நீ காவியமடி

கம்பன் எழுதாத காதல் ரசமா? - இல்லை
கண்ணதாசன் பாடாத காதல் வசமா?
கலைஞர் படைக்காத தமிழ் ஓவியமா? - இல்லை
வைரமுத்து கலங்காத கரிசல் காவியமா?
எதைப்படித்தாலும்...
எதை ரசித்தாலும்...
அத்தனையையும் உன்னில் காண்கிறேனடி.
அவர்களையும் மீறி நானும்
எழுதிப் பார்க்கிறேனடி..
வார்த்தைகளைத் தேடித் தேடி
எழுதுகிறேனடி...
உணர்வுகளின் குவியல்களில்
என்னிதயம் சிக்கி சின்னாபின்னம் ஆகுதடி...
ஒருசமயம் உயிர்ப்பாய் இருக்குமது
பலசமயம் ஒன்றுமில்லாமல் போகுதடி.
ரம்பா...ஊர்வசி...திலோத்தம்மை...
உன்முன்னே அவர்கள்
பூஜ்யமாய் பிசுபிசுத்துப் போனார்களடி...
படைப்புகளை பார்த்துப்பார்த்து
படைத்திடும் பிரமன்கூட
உன்னை படைக்கும்போது
பம்மி... பரிதவித்துப் போனான் என்று
நாரதன் கொளுத்திவிட்டு போனானடி..
எல்லார் கண்களும் எப்படியோ
என் கண்களுக்கு நீ ஓவியமடி...
என் இதயத்தில் நீ காவியமடி...

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (19-Dec-22, 10:14 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 168

மேலே