உலக கவிதை தினம்.... உலகத்தின் யோசனை இன்று உன்னைப்...
உலக கவிதை தினம்....
உலகத்தின் யோசனை
இன்று உன்னைப் பற்றியதாக
இருக்கும்...
எனது நமுத்த சமிஞ்சைகள்
தெளிவாகவே
அறிவுறுத்துகின்றன....
யாரேனும் ஒருவனுக்கோ ...
அல்லது.. யாவரிலும் ஒருவனுக்கோ
நீ
அட்சயப் பாத்திரமாகி இருக்கலாம்..
காதலுக்காய்
நீ இரண்டோ... நான்கோ வரிகளில்
புன்னகைத்திருக்கலாம்...
காட்சிக் குவியங்களின்
இடிபாடுகளில் நீ..
மூச்சுத் திணறிக் கொண்டும் இருக்கலாம்..
மரபுப் பிழைகளாகவும்
நவீனத் திருத்தங்களாகவும்
உன்னை வெளியீடு செய்திருப்பர்...
பிரெஞ்சு யுவதிகளின்
சிகையலங்காரம்... பிறிதோர் மொழிகளின்
நறுமணப் பரவலென...
சுகந்தங்கள் கக்கிக் கொண்டும்
இருக்கலாம்...
கௌரவக் கொலைகளின்
இறுதியாத்திரையில்
சோகங்கள் சுமந்து
பயணித்தும் இருக்கலாம்.....
எங்கும் வியாபித்து இருக்கிறாய்...
என்னை... எங்களை
வளர்க்கும்.. கவிதைக்கும்
கவிஞர்களுக்கும்
உலக கவிதைதின வாழ்த்துக்கள்.............!!!