எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

  வாழ்க்கைப் பாடம் 16
-----------------------------------
ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரியத்தை செய்து முடிக்க நினைக்கும்போது அல்லது சாதிக்க விரும்பும்போது ​, அது நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோள் ,எண்ணம் இருப்பது தவறில்லை . ஆனால் சில வேளைகளில் அது கைகூடாமல் போகலாம் , தோல்வியைத் தழுவலாம் . அந்த நேரத்தில் மனம் உடைந்து , கவலையில் தோய்ந்து , வீழ்ந்துவிட்டதாக நினைக்கக் கூடாது . தோல்வியே வெற்றியின் முதல்படி என்று பலரும் கூறுவர் . நாம் எப்போதும் வெற்றியை எதிர்நோக்கி நடைபோடும்போது , தடைகளும் தவறுகளும் நேர்வது இயற்கை . 


நமது எண்ண ஓட்டமும் , செயலுக்கான பாதையும் , மாறிடக் கூடாது . வெற்றியை நோக்கி நாம்தான் ஓடவேண்டும் , மாறாக அது நம்மை பின்னால் துரத்தி வராது . வெற்றியும் தோல்வியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போலத்தான் . அதை மறக்கக்கூடாது .ஒரு நாணயத்தை சுண்டி விடும்போது ஏதாவது ஒரு பக்கமே நம் கண்ணில் தெரியும்படி விழும் . அது நாம் எதிர்பார்த்த ஒன்றாகவோ அல்லது மறுபக்கமாகவோ இருக்கலாம் . ஆனால் நாம் விரும்பும் அல்லது எதிர்பார்க்கிற பக்கம் தெரியும்படி விழும்வரை நாம் தொடர்ந்து அதை செய்வது போலவே தான் நாம் பெறும் வெற்றியும். 

அந்த முயற்சியில் நாம் என்றும் தொய்ந்து விடக்கூடாது .சிந்தை கலங்கி சோர்வடைதல் கூடாது .அரசியல் கட்சிகளில் ஏற்கனவே இருந்த , இப்போது இருக்கிற பல தலைவர்களும் அப்படி நினைத்து ஒதுங்கி அல்லது விலகி சென்று இருப்பார்களேயானால் , அவர்கள் இன்று தலைமை தாங்கும் நிலையை அடைந்தும் இருக்க மாட்டார்கள் , அவர்களை தலைவர்கள் என்றும் அழைக்கப்படவும் மாட்டார்கள் . 

இது அனைத்து துறைக்கும் பொருந்தும் . அனைத்துப் பருவத்தினர் மற்றும் எக்காலத்திலும் பொருந்தும் . அப்படியே தோல்வி அடைந்தாலும் அது ஒன்று பெரிய அவமானம் அல்ல ...அவ்வாறு நினைக்கவும் கூடாது . தோல்வியினால் பெறும் அவமானத்தால் இரண்டு நிலைகள் ஏற்படும் இயற்கையாக . ஒன்று அவமானம் மனதில் கோழைத்தனத்தை உருவாக்கி உயிரை மாய்த்துக் கொள்ளவும் மனம் நாடும் , மற்றொன்று அவமானத்தை அஸ்திவாரமாக மாற்றி, வெற்றியை ஈட்டிட அடித்தளமாக அமைந்திட உதவும் .முதலாவது கோழையை உருவாக்குவது அடுத்தது ஒருவன் வெற்றிப்பெற்று வீரனாக வாழ வழிவகை செய்கிறது .பல தலைவர்களின் , வீரர்களின் வரலாறு நமக்கு இதை ஒரு பாடமாக உணர்த்துகிறது என்பதும் , வருங்காலத்திலும் வளரும் தலைமுறைக்கு உணர்த்தும் என்பதிலும் ஐயமில்லை .


பழனி குமார் 
​ 13.12.2018​  

மேலும்

அருமையான பதிவு ... 13-Dec-2018 11:29 pm

இஞ்சி விநாயகர்
காலை வணக்கம் நண்பர்களே

மேலும்

     புறப்படு பெண்ணே!

பெண்ணே! உன்னை போதைப் பொருளாய் எண்ணும் சமூகத்தில் புதிய பாதை வகுக்க புறப்படு பெண்ணே!

பெண்ணே!இன்று, உன்னை வேடிக்கையாய் பார்ப்பவர்களை , நாளை, உன் வெற்றியைக்கண்டு வேடிக்கை பார்க்கச் செய்!

பெண்ணே! உன்னை தனித்து விட்டு சென்றவர்களிடையில், தலைநிமிர்ந்து தனித்துவத்தோடு வாழ்ந்து காட்டு!

பெண்ணே! உன்னால் என்ன முடியும் என்று எவர் கேட்டாலும், என்னால் எல்லாம் முடியும் என்று உரக்கக் கூறிடு!

பெண்ணே! இவ்வுலகே உன்னை எதிர்த்தாலும் கலங்காதே, உன்னை எதிர்க்கும் உலகை புறக்கணித்து பெண்ணை மதிக்கும் உலகை உருவாக்க புறப்படு பெண்ணே! 

மேலும்

முதல் காதல்

என் மனதில் தோன்றிய

   முதல் உணர்வு

என் உதடுகள் பேசிய

முதல் சொல்

என் இதயத்தில் தோன்றிய

முதல் காதல்

நான்   இருந்த

முதல் அறை

நான் படுத்த

முதல் மடி

நான் வாங்கிய

முதல் முத்தம்

என் இதய தேவதை

என் அம்மா

எத்தனை பிறவி எடுத்தாலும்

நீதான் என் அம்மா

மேலும்

நிலவென உன்னை நினைத்தேன்....
தினம்தோறும் கண்டு களித்தேன்....

கனவுக்குள் உன்னை விதைத்தேன்.....
ஓர்ஜென்மம்அதில் வாழ்ந்து முடித்தேன்....

கவிதையாய் உன்னை படைத்தேன்....
கைகள் ஓய்வுபெறா சத்தை அடைந்தேன்...

ராட்டினமாய் உன்னை வியந்தேன்...
அதில்சுற்றத்தானே என்றும் தவித்தேன்...

மேலும்

அனுமதி இன்றி
பெண்ணின்
அங்கத்தை ரசிப்பதும்
குற்றம்


மேலும்

    வண்ணத்துப்பூச்சி   


அழகிய வண்ணப்பூவில் அமர்ந்திருக்கும் 
வானவில் நீ 
நீ பூக்களை தொட்டுச்செல்வதால் என்னவோ 
பூக்களில் தேன் நிரம்புகிறது 
சிறு மல்லியில் உன் சிறகினை 
விரித்து அமர்ந்திருப்பாய் 
உன் அழகினால் அனைவரின் 
மனதை கவர்த்திருப்பாய்
பல வண்ணங்கள் கொண்டு 
ஓவியம் வரைந்தாலும்  
அவை உன் முன் தோற்றுப்போகும் 

விக்கி SA

மேலும்

நான் என் 

இதயத்தை தேடி தேடி அலைந்தேன் 
அது இறந்து போனது என்பதை மறந்து 

--- விக்கி SA 

மேலும்

  வாழ்க்கைப் பாடம் 15
********************


சாதி எனும் " தீ " முற்றிலும் அழிக்கப்பட வேண்டும். அந்தத் தீ மேலும் பரவாமல் இருக்க தடுக்க வேண்டும். உள்ளத்தில் கொழுந்து விட்டு எரியும் கணல் அணைக்கப்பட வேண்டும்.

மனிதன் தோன்றியதற்கு காரணம் ஆதாம் ஏவாள் என்று கற்பனையாக கூறும் இந்த உலகத்தில் சாதி மட்டும் எப்படி பிறந்தது என எவராலும் கூற  முடியவில்லை.ஒருகாலத்தில் சாதி மத பிரிவினை சமுதாயத்தில் அகற்ற வேண்டுமென முழங்கியது, களை எடுப்பது என்பது மாறி இன்று அரசியல் ஆதாயத்திற்காக என்று விஸ்வரூபம் எடுத்து வெட்டி வீழ்த்த வேண்டிய ஒரு மரமாகி நிற்கிறது. பாரதி காலத்தில் இருந்து இன்று வரை பலரும் இதை அறிவுரையாக, வேண்டுகோளாக எடுத்துரைத்தும் மாற்றம் ஏற்படவில்லை. விடியல் பிறக்கவில்லை. நமது நாட்டில் தான் பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்குவதில் கூட சாதி மதம் குறிப்பிட்டு இருக்கிறது என்று நினைக்கிறேன். முதலில் அதை ஒழிக்க வேண்டும். 


பிறப்பில் தொடங்கி இறப்பு வரை நீடிக்கும் இந்த கொடுமை, இனி என்று முற்றுப்பெறும் என்று தெரியவில்லை.இதை ஓரளவுக்கு கட்டுப்படுத்துவது தற்போது நடைபெறும் கலப்புத் திருமணங்கள் மற்றும் மறுமணங்கள் மட்டுமே. வளரும் தலைமுறை இனியாவது தமது உள்ளங்களில் சாதி மதம் என்ற வைரஸ் வராமல் தடுக்கவேண்டும். சமத்துவ எண்ணம் வளர வேண்டும்.


நான் கற்றுக்கொண்ட , அனுபவத்தின் வாயிலாக அறிந்துக் கொண்ட பாடத்தின் மூலம் உங்களுக்கு , உங்கள் நலத்தில், வளர்ச்சியில், மகிழ்ச்சியான எதிர்காலத்தில் மீதான அக்கறையுடன் கூறும் பாடம்.


பழனி குமார் 
09.12.2018  

மேலும்

  ஆணவக் கொலையால் தனது வாழ்வை இழந்தபின் மனம் தளராமல், வீழ்ந்து விடாமல் இந்த நல்லதொரு முடிவு எடுத்து மறுமணம் மூலம் மறுவாழ்வுக்கு வழி வகுத்துக் கொண்டு புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ள புரட்சி தம்பதியர் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். 

பழனி குமார்  

மேலும்

உண்மை அண்ணா மிக்க நன்றி 12-Dec-2018 8:46 pm
கெளசல்யாவின் மன உறுதியும் துணிச்சலையும் போற்றுதலுக்குரியது. 11-Dec-2018 11:54 pm
மேலும்...
மேலே