!!
.........................................................
கருத்திலே கள்ளூற்றி கவிதைகள்
நீ பாடி
பொருத்தவா பார்க்கிறாய் பொய்களை நீ கூட்டி...!
சிக்கமாட்டேன் சிங்காரி நான்...
சிப்பாயின் வழிமகள் நான்...!
வார்த்தைக்குள் வசப்படாத என்
வரலாற்றின் வத்திக்குச்சியே...!
உன் போதையில் என் பாதை
மறந்துவிட்டேன்...!
உன் கண்ஜாடையில் என் காலம் கடத்திவிட்டேன்..!
உன் கைத்தாங்கலில் நான் இமயம்
அடைந்துவிட்டேன்..!
மண் பொருளாய் இருந்த என்னை
மென்பொருள் போல் ஆக்கிவிட்டாய்
பொன் பொருளாய் மாற்றிவிட்டாய்.!
மந்திரமொழி மங்கையே...!மயக்கும்
எந்திரனின் தங்கையே..! மன்னவனின் மடிமீது உடல் கிடத்தி
ஒட்டியிருந்தாலும்.... தூரம் எங்கு
சென்றாயோ....உயிர்பிரிந்தே....!
சொல்வாயோ....சொல்லாமல் எனைக் கொல்வாயோ...!