ஜீவன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : ஜீவன் |
இடம் | : புதுவை |
பிறந்த தேதி | : 24-Mar-1956 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Jan-2022 |
பார்த்தவர்கள் | : 2225 |
புள்ளி | : 607 |
நான் ஒரு மருத்துவர். தமிழின் மேல் உள்ள தணியாத காதலினால் கவிதையாய் சில நேரம்,கட்டுரையாய் சில நேரம்,கதையாய் சில நேரம் கிறுக்கி வைத்திருக்கிறேன்.அவற்றை உங்களோடு பகிர்வதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.உங்கள் கருத்துக்கள் என்னை வளர்த்துக் கொள்ளும் நல் உரமாக வேண்டுமென இந்த இணையத்தில் இணைக்கிறேன்.உங்களின் பாராட்டுதல்கள் இல்லை வசவுகள் இல்லை கைதட்டல்கள் இல்லை தோள் மீது சிறு தட்டல்களுக்காக ஏங்கி நிற்கும் ஒரு ஜீவன். ஓ...! என் புனை பெயரும் "ஜீவன்" தான். இனி என் படைப்புகள் ஜீவனின் " கதம்பத்தில்"இருந்து....
குமுறல்
27 / 07 / 2025
பால்வெளியில் உலாவரும் சூரியனும்
பாலெனவே குளிரூட்டும் தேன்நிலவும்
தேகம் தழுவும் தெக்கத்தி காற்றும்
'மா' கொடையாய் நீர்வார்க்கும் வான்மழையும்
மிதிப்பட்டாலும் நமைதாங்கும் இப்பூமி பந்தும்
எதிர்பாத்தா எதையும் செய்கின்றன?
ஈனப்பிறவி மனிதன் மட்டும்தான்
ஒவ்வொன்றிற்கும் பலன் எதிர்பார்க்கிறான்.
கிடைக்கவில்லை என்றால் புழுங்கிச் சாகிறான்.
இயற்கையை கண்டும் பாடம் படிக்கவில்லை
இயற்கையை வென்றிட வன்மம் குறையவில்லை
செயற்கையில் வாழ்வினை முழுக்கி விட்டான்
செயற்கையாய் வாழ்ந்து முடங்கி விட்டான்.
தீர்ப்புகளை வழங்கிவிடு.
29 / 09 / 2024
நீதி தேவதையே...
உன் கண்களை கட்டிவிட்டது யார்?
உன் கைகளில் ஏந்தி நிற்கும்
தராசு யார் பக்கமும் சாயாமல்
தாங்கிப் பிடிப்பது யார்?
கருப்புத் துணியால்தான் உன்கண்கள்
கட்டப் பட்டிருக்கிறது.
கருப்புக்கு நிற பேதமில்லை. அத்தனை
நிறங்களும் அதற்குள் அடக்கம்.
குற்றம் சாட்டி கூண்டிலிருப்பவர்
ஏழையா? செல்வந்தனா?
படித்தவானா? பாமரனா?
பதவியில் இருப்பவனா? பரதேசியா?
அரசனா?ஆண்டியா?
எந்த ஒரு தகுதியும்
உன் தீர்ப்பை மாற்றிவிடக்
கூடாதென்றுதான் உன் கண்கள்
கட்டப் பட்டிருக்கிறதோ? என்னவோ?
அய்யகோ..
கண் கட்டியிருக்கும் தைரியத்தில்
நடைமுறையில் இன்று .அரங்க
கையில காசு வாயில தோசை...!
24 / 09 / 2024
கையில காசு வாயில தோசை
என்று உலகம் சுற்றுதடா தம்பி
வாய் எல்லாம் பொய். வளர்ந்த
மெய் எல்லாம் நடிப்பு என்றுதான்
வாழ்க்கைச் சக்கரம் சுழலுதடா தம்பி
உனக்கொன்று சொல்லிட துணிகிறேன்
கண்களை அகலத் திறந்து வையடா
செவிகளை பெரியதாக்கி கூர்மை ஆக்கிடடா
கைகளை இரும்பாக்கி வலுவாக்கிடடா
எதையும் தாங்கிட இதயத்தை பழக்கிடடா
நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும்
சவால்கள் பாதையை அடைத்து நிற்குதடா
சிறு மலை ஏறினால் தொடர்ந்திடும்
தலை சுற்றும் கிடுகிடு பள்ளத்தாக்கு
பள்ளத்தில் நின்றாலோ வான்முட்ட
உயர்ந்து நிற்கும் மலை முகடுகள்
ஒரு மரத்தில் ஏறினால் ம
நாகப் பாம்பே....!
04 / 09 / 2024
பல்லினில் நஞ்சை வைத்தாய் நாகப் பாம்பே - இவர்
சொல்லினில் நஞ்சை வைத்தார் நாகப் பாம்பே.
இரட்டை நாக்குடன் பிறந்தாயே நாகப் பாம்பே - இவர்
இரட்டை நாக்குடன் பேசுகிறாரே நாகப் பாம்பே
சட்டையை உரித்து புதுஜென்மம் எடுக்கின்றாய் நாகப் பாம்பே - இவர்
சட்டையை மாற்றி பலஜென்மம் எடுக்கின்றார் நாகப் பாம்பே.
மகுடிக்கு தகுந்தாற்போல் ஆடுகின்ற நாகப் பாம்பே - இவர்
புகழுக்கு தகுந்தாற்போல் மயங்கி ஆடுகின்றார் நாகப் பாம்பே.
வழுவழு வென்று ஊர்ந்துமறைகின்றாய் நாகப் பாம்பே - இவர்
நழுவியே பலசமயம் விலகி மறைகின்றார் நாகப் பாம்பே.
எறும்பின் புற்றை வாசமாக்கி நாசமாக்கும் ந
வாகைசூடலாமே..!
15 / 07 / 2025
அது அது அதன்படி நடக்குமாறு
அது அது அதன்படி வகுத்தமாறு
அது அது அதன்படி நடந்தேறுமே
இது இது இதன்படி நடந்துவிடும்
இது இது இதன்படி கடந்துவிடும்
இது இது இதன்படி அமைவதுதான்
இயற்கையோ இறையோ போட்டுவைத்த
இடியாப்ப சிக்கலான வாழ்வதில்
எது எது எதன்படி நடந்தாலும்
எது எது எதன்படி கடந்தாலும்
இதுவோ அதுவோ எதுவோ
பொதுவாய் ஒத்து கொண்டு
சகித்து கொள்ள பழகிவிட்டால்
எதுவான போதும் வாகைசூடலாமே..!
சேர்ந்திருப்போம்.
05 / 07 / 2025
விழியில் விழுந்து என்
இதயம் நுழைந்தாய் பெண்ணே
இதயம் நுழைந்து என்
உதிரம் கலந்தாய் கண்ணே
பல்லவன் வடித்து வைத்தான்
கற்சிலை
உன்வடிவம் கண்டு நான் ஆனேன்
கற்சிலை
உன் மூச்சு காற்று பட்டவுடன்
உயிரானேன்
உன் பேச்சு காதில் கேட்டவுடன்
கவியானேன்
சித்தன்ன வாசல் ஓவியமே - என்
சித்தம் கவர்ந்த காவியமே
மொத்தமாய் என்னை தந்தேனே - என்
சொத்துசுகம் முழுதும் நீதானே
வா வா பெண்ணே கைகோர்ப்போம்
வாழ்க்கை முழுதும் வாழ்ந்திருப்போம்
வாடிய பயிருக்கு நீர் வார்ப்போம்
வாட்டங்கள் போக்கியே சேர்ந்திருப்போம்.
பூப்போன்ற மகளே
பொன்வண்ணச் சிலையே
தேன்போல இனிக்கும்
தெம்மாங்கு பாட்டே
விழியோரம் நான் கண்ட கனவு - அதன்
விடையாக நீ வந்த வரவு.
மொழியெல்லாம் தமிழ்போல இனிப்பு - எந்தன்
வழியெல்லாம் நிறையும் உன் நினைப்பு.
கண்ணே நீ கண்மூடி தூங்கு - எந்தன்
தோள்மீது தலை சாய்த்து தூங்கு
தாயாக எனை மாற்றும் பெண்ணே - எந்தன்
தாயாக உனை காப்பேன் கண்ணே
வெறியன்
கத்தி எடு
கடவுளை வெட்ட !
கருணை அற்ற இந்த
கடவுள்களை எல்லாம் வெட்ட கத்தியை எடு
கயவர்கள் (உலகம்) எல்லாம்
ஒன்று கூடி
கொத்து கொத்தாய்
எங்களை கொன்ற
போது!
நல்லூர் கந்தன்
எங்கு போனான்?
மருதடி பிள்ளையானும்
எங்கு போனான்?
இல்லை
வயல் ஓரம் எல்லாம்
அமர்ந்திருக்கும்
அம்மனும் காளியும்
தான் எங்கு போனாள்?
இப்போ Gazza !
தினம் தினம்
கொல்கிறானே(West)
எங்கு போனான் Allah?
கத்தியை எடு,
இந்த நாத்தி அற்ற
கடவுள்களை எல்லாம்
வெட்டி வீழ்த்திட!
அந்த பாளை சீவும் கத்தியை கொடுடா.
சண்டியூர் பாலன்.
இன்று உன் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள ஆயிரம் பேர் இருக்கலாம்..
ஆனால் அன்று உன் துயரத்தை பகிர்ந்து கொள்ள நான் மட்டுமே இருந்தேன்..
அன்று உனக்கு ஆறுதல் கூறி உயர்ந்து எழ ஊன்று கோலாய் இருந்தேன்...
இன்று தேவையற்ற கோலாய் தூக்கி எறியப்பட்டேன்..
அந்த ஆயிரம் நபர்களும் உனக்கு பாராட்டு
தெரிவித்து இருக்கலாம்..
நீயும் இன்று அதில் மூழ்கி போகலாம் ...
மீண்டும் எழுந்து ஓட தொடங்கி விடு...
காரணம் ..உன்னை ஓட சொல்ல உன் அருகில் நான் இல்லை.. இருப்பினும்
நான் உன்னை விட்டு கடந்து செல்வதாய் இல்லை..
நீ விட்டு சென்ற இடத்தில் நின்று கொண்டு..
உன்னை ரகசியமாய் தொடர்ந்து கொண்டு ..
உன் முன்னேற்றத்தை ரசித்து கொண்ட
கண்ணீர் சிந்தும் போது
துடைக்க யாரும் வருவதில்லை..
கவலை கொள்ளும் போது
சிரிக்க வைக்க எவரும்
வருவதில்லை.. அறியாமல்
ஒரு தவறு செய்து பார்..
உன்னை விமர்சிக்க
இந்த உலகமே கூடி வரும்..!
நம்மை பற்றி கவலை
படாதவர்களுக்கு நாம்
சிந்தும் கண்ணீர்
அர்த்தமற்றது..!
உன்னை வெறுப்பவர்களை
நினைத்து கவலை கொள்ளாதே..
அவர்களுக்கு உன் அன்பை
பெற தகுதி இல்லை என
நினைத்துக்கொள்..!
கவலைகளின் அளவு
கையளவாக இருக்கும்
வரை தான் கண்ணீருக்கும்
வேலை.. கவலை
மலையளவு ஆகும் போது
மனமும் மரத்துப் போகும்..!
கடலளவு கண்ணீரை வடித்தாலும்…
நம் மனம் விரும்பாமல் எந்த
கவலைகளையும்
சரி செய்ய முடியாது..!
கவலையை மறைக
கண்கள் மூடும்போது
கனவு மறைவதில்லை.
இரவு தூங்கும்போது
எண்ணம் தூங்கவில்லை
தினம் தினம் கூத்துதான்
புதுவயல் நாத்துதான்.
நான்கு விழிகள் பேசும்
ஒரு கவிதையானது
நாடிநரம்பில் நுழைந்து
எந்தன் உதிரமானது.
நான் உனை பார்த்தது
பூர்வ ஜென்ம புண்ணியம்.
நீ எனை சேர்ந்தது
நான் செய்த பாக்கியம்
வா அருகே...நான் உருக
வாழ்வோம் வா பெண்ணே..
நீயும் நானும் சேர்ந்த
இந்த வாழ்க்கையானது
நீல வானம் போல
மிக நீளமானது
உன் மடி தேடினேன்
ஒரு சேயாகவே
நீ எனை தேற்றினாய்
ஒரு தாயாகவே
வா அழகே... நான் பழக...
சேர்வோம் வா பெண்ணே.
அன்புத் தோழியே...
ஒரு நாள் இடைவெளி....மன்னிக்கவும். முடிந்தவரை தினமும் தொடர்பில் இருக்க முயற்சிக்கிறேன். ஆதிகாலத்திலிருந்து புராண காலத்திற்கு வருவோம். ராமாயணம்...மஹாபாரதம்...இரண்டும் மாபெரும் இதிகாசங்கள். நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள். ஏனென்றால் அவை இரண்டும் நம் வாழ்க்கையை பேசியது...வாழ்வின் முறைகளை முறைப்படுத்தியது. காதலை சொன்னது..குடும்பத்தை காட்டியது..சொந்த பந்தங்களை அறிமுகப் படுத்தியது. அதில் நிறைந்திருக்கும் அன்பு...பாசம்...சூழ்ச்சி...துரோகம்...எல்லாவற்றையும் வகைப்படுத்தி நமக்கு காட்டிக் கொண்டிருக்கிறது. எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருந்தாலும் இன்று