கட்டாரி - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : கட்டாரி |
இடம் | : பட்டுக்கோட்டை. |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Jan-2013 |
பார்த்தவர்கள் | : 3708 |
புள்ளி | : 2885 |
உலகத்தில் பேசவைக்கப்பட்ட மொழி பேசுபவனல்ல... உலகம் பேசிய மொழி பேசுபவன்...
“மௌனம் கசியும் பாறைகள்”
***************************************
அதிகாலைப் பனிமேடை
குருவிகளின் கூட்டிசையில்
கௌசல்யா சுப்ரபாதம்
*
பச்சைமலைக் காடு
காட்டையே கட்டியிழுக்கிறது
வனவாசியின் கூப்பிடுகுரல்
*
கள்மரத்துப் பானைகளில்
சொட்டுசொட்டாய் வடிகிறது
தோட்டக்காரனின் தாகம்
*
வலையில் சிக்காத கடல்மீன்கள்
சிக்கிவிடுகின்றன
அவர்கள் பாட்டில்
*
யுகங்கள் கடந்துபோய்விடவில்லை
நின்றயிடத்திலிருந்தே வாழ்த்தும்
அருவிகள்
*
மஞ்சள் குருதியில்
மினுங்கும் மேனி
பொன்அந்தி மாலை
*
ஓடைகள் நதிகளாவதை
மலைத்து ரசிக்கின்றன
கசியும் பாறைகள்
*
அமாவாசை
ஒவ்வொரு பெண்ணும்
புரிந்துவைத்திருக்கிறாள்
புருவமத்தியில் ஒரு கைக்கூவை.
நல்ல கைக்கூ கிடைப்பது ஒரு வரம்.
என் தவம் இன்னும் முடியவில்லை
இதோ நதிக்கரையில்
நானும் என் கூழாங்கற்களும்..
________________________ 💐💐💐
தவிப்புக்குரலெழுப்பியபடி
தனித்துப்பறந்தது
நாரையொன்று நிலவொளியில்
_________________________
வழியனுப்பும் போதெல்லாம்
வலி தந்து நகர்கிறது
ஒரு பிரியமான சன்னல்.
_______________________
தும்பியின்
சிறகில் கண்டேன்
ஒரு ஜோடி வானம்.
_______________________
கைகட்டியிருந்தால்
சிலுவைகள்
இல்லை.
_____________________
நேற்றிரவு கட்டிக்கிடந்த ஆடு
இன்று பந்தியில் அச
குன்றுகளுக்கு இடையில்
நடமாடும் நதியினில் தீ
விடியலின் மிளிர்ச்சி. -1
நடக்க நடக்கத்
தெரிந்து மறைந்தும் போகிறது
கானல் நீர் – 2
குருடன் காட்டும்
கோல் வழியில் இன்னொருவன்
திறந்திருக்கிறது சாக்கடை -3
முகச்சவரம் செய்தேன்
குளித்து எழுந்தும் போகவில்லை
மன அழுக்கு – 4
கடற்கரையில் காதலர்கள்
என் மனத்திரையில் ஓடியது
நீலப்படம். – 5
சிறுவன் கையில்
சிறிய கண்ணாடித் துண்டு
சுவற்றில் சூரியநடனம் -6
மனவலைகள் எழுந்து
நுரையாக கனவில் விழுந்து
காத்திருக்கிறது காமம் – 7
தூரத்து இடியொலி
வங்காள விரிகுடாவில் வேட்டொலி
ஈழத்துப் போர்..-8
கரியதொரு முட்டை
இருளில் ஆழ்ந்து உறங்க
நடமாடும் நதிகள் - 16
----------------------------------------
மொட்டை மாடியில்
ஓய்வெடுக்கிறது
நிலா.
------------------------------------------------------------
வாழ வேண்டும்
சாவைத் தேடுகிறான்
சங்கூதுபவன்.
------------------------------------------------------------
சாலையோர நடை
தலை உரசும் பறவை
விழிக்கிறது மூடநம்பிக்கை.
------------------------------------------------------------
ஓரமாய் ஒதுங்கும் வாகனம்
முதுமை இளமையாய்
மண் குதிரையில் சிறுவன்.
------------------------------------------------------------
நடமாடும் நதி
மூழ்கியெழும்
திரவங்களினாலான.....!
அழகாயிருப்பதாய்
மொழிகிறேன்...ஏறிட்ட
விழிகளுமாய் நானொன்றும்
அப்படியல்ல என
இமைகள் துடித்து
ஏற்கிறாய்..... !
திமிரோடிருப்பதாய்
மொழிகிறேன்....ஏறிட்ட
விழிகளுமாய் நானொன்றும்
அப்படியல்ல என
இமைகள் துடித்து
மறுக்கிறாய் ....! இரண்டுக்குமான
ஒற்றை வித்தியாசம்
ஒருதுளி கண்ணீர்.....!!!
காதல் பகிரும்
பொழுதெல்லாம் தளும்பித்
திரண்டிருந்த உன்
விழிகளோடு
பார்வைகளால் காமம்
துய்த்திருந்த நாட்களை
சொல்லிக்கொடுக்க சொல்
நம்
படுக்கையறைக்கு.....!
புதுமண நாட்களின்
என் மார்பு ஈரங்கள்
சொல்லிக்கொடுத்து விடும்...
என் வீட்டில் நீ
எப்படி இருக்கிற
செழித்துப்படர்ந்திருந்தன
மைதானங்கள்...
பசியோடு ஓடிக்கொண்டிருக்கின்றன...
பந்தயக்குதிரைகள்.
எல்லா அடர்வனங்களிலும்
வழிதவறாது
பயணித்து விடுகிறது
ஒற்றையடிப் பாதை...
காதல் வாய்க்கப்பெறாதவர்களின்
நிலவறை அலமாரிகளுள்
இற்றுப் போகாமலிருக்கிறது ஒரு
கைக்குட்டை...!
கொன்றது மழை...
எப்படியும் பிழைத்திடுவோம்..
மிகச் சமீபமாகத் தேர்தல்...
நக்கீரனும் பாண்டியனும்
அறியாதே போயிருந்ததை
ஈசனுக்காவது தெரிவிக்கவேண்டும்...
மண்வாசனை..
அண்ணன் மகளைத்
தலைகோதி.. அக்காள் மகளிடம்
மீசை முறுக்கிவிடுகிறது...
பெண்ணியம்...
அடிமைகள்
ஆராதிக்கப் படுகிறார்கள்...
இன்னுமொரு இறகு
உதிர்த்துப் பறக்க
நடமாடும் நதிகள்.....பகுதி 2
>>>>>>>>>
முன்னுரை:
"நடமாடும் நதியொன்றை
கைகளில் அள்ளினேன்
விரலுக்கொன்றாய் நதிகள்"
.......அப்படி அள்ளியதில் கிடைத்த,
என் பத்து விரல்களின் வழியே பாயும் நதிகளைத்தான் காட்சிப் பிழைகள் (இன்றி/உடன்)
திசைக்கொன்றாய் கீழே வெவ்வேறு பெயர்களில் உலவ விட்டிருக்கிறேன்....
வாருங்கள் நதியாடுவோம்.....
1.கோனாகி
~~~~~~~~~~
இன்னுமா கண்டறியவில்லை
மந்தையில் தொலைந்த என்னை
எக் கடவுளும்.
*********
2. கருவாகி
~~~~~~~~~~
அப்பா அம்மாவுக்கான எழுத்தில்
வைக்க முடியவில்லை
ஒரேயொரு முற்றுப்புள்ளி....
******
3.ஊனாகி
~~~~~~~~~~
நூறு முத்தங்கள் தரு
ஹைக்கூ தொடர் - அறிவிப்பு 3
இந்த தொடரில் எழுத போகும் முதல் பட்டியல்:
- அகன் - (06-FEB-2016)
- ஆண்டன் பெனி - (07-FEB-2016)
- கவிஜி - (08-FEB-2016)
- ராஜன் - (09-FEB-2016)
- கருணா - (10-FEB-2016)
- சந்தோஷ் குமார் - (11-FEB-2016)
- பழனி குமார் - (12-FEB-2016)
- சுஜய் ரகு - (13-FEB-2016)
- ஜின்னா - (14-FEB-2016)
- கட்டாரி சரவணா - (15-FEB-2016)
- ஷ்யாமளா - (16-FEB-2016)
- மணிமீ - (17-FEB-2016)
- கனா காண்பவன் - (18-FEB-2016)
- ஷாந்தி - (19-FEB-2016)
- உமை - (20-FEB-2016)
- குமரேசன் கிருஷ்ணன் - (21-FEB-2016)
- ஜோசெப் ஜூலிசிஎஸ் - (22-FEB-2016)
- நிலா கண்ணன் - (23-FEB-2016)
- முரளி TN - (24-FEB-2016)
- கார்த்திகா AK - (25-FEB-2016)
- கவித்தா சபாபதி - (26-FEB-2016)
- மதிபாலன் - (27-FEB-2016)
- கருகுவெலதா - (28-FEB-2016)
- மனொரெட் - (29-FEB-2016)
- தர்மராஜ் - (01-MAR-2016)
- வேளாங்கண்ணி- (02-MAR-2016)
- புனிதா வேளாங்கண்ணி - (03-MAR-2016)
- இனியவன் - (04-MAR-2016)
- நாக ராணி மதனகோபால் - (05-MAR-2016)
- கயல்விழி - (06-MAR-2016)
- கே.விக்னேஷ் - (07-MAR -2016)
- ஆதிநாடா - (08-MAR -2016)
- செல்வ முத்தமிழ் - (09-MAR -2016)
- மு.ர - (10-MAR-2016)
- அனு ஆனந்தி - (11-MAR-20156)
- ஜெய ராஜ ரத்தினம் - (12-MAR-2016)
- எசேக்கியல் காளியப்பன் - (13-MAR-2016)
- விவேக் பாரதி - (14-MAR-2016)
- குருச்சந்திரன் கிருஷ் - (15-MAR-2016)
- ஸ்ரீ மதி மகாலட்சுமி - (16-MAR-2016)
- மணி அமரன் - (17-MAR-2016)
- அமுதா அமுதா - (18-MAR-2016)
- பனிமலர் - (19-MAR-2016)
- திருமூர்த்தி - (20-MAR-20156)
- சாய்மாரன் - (21-MAR-2016)
- உதயா சன் - (22-MAR -2016)
- சேகுவாரா கோபி - (23-MAR -2016)
- ராஜ்குமார் -(24-MAR -2016)
- காஜா - (25-MAR -2016)
- பொள்ளாச்சி அபி - (26-MAR -2016)
காட்சிப்பிழைகள்....................( காதல் காட்சிப்பிழைகள்)
காதல்
ஒரு மந்திர கோல் .....
இரண்டு இதயங்களை ....
ஒன்றாக்கி விடும் ....!!!
நெற்றியில் ...
குங்கும பொட்டு.....?
அப்பாடா - சாமி ....
கும்பிட்டு வருகிறாள் ....!!!
தேவனிடம் ....
பாவ மன்னிப்புக்கேட்கிறாள் ....
என்னிடமும் கேட்பாள் .....!!!
^^^
கனவு
நிஜத்தில் நிறைவேறாத ...
ஆசைகளை நிறைவேற்றும் ....
நீர்க்குமிழி .....!!!
திடுக்கிட்டு எழுந்தாள் ....
தாலியை கண்ணில் வணங்கி...
என்னை பார்த்தாள் ....!!!
இன்னும்
சற்று தூங்கியிருந்தால் ....
சொர்கத்தை.........
பார்த்திருப்பேன்....!!!
^^^
நீ என்னை ....
காத
கசல் கவிதைகள்.....19
நீ ஆடையாக இருக்கிறாய்
நான் நூலாக இருக்கிறேன்.. என்னுள்
சிக்காமல் நீ சிக்கிக்கொண்டு நான்.
கை பேசியில் அழைத்தேன் ஒவ்வொரு முறையும்
பேசியது நான் நீ பேசியது மவுனம்.
நீ பூ சூடிக் கொண்டு போனாலும் உன் வாசம்
என் நாசி வழி சுவாசித்துக் கொண்டிருக்கும் நீங்காமல்..
காதலை அழைக்க சிக்கிக்கொண்டோம்
நீயென்றும் நானென்றும்..
அது வந்ததும் இருதுருவங்களாகிப் போனோம்.
நான் உன்னோடு வம்பு பேசவரவில்லை
அன்போடு வாழத்தான் அழைக்கிறேன்.
நீ மின்னலைப் பிடிக்கிறாய் பயமில்லாமல்.. உன் கண்களுக்குள் இருக்கும் நான் பயத்தோடு துடித்துக் கொண்டிருக்கிறேன்
நான் மனதோடு ஒத்திகை பா