என்றும் அவனுக்காக

இன்று உன் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள ஆயிரம் பேர் இருக்கலாம்..
ஆனால் அன்று உன் துயரத்தை பகிர்ந்து கொள்ள நான் மட்டுமே இருந்தேன்..
அன்று உனக்கு ஆறுதல் கூறி உயர்ந்து எழ ஊன்று கோலாய் இருந்தேன்...
இன்று தேவையற்ற கோலாய் தூக்கி எறியப்பட்டேன்..
அந்த ஆயிரம் நபர்களும் உனக்கு பாராட்டு
தெரிவித்து இருக்கலாம்..
நீயும் இன்று அதில் மூழ்கி போகலாம் ...
மீண்டும் எழுந்து ஓட தொடங்கி விடு...
காரணம் ..உன்னை ஓட சொல்ல உன் அருகில் நான் இல்லை.. இருப்பினும்
நான் உன்னை விட்டு கடந்து செல்வதாய் இல்லை..
நீ விட்டு சென்ற இடத்தில் நின்று கொண்டு..
உன்னை ரகசியமாய் தொடர்ந்து கொண்டு ..
உன் முன்னேற்றத்தை ரசித்து கொண்டு..
உனக்காக இறைவனை வேண்டி கொண்டு..
நீ வெறுத்தாலும் உன்னையே நினைத்து கொண்டு ..
உன் வருகைக்காக காத்து கொண்டு இருக்கிறேன்..
உன் சந்தோஷத்தை யாரிடம் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள் .
ஆனால் உனக்கு துயரம் என்றால் என்னிடம் வா..
காரணம் என்னை தவிர வேறு யாராலும் உன்னை புரிந்து கொள்ள முடியாது.

எழுதியவர் : கலைச்செல்வி கி (19-Dec-22, 4:54 pm)
சேர்த்தது : கலைச்செல்வி கி
Tanglish : endrum avanukkaga
பார்வை : 171

மேலே