கனவில் வதைக்கும் எழில்தே வதை

தேவதை என்னைத் தினமும் கனவில்
வதைக்கும் எழில்தே வதை

புன்னகையால் என்னை வதைப்பாய்நீ நேரிலே
பொன்னூஞ்சல் ஆடுவாய்நெஞ் சில்

புன்னகையால் நெஞ்சினை புண்ணாகச் செய்திடும்
வன்கொடுமை யைச்செய்யா தே

எழுதியவர் : கவின் சாரலன் (1-Jun-25, 11:08 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 53

மேலே