புரட்சிக்கவியின் புதுமைப் பாடல்கள் கவிஞர் இரா இரவி
புரட்சிக்கவியின் புதுமைப் பாடல்கள்
கவிஞர் இரா. இரவி
குடும்பக் கட்டுப்பாடு கடைபிடிக்கிறோம் இன்று
குடும்பக் கட்டுப்பாட்டை அன்றே பாடியவர்!
முதுமைக் காதலையும் நன்கு பாடியவர்!
முதுமையிலும் இருக்கிறாள் என்பதே இன்பமென்றார்!
பாடாத பொருள் இல்லை எனப் பாடியவர்!
பாட்டில் புதுமைகள் அன்றே விதைத்தவர்!
பகுத்தறிவுப் பகலவன் கருத்துக்களை எல்லாம்
பாட்டின் வழி விளக்கிப் பாடியவர்!
தமிழை உயிருக்கு நேராக நேசித்தவர்!
தமிழுக்கு பாட்டால் மகுடம் சூட்டியவர்!
கெட்ட போரிடும் உலகத்தை வெறுத்தவர்!
கவிதையில் அமைதியை வேண்டிப் பாடியவர்!
மக்களுக்கு புரட்சி மனத்தை ஏற்படுத்தியவர்!
மனதின் மூட நம்பிக்கைகளை ஒழித்தவர்!
நிரந்தர நாத்திகன் எனப் பிரகடனப்படுத்தியவர்!
நிரந்தரமாக பகுத்தறிவாளராக வாழ்ந்தவர்!
கொண்ட கொள்கையில் குன்றென நின்றவர்!
கொள்கையில் சமரசம் செயது கொள்ளாதவர்!
ஆதிக்கம் எந்த வடிவில் வந்தாலும் எதிர்த்தவர்!
ஆன்மிகம் சாதி மத வெறி வேண்டாம் என்றவர்!
மனிதநேயத்தை பாடல்களில் நன்கு வடித்தவர்!
மனிதனுக்கு வாழ்வியல் நெறி வகுத்தவர்!
பெண்ணுரிமைக்கு உரக்கக் குரல் தந்தவர்!
பெண்மையின் வளர்ச்சிக்கு உரம் இட்டவர்.
.