இதுதான் சமத்துவம் ! ~~~~~~~~~~~~~~~~~~~ சவுதி மக்களின் மற்றும்...
இதுதான் சமத்துவம் !
~~~~~~~~~~~~~~~~~~~
சவுதி மக்களின் மற்றும்
உலக முஸ்லிம்களின்
அன்பிற்கு பாத்திரமான
மன்னர் அப்துல்லா
இறைவனடி சேர்ந்து
விட்டார்!
இவ்வளவு....
புகழ் வாய்ந்த
ஒரு தலைவர் இறந்துள்ளார்.
ஆனால்...
சவுதியில் அன்றாட
நடவடிக்கையில்
எந்த மாற்றமும் இல்லை.
நம் ஊரைப் போல்
கடைகள் அடைக்க
நிர்பந்திக்கப்படவில்லை.
சாலைகளில்...
வாகனங்கள் எந்த
பயமும் இன்றி
வழமைபோல் செல்கின்றன.
மொத்தத்தில்
இவரது இழப்பு....
சவுதியின்
அன்றாட வாழ்வில்
எந்த மாற்றத்தையும்
ஏற்படுத்தவில்லை.
எல்லோருக்கும்
எங்கு
இறப்புக்கான
தொழுகை நடைபெறுமோ
அந்த இடத்தில்
இவருக்கும்
தொழுகை நடந்தது
எல்லோரையும்
புதைக்கக்கூடிய
பொது மைய வாடியில்( அடக்கஸ்தலம் )
இவரது உடலும்
அடக்கம் செய்யப்பட்டது
அடக்கம் செய்யப்பட்ட
இடத்தில்
மெரினா பீச்சில்
நாம் பார்ப்பது போல்
எந்த கட்டிடங்களும்
கட்டப்படாது.
வெறும்
மண்ணைக் கொண்டு
இவரது உடல் மூடப்பட்டது
இறப்புக்கு
முன்னால் தான்....
அவர் சவுதியின் மன்னர்.
இறப்புக்கு பின்னால்...
அவர்
நம்மைப் போல...ஒரு
சாதாரண மனிதன்தான்.
100 சதவீதம்
இஸ்லாமிய நாடாக இருந்தும்
இந்தியர்களை சாதி மதம் பாராமல்
தன் நாட்டிற்கு வரவழைத்து
வேலை வாய்ப்பு கொடுத்தவர்
...........................................................................
இவ்வுலகம் வெறும் வேடிக்கையும் விளையாட்டும் அலங்காரமுமாகும்.அதில் நீங்கள் மூழ்கி விட வேண்டாம். இந்த உலகு நிரந்தரமானதல்ல. அழிந்துவிடக் கூடியதே! நிலையானது என்னிடம் உள்ளது. நீங்கள் இவ்வுலக வாழ்க்கையை விரும்ப வேண்டாம்! (அல்குர்ஆன்)
“நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! (அல் குர்ஆன்)