அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்...! சில மாதங்களுக்கு முன் திரு....
அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்...!
சில மாதங்களுக்கு முன் திரு. மணிகன் என்ற மென்பொருள் பொறியாளர் மற்றும் குறும்பட இயக்குநர் தளத்தில் எனது கவிதைகளை படித்து, எனக்கு அவரின் குறும்படம் ஒன்றில் கவிதை எழுதுவதற்கான வாய்ப்பு கொடுத்தார்.
கவிதையும் எழுதிகொடுத்துவிட்டேன். படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
அந்த படத்தின் பெயர் : உயிரெழுத்து.
கவிஞர், எழுத்தாளர், ரசிகர் என்று மூன்றுவிதமான கதாபாத்திரங்களுடன் உலக குறும்பட போட்டி ஒன்றுக்காக எடுக்கப்பட்டது.
அடுத்து..!
இப்போது.
பிரபல திரைப்பட நிறுவனத்திலிருந்து எனக்கொரு அழைப்பு வந்திருக்கிறது.
இந்த தளத்தில் நான் பதிவு செய்த கதை ஒன்றினை திரைப்படமாக எடுக்க விரும்புவதாகவும் அதற்காக ஒப்பந்தத்தில் கையெழுத்திட என்னை அவர்களின் அலுவலகத்திற்கு அழைத்துள்ளனர்.
அந்த நிறுவனம் எது ? அந்த கதை எது ? ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேறிய பின்பு மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.
மேற்கண்ட இரண்டு வாய்ப்பினையும் நான் தேடி செல்லவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது தான் எழுத்து. காம் இன் வல்லமை..! இது தான் இந்த தளத்தின் மகிமை,,,!
எழுத்து. காம். எனது திறமைக்கான முகவரி என்றால் மிகையல்ல..!
எழுத்து . காம் என்ற இந்த இணையதளத்திற்கும் எழுத்து குழும இயக்குநர் மற்றும் நண்பர்களுக்கும் என் நன்றிகள்...!
நண்பர்களே..! உங்களுக்கான வாய்ப்பும் காத்திருக்கிறது இந்த தளத்தின் மூலமாகவே...! . உங்களோடு கைகோர்த்துக்கொண்டே நான் சாதிக்க விரும்புகிறேன்.
வாருங்கள் ..
அந்த பிரபலம் என்ற பலாச்சுளையில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்துவிடுவோம்...! :)
----------------------------------------------------------------
மீண்டும் சந்திப்போம்.. தோழர்களே...!
நன்றி !! நன்றி!! நன்றி !!
-இரா.சந்தோஷ் குமார்.