காதலுக்கு மானசீகக் காதலிக்குச் சில வண்ணக் கோடுகள்
பழைய டைரி
பழுப்பு நிறப் பக்கங்கள்
காதலுக்கு மானசீகக் காதலிக்குச்
சில வண்ணக் கோடுகள்
திருப்புகிறேன் பக்கங்களை
கிறுக்கிய வரிகளில்
கண்கள் ஊர்கின்றன
அவை புதிதாய்ப் பூத்து
சில தேன்துளிகளை சிந்தின ....

