வரப்போர வாய்க்கால்கெண்டையெனத் துள்ளுது மனசு

தென்பொதிகைத் தமிழ்தென்றல் தெம்மாங்கு இசைக்கையிலே
தேன்மலர்க்கூந் தலிலேசெண் பகம்செருகி நடக்கையிலே
வரப்போர வாய்க்கால்கெண் டையெனத்துள் ளுதுமனசு
சொல்லடிநீ சேதிதை யில்
---கலிவெண்பா
தென்பொதிகைத் தமிழ்தென்றல் தெம்மாங்கு இசைக்கையிலே
தேன்மலர்க்கூந் தலிலேசெண் பகம்செருகி நடக்கையிலே
வரப்போர வாய்க்கால்கெண் டையெனத்துள் ளுதுமனசு
சொல்லடிநீ தையில்தே திவைக்கஉன் அப்பனை

---தரவு கொச்சக் கலிப்பா

தொல்காப்பியரின் நால் வகைப் பாவினுள் கலிப்பா ஒன்று .
இதன் இலக்கண விதிகளை பின்னால் கட்டுரையில் பார்ப்போம் .

தென்பொதிகைத் தென்றல்தெம் மாங்குபாட் டுப்பாட‌
தேன்மலர்க்கூந் தல்செண் பகம்சிரிக்க நீநடந்தால்
நம்வரப் போரவோடை மீனாய்துள் ளும்மனசு
எப்பவ‌ப்பன் தேதிவைப் பான் ?

நம்வரப் போரவோடை-----நம் வரப்பு ஓர ஓடை

எப்பவப்பன் ----எப்ப அப்பன்

தளை மாற்றி வெண்பாவாக ....

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Oct-16, 10:13 am)
பார்வை : 70

மேலே