உன் துயர் போக்கிடுவேன் மானே
உன் துயர் 
போக்கிடுவேன் மானே..! 
04 / 10 / 2025 
கண்ணாடியில் உன் பிம்பம் 
நீர் பிம்பமாய் என் நெஞ்சில் 
நிழலாடுகிறது.
சுற்றிலும் இயற்கை 
பசுமையாய்..
இளம் தூறல் பூமியை 
பூவானமாய் நினைத்தாலும் 
தலைவாரி பூச்சூடி 
இருந்தாலும் 
உன் முகத்தில் சோகம் 
இழையோடி இருக்கிறதே 
என்னடி வாட்டம்?
கப்பல் கவிழ்ந்து விட்டதா என்ன?
கன்னத்தில் கை வைத்து 
சிலையாகி விட்டாயே..!
ஓடும் பேருந்துக்கு 
இணையாக 
உன் நினைவும் 
கூடவே ஓடுகிறதோ..!
மாமனை காணாத ஏக்கமோ?
இப்படி உன் வாடிய 
முகம் காண சகிக்கவில்லையடி சகியே 
உன்னைவிட்டு எங்கு போய்விடுவேன் உயிரே 
கலங்காதே கண்ணே - விரைவில் 
வந்திடுவேன் மானே 
வந்து உன் துயர் 
போக்கிடுவேன் மானே..!

