வேலு - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : வேலு |
இடம் | : சென்னை (திருவண்ணாமலை) |
பிறந்த தேதி | : 10-May-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Sep-2010 |
பார்த்தவர்கள் | : 2827 |
புள்ளி | : 1215 |
நான் கண்ணாடி மாதிரி , உங்களை அழகு படுத்தி கொள்ளுங்கள்...
"தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?"
நீ மட்டும் எனக்கு கிடைக்கா விட்டால் வாழ்கை என்னவென்று அறியாமலேயே என் ஆயுள் முடிந்து இருக்கும்....!
வேலை பழுவோ அல்லது சில நிந்தைகளோ மனது கொஞ்சம் தளர்ந்து நின்றால் தாய்மடிக்கு நிகராய் தன் மடி தரும் என் என்னொரு தாய் நீ....!
ஆழம் விழுதுகள் போல ஆயிரம் உறவுகள் இருந்தும் என் வேரென நீ இருப்பதால் தான் நான் இன்னும் வீழ்ந்து விடாமல் இருக்கின்றேன்....!
இப்பிறப்பில் ஈர்ப்பில்லை அடுத்த பிறவியில் ஆர்வமில்லை
அப்படியும் பிறந்திட்டால்
இனிக்கும் தமிழ் மொழியில் எனக்கென நீ கவிதையாக வாழு
ஒரு அரசனாகி உன்ஆளுமைக்கு
நான் அடிமையாவேன்.....!
உலகின் பார்வைக்கு என் கணவன் நீ
எனக்கு மட்டுமே தெரியும்
என் அன்னையின் என
தென்பொதிகைத் தமிழ்தென்றல் தெம்மாங்கு இசைக்கையிலே
தேன்மலர்க்கூந் தலிலேசெண் பகம்செருகி நடக்கையிலே
வரப்போர வாய்க்கால்கெண் டையெனத்துள் ளுதுமனசு
சொல்லடிநீ சேதிதை யில்
---கலிவெண்பா
தென்பொதிகைத் தமிழ்தென்றல் தெம்மாங்கு இசைக்கையிலே
தேன்மலர்க்கூந் தலிலேசெண் பகம்செருகி நடக்கையிலே
வரப்போர வாய்க்கால்கெண் டையெனத்துள் ளுதுமனசு
சொல்லடிநீ தையில்தே திவைக்கஉன் அப்பனை
---தரவு கொச்சக் கலிப்பா
தொல்காப்பியரின் நால் வகைப் பாவினுள் கலிப்பா ஒன்று .
இதன் இலக்கண விதிகளை பின்னால் கட்டுரையில் பார்ப்போம் .
தென்பொதிகைத் தென்றல்தெம் மாங்குபாட் டுப்பாட
தேன்மலர்க்கூந் தல்செண் பகம்சிரிக்க நீநடந
உண்மையில் சுகந்திரம் பெற்றோமா
உங்கள் எண்ணங்களை கவிதை மற்றும் கதையாய் எழுதவும்
__
வண்ணக் கனவுகள் சிதையலாம்
மலரே அசைந்துவிடாதே!
உறங்கிக் கொண்டிருக்கிறது
வண்ணத்துப்பூச்சி.
****************
கடவுளோடு பேசுவதாக
மனைவி சொல்கிறாள்
உறக்கத்தில் வாய்ப்புலம்பும்
கடவுளை அறியாதவளாய்.
********************
தாயின் தாலாட்டில்
விழித்துக்கொண்டு
பாட்டனின் குறட்டைச்சத்தம்
கேட்டபடி நிம்மதியாக உறங்கும்
குழந்தைக்குத் தெரிவதில்லை
உறங்குவதும் முதிர்ந்த குழந்தை எனபது.
*மெய்யன் நடராஜ்
எட்டிப் பார்க்கும் சுட்டிப் பெண்ணே
கட்டிக் கரும்பே அழகிய அரும்பே !
சிரிக்கும் அழகு சிந்தையைத் தொடுகிறது
சிதறும் உள்ளமும் சிரித்து மகிழ்கிறது !
உதிர்த்திடும் புன்னகை எனக்குப் புரிகிறது
உலகை நினைத்து உனதுள்ளம் சிரிக்கிறது !
கள்ளமிலா உன்முகத்தை கணநேரம் கண்டதும்
கவலைகள் மறக்கிறது கருணையும் பிறக்கிறது !
நந்தவனமாய் மணக்கிறது நளினிமிகு உன்னழகும்
வந்தனம் செய்கின்றேன் வானவில்லே உனக்கும் !
கோபமது உன்முகத்தில் காட்சிக்காக நின்றதா
கோமாளி உலகத்தைக் கண்டதன் நிலையதா !
அமைதியின் உருவமாய் நிற்பதும் தெரிகிறது
அலைமோதும் ஆசைகளை விழிகள் கூறுகிறது !
வாசலில் நிற்கிறாய் வசந்தத்தை வ
அறியாப் பாதையில் ஆரம்பம்
முடிவினைத் தெரியாத பயணம்
இடையில் நடைபெறும் நிகழ்வுகள்
சந்திக்கும் விந்தைமிகு மனிதர்கள் !
இடையூறாய் நடந்திடும் விபத்துகள்
விழிகளுக்கு விருந்தாகும் காட்சிகள்
விழிநீர் வரவழைக்கும் சோகங்கள்
மகிழ்ச்சியைத் தந்திடும் தருணங்கள் !
புரட்டிப் போடுகின்ற சம்பவங்கள்
வாட்டி வதைக்கின்ற வருத்தங்கள்
தென்றலாய் தீண்டிடும் வசந்தங்கள்
புதுமையாய் தோன்றிடும் செய்திகள் !
ஆனந்தத்தில் கூத்தாடும் பொழுதுகள்
முடிவுரை வாசித்திடும் வினாடிகள்
வாழ்வெனும் நூலின் அத்தியாயங்கள்
வாழ்க்கைப் புத்தகத்தின் பக்கங்கள் !
கூறியவை யாவும் வசனங்களல்ல
கூர்ந்து கவனிக்கத் த
வார்த்தைகள் வித்தியசபடவில்லை
உன்னை பார்த்தபின்
"படம் பார்த்து கதை சொல் "
முதல் வகுப்பு மாணவன்தான்
உன்னிடத்தில்
அதனால்
உன் புகைபடம் பார்த்து கவிதை சொல்கிறேன்
அதிகாலை
பனியை தெளித்து
புன்னகையை விதைத்து
கடவுள்
மண்ணில் மறந்தானோ !!
நெற்றில்
பொட்டு என்ற பெயரில் புள்ளி வைத்து
கோலம் போட மறந்தானோ !!!
என்
இதயம் தெளிந்த
அமில பெண்ணே
#கவிதைக்காரன் வேலு
வாழ்வில்
நாம் செய்யும்
சிறு சிறு உதவிகளில்
பலரின் பெரிய
சந்தோசம் உள்ளது.
#கவிதைக்காரன்
அவள்
ரகசிய மொழியை
எனக்கு கற்றுக் தருகிறாள்
சிரித்துக்கொண்டே அழுவதை
#வேலு
உன் காதல்
என்
கன்னங்களில் கனியாகிறது
என் வானில்
வண்ண வண்ண
விண்மீன் பூக்கள்
எத்தனை எத்தனையோ....
ஆற்றுப்பாதைகளில்
ஆக்கிரமித்து
மண்டிக்கிடக்கிறது கட்டிடங்களும்,
குடிசைகளை பிரித்தெறிகிற வலிமையான கரங்களின் நிழல்படாமல்..
எதிர்த்து கேட்கும் வாயில்
விழுந்துகொண்டேயிருக்கிறது
இரக்கமற்ற அடி!
உனக்குள்
நான் இருப்பதைப்போல இல்லாமலும்
இல்லாததைப்போல இருப்பதுமாக இருப்பதாய்
சொல்லிக்கொண்டே இருக்கிறது
என் எதிரில் உன் உதடுகள்
புன்னகைப்பதற்கு
எடுத்துக்கொள்ளும்
பிரயத்தனம்!