புன்னகையை பாண்டியன் பொற்குவை முத்தென்பதோ

பொன்னென் பதோபுதுப் பூவென் பதோஎழில்
புன்னகையை பாண்டியன் பொற்குவைமுத் தென்பதோ
தென்றலாடும் கூந்தலை கார்முகில் என்பதோ
கன்னச் சிவப்பினை காதலாப்பிள் என்பதோ
சின்ன இடையசைத்துச் செல்லும்பொற் சித்திரமே
மின்விழியில் மேற்கு முகில்மின்னல் காரியே
நின்றுநீ சொல்வாய் நிலா