Rajesh Kumar - சுயவிவரம்

(Profile)



எழுத்து குழுமம்
இயற்பெயர்:  Rajesh Kumar
இடம்:  கோயம்புத்தூர்
பிறந்த தேதி :  09-Jul-1980
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Nov-2009
பார்த்தவர்கள்:  1033
புள்ளி:  52

என்னைப் பற்றி...

eluthu.com தளத்தை இயக்கும் ஹியாக்ஸ் (HIOX) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்

என் படைப்புகள்
Rajesh Kumar செய்திகள்
Rajesh Kumar - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-Dec-2015 7:17 pm

ஹயாக்ஸ்-HIOX நிறுவனத்தின் 11ஆம்ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் 
கவிஞர் புதுயுகன் அவர்கள் எழுதிய வின் ஞானம் என்ற படைப்பு சிறந்த படைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கவிஞர் புதுயுகன் அவர்களுக்கு பரிசுத் தொகை ரூபாய் 3000 மற்றும் ஒரு கேடயம் வழங்கப்படும்.

பரிசு பெற்ற கவிதை : வின் ஞானம் (pudhuyugan)

மேலும், கிழே குறிப்பிட்டுள்ள அனைத்து கவிதைகளும் சிறந்த கவிதைகளாகவே கருதப்படுகின்றது.
அவர்களுக்கும் எழுத்து சார்பில் கேடயம் வழங்கப்படும்.

வின் ஞானம் (T. Joseph Julius)
மீண்டும் மீண்டும் --போட்டிக்கவிதை (athinada)
மீண்டும் மீண்டும் (KR Rajendran)
விஞ்ஞானம் (Gopinathan Pachaiyappan)
வின் ஞானம் போட்டிக்கவிதை (C. SHANTHI)
வின் ஞானம் ஞானத்தை வெல் -போட்டிக் கவிதை -முஹம்மத் ஸர்பான் (Mohamed Sarfan)
விஞ்ஞானம் (கருமலைத்தமிழாழன்)

கவிதை சமர்பித்த அனைவருக்கு வாழ்த்துக்கள் மற்றும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இப்படிக்கு,
எழுத்து.காம்

மேலும்

நன்றி சிநேகமாய் புதுயுகன் 20-Dec-2015 11:57 pm
நன்றி சிநேகமாய் புதுயுகன் 20-Dec-2015 11:56 pm
மிக்க நன்றி குமரேசன்.! 18-Dec-2015 10:17 pm
மிக்க நன்றி..!! 18-Dec-2015 10:17 pm
Rajesh Kumar - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
16-Dec-2015 5:32 pm

எழுத்து நடத்திய கவிதை போட்டியில் இறுதி தேர்வு பட்டியலிற்கு முன்னேறி இருக்கும் கவிதைகள் உங்கள் பார்வைக்கு.

இதில் இருந்து ஒரு கவிதை பரிசுபெறும் கவிதையாக அறிவிக்கப்படும்.


வின் ஞானம் (T. Joseph Julius)
மீண்டும் மீண்டும் --போட்டிக்கவிதை (athinada)
வின் ஞானம் (pudhuyugan)
மீண்டும் மீண்டும் (KR Rajendran)
விஞ்ஞானம் (Gopinathan Pachaiyappan)
வின் ஞானம் போட்டிக்கவிதை (C. SHANTHI)
வின் ஞானம் ஞானத்தை வெல் -போட்டிக் கவிதை -முஹம்மத் ஸர்பான் (Mohamed Sarfan)
விஞ்ஞானம் (கருமலைத்தமிழாழன்)

மேலும்

போட்டியில் வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்... 17-Dec-2015 10:14 pm
அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.!! பரிசினை வெல்ல இருப்பவருக்கு இரட்டை வாழ்த்துக்கள்...!! 17-Dec-2015 10:10 pm
அனைவருக்கும் என் வாழ்த்துகள் .... வெற்றி பெரும் நபருக்கு .. சிறப்பு வாழ்த்துகள் ..... 17-Dec-2015 8:49 am
போட்டியில் பங்குப் பெற்றவர்களுக்கும் , வெற்றிப் பெற உள்ளவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாத்துக்கள்/.. எழுத்து நிர்வாகத்தினருக்கும் எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் 17-Dec-2015 8:36 am
Rajesh Kumar - எண்ணம் (public)
06-Dec-2015 5:42 pm

தமிழ் நாட்டில் மிகப்பெரிய மலை வர வாய்ப்பு உள்ளது
https://www.tufing.com/tuf/29002/guys-indian-ocean-is-at

மேலும்

Rajesh Kumar அளித்த எண்ணத்தில் (public) Thirumoorthi மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Dec-2015 11:26 am

எழுத்து மாத பரிசு போட்டி இந்த மாதம் முதல் சில மாதங்கள் நிறுத்தி வைக்கப்படும். 

உங்களுடைய கேள்விகளை சுருக்கமாக இன்று என்னிடம் கேட்கலாம்.

மேலும்

தங்களின் உடனடியான பதிலுக்கு மிக்க நன்றி..!! வலைதள இணைப்பு கிடைக்கப் பெறாததால் தாமதமான எனது நன்றிக்கு வருந்துகிறேன்..! 11-Dec-2015 4:14 pm
மிக்க நன்றி தோழமையே.......... 09-Dec-2015 12:15 am
நன் இத்தலத்திற்கு புதிது..இத்தலத்தின் பயன் மற்றும் ஏனைய விடயங்கள் பற்றி சொல்லி தரவும்ம்.. 08-Dec-2015 3:39 pm
மரபுக்கவிதை,புதுக்கவிதை,தாண்டி இப்பொழுது நவீனகவிதை என்ற ஒரு காலத்தில் நிற்கிறோம்..! கவிதைகளை சமர்பிக்கும் முன்பு புதுக்கவிதை,அம்மா கவிதை,இயற்கைக் கவிதை....,என்று உள்ள பட்டியல் வரியல் நவீனக்கவிதை என்பதையும் வைத்தால் மகிழ்வோம்...! எழுதுவோருக்கும் பிரித்துப்பார்க்கிற வசதி கிடைக்கும் ..! 07-Dec-2015 6:43 pm
ஜின்னா அளித்த எண்ணத்தில் (public) chelvamuthutamil மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Dec-2015 1:29 am

எழுத்து தள தோழர் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்,

இங்கே பதிய போவதை பார்க்காமலே 
தயவு செய்து யாரும் தங்களுடைய பகிர்வை பகிர்ந்து விடவோ அல்லது கருத்து பதிந்து விடவோ வேண்டாம்..

மேலும் 
இங்கு சொல்லப் பட்டவை யாரையும் புன்படுத்துவன அல்ல
இது வெறும் கற்பனையே என்று சொல்லும் முட்டாளும் நான் அல்ல...

மேலும்
வெறும் மொய்யெழுதும் வாசகம் மட்டும் அல்ல இது...
அதையும் தாண்டி யோசிக்க வைக்கும் ஒரு எண்ணம் இது...

இப்போது நாம் யோசிக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாகவே கருதுகிறேன்...
இதை இந்த தளத்தார்கள் தவறாக புரிந்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் நன்புகிறேன்..

பொதுவாக இங்கு வருபவர்கள் யாருக்கும் வேலை இல்லாமல் 
வெட்டியாக சுத்திக் கொண்டிருப்பவர்கள் வருவது இல்லை என்று நினைக்கிறேன்..
(இதில் வேலை தேடி கொண்டிருப்பவர்களை மதிக்கிறேன்... அவர்களை நான் சொல்ல வில்லை என்று 
சொல்லி கொள்கிறேன்... அப்படியும் வருகிறவர்கள்... இன்னும் பாராட்டுக்கு உரியவர்கள்..)

இப்படி 
குடும்பத்தின் ஆசைகளை துறந்து
வேலை பளுவை மறந்து 
இங்கு வருபவர்கள்
வெறும் வேடிக்கை மட்டுமா பார்க்க வருவார்கள்? இங்கு...

மாறாக என் தாய் மொழியில் ஒரு தளம் இருக்கிறது
அங்கு சென்றால் என்னால் முடிந்த வரை 
என்னால் கற்று கொள்ள முடியும் 
என்னால் இயன்ற வரை கற்றுக் கொடுக்கவும் முடியும் 
என்ற உயரிய நோக்கத்தில் வருபவர்கள்தான் அதிகம்...

இன்னும் நான் உறுதியாக நம்பிக் கொண்டிருக்கிறேன்
இப்படி பட்ட மொழி சிந்தனை அல்லது
மொழி பற்று உள்ளவர்கள்தான் இந்த தளத்தை இயக்கி 
கொண்டிருக்கிறார்கள் அல்லது இயங்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்  என்று
நம்புகிறேன்...

அப்படி வருபவர்களுக்கு இங்கு என்ன கிடைக்கிறது?

தமிழ் மேல் நாட்டம் இல்லாதவர்களுக்கு இந்த தளம் 
எப்படி வடிகாலாகும்?

அப்படி தமிழ் மேல் நாட்டம் இல்லாதவர்கள் இந்த தளத்தில்
புகுந்து வேறு திசை திருப்ப நினைத்தால் இதை
தளம் தாங்கி கொண்டாலும் இதில் படித்து ரசிக்கிறவர்வர்கள்
பொறுத்துக் கொள்வார்களா? என்பதே எனது கேள்வி?

இங்கு வருகிறவர்கள் யாரும் 
தவறான எண்ணத்தோடு வருவது கிடையாது....

வருபவர்கள் யாவரும் 
தமிழ் மேல் ஈடுபாடு கொண்டவர்கள்
அல்லது தமிழ் மேல் ஆர்வம் கொண்டவர்கள்...

அப்படி இருக்கும் போது 
ஒரு தனி நபர் தமிழை தரக்குறைவாக எழுதும் போது 
அல்லது பேசும் போது அந்த தமிழ் எதற்கு 
அல்லது இந்த தளம் எதற்கு?
என்று கேட்க தோன்றுமா இல்லையா?

இதில் இணைந்திருக்கும் பல பேருக்கும் தெரியும்
நாம் தமிழால் இணைந்திருக்கிறோம் என்று...

ஆனால் 
அந்த புனித தன்மை கெடுக்கும் வகையில்
ஒரு சிலர் நடத்தும் நாடகத்தில் எல்லோரும் நடிகர்கள் ஆகி விடுகின்றனர்...

இதில் கொடுமை என்ன வென்றால்
சில கதா நாயகர்களும் வில்லன்களாகி விடுங்கின்றனர்...

இங்கு வரும் எல்லாருமே தமிழை வளர்க்க வருகிறார்கள் 
என்று நினைத்திருந்தேன் ஆனால்
அதை தவிர்த்து எல்லாவற்றையும் வளர்க்க வருகிறார்கள் 
என்றால் இந்த இடம் அதற்கு பொருத்தமானதா?

இங்கு வரும் எல்லாருமே 
ஒரு விதத்தில் கலைஞர்கள்/இளைஞர்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்...

ஆனால் சில பதிவுகளை பார்த்த பிறகு
நாங்கள் இதில் எந்த பகுதியிலும் சேராதவர்கள்...
எனக்கும் தமிழுக்கும் ரொம்ப தூரம் என்பதாக இருக்கிறார்கள்...

அப்படி யோசிக்கும் சில தோழர் தோழமைகள்
வேறு எங்காவது சென்று தங்கள் மனக் குறையை தீர்த்து கொள்ளலாமே...
ஏன் எங்களிடம் அல்லது இந்த தளத்திடம் வந்து இச்சையை தீர்த்துக் கொள்கிறீர்கள்...?

நாங்கள் வேறு திசை நோக்கி பயணம் போகிறோம்
அதுவும் உங்களிடம் சொல்லி விட்டுதான்...
ஆனால் 
அது தெரிந்து கூட 
எப்படி தமிழ் வளர்ந்து விடும் ?
அதை எப்படி வளர விடுவோம்?
 என்று போட்டிக் கொண்டு வந்தால் எப்படி?

எந்த விமர்சனம் என்றாலும் நேருக்கு நேராக வையுங்கள்..
உங்கள் பெயரையும் ஊரையும் 
யாருக்கு மகன் என்றும் 
தெளிவாக சொல்லுங்கள்...

இதில் மூடி மறைக்க என்ன இருக்கிறது...
எனது அப்பா பெயரை சொல்ல 
எனக்கு எந்த தயக்கமும் இல்லை...
எனது அம்மா மொழி (தாய் மொழி) தமிழ் என்று சொல்ல
எப்போதும் நான் தயங்கியது இல்லை...
என் முகத்தை காட்ட எப்போதும் மறுத்ததில்லை...

பிறகு எதற்கு இந்த பிதற்றல்கள்?

உங்கள் சுய விவரத்தை காட்ட துணிவில்லாவதவர்கள் கையில்
எப்படி எங்கள் வருங்காலத்தை சமர்பிக்க முடியும்?

தமிழ் பேசும் எல்லோரும் ஒரு விதத்தில்
அண்ணன் தம்பிகள்தானே...
அல்லது சகோதர சகோதரிகள்தானே...
இதில் என்ன வெக்கம் இருக்கிறது... பெயரை மாற்றி வைத்துக் கொள்ள?

ஒரு வேலை பெயரை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்
அது தங்களுக்கு பிடித்த பெயராக இருக்கட்டும்...
அப்படி பெயரை மாற்றி வைத்து கொள்ளும்போது 
உங்களின் மொழியை மாற்றி வைத்துக் கொள்ள முடியுமா?

இங்கு 
யாரை திட்டுகிறீர்கள்?
யாரை குறை சொல்கிறீர்கள்?
யாரை விரட்டுகிறீர்கள்?
யாரை வெளி ஏற்றுகிறீர்கள் ?

ஒரு தமிழனுக்கே ஒரு தமிழன் இப்படி பட்ட செயல் செய்தால்
யார் தமிழனை காப்பாற்றுவார்கள்?
(இதில் எனது தாய் மொழி தமிழ் என்று பெருமையாக போட்டுக் கொள்வீர்கள்... 
அது வேற கதை )
ஆனால் வேறு எங்காவது இலங்கையிலோ அல்லது
வேறு எங்காவது தமிழருக்கு ஒரு பிரச்னை என்றால் 
எப்படி எல்லாரும் ஒன்று கூடுகிறீர்கள்? 
இது வெட்கமாக தோன்ற வில்லையா?

இங்கு வருபவர்கள் யாவரும் தங்களது 
எவ்வளவு சொந்த பந்தத்தை விட்டும்
தங்களது நேரத்தை செலவிட்டும் வருகிறார்கள்
என்று சொன்னால் புரியுமா உங்களக்கு?

அப்படி வந்து பார்க்கும் போது சில 
பதிவுகள் என் தாய் மொழியை களங்கப் படுத்தி எழுதி இருப்பதைக் கண்டு 
யாரால் பொறுமையாக இருக்க முடியும்?

ஒருவேளை அதையும் தாங்கி கொள்ளும் சக்தி
யாருக்காவது இருக்குமென்றால் அதை 
அவர்கள் தாயை தரக்குறைவாக பேசியவரையும்
மகான் என்று சொல்ல கூடும்....

தமிழ் மேல் உணர்வு கொள்ளாதவர்கள் 
இந்த தளத்திற்கு தகுதி இல்லாதவர்கள் என்று நினைக்கிறேன்...

அவர்களுக்கு பொழுது போக வில்லை என்றால்
ஏதாவது முகநூல் அல்லது அப்படி பட்ட சமூக வலைத்தளங்கள்
ஏராளமாக இருக்கிறது...

அதை விடுத்து 
இந்த தளத்தையும்(இங்கு மட்டுமல்ல) நம் தமிழையும் தயவு செய்து அசிங்க படுத்த வேண்டாம்...

எவ்வளவு பெரிய 
உலகம் போற்றும் மொழியை நாம் பேசுகிறோம் என அறியாதவர்கள்தான் தமிழர்கள் (நாம்) எனவும்...
தமிழை தமிழர்களாலே கெடுக்க படுவதாகவும் உலகம் நம்மை காரி துப்புகிறது...

இதற்கு எடுத்துகாட்டாக நாமும் இங்கு 
செயல் படுகிறோம் என்று நினைக்கும் போது 
மனம் வருத்தம்தான் அடைகிறது...

இதில் 
பெயர் மாற்றம் மட்டும்தான் ஒரு சுகம் என்றால்
எல்லோரையும் ஏமாற்றுவதுதான் ஒரு செயல் என்றால்..
எல்லோரையும் திட்டுவதுதான் ஒரு பழக்கம் என்றால்...
எல்லோரையும் கேவலப் படுத்துவதுதான் உங்கள் பொழுது போக்கு என்றால்...
எல்லோரையும் காயப் படுத்துவதுதான் உங்கள் எண்ணம் என்றால்...
அதற்கு தமிழை தயவு செய்து பயன் படுத்தாதீர்கள்...

அதற்கு வேறு தளம் இருக்கிறது
அதற்கு வேறு இடம் இருக்கிறது...

தளத்தார்க்கு ஒரு கேள்வி...

தளத்திற்கு உறுப்பினர்கள் ஆகாமல் 
கருத்து போட முடியாதல்லவா?
அப்படி ஒரு அருமையான முறை வைத்திருக்கும்போது
ஏன் உறுப்பினர் ஆகும்போது அவர்களின் ஆதாரத்தை (ID proof )
வாங்காமல் உள்ளே அனுமதிக்கிறீர்கள்...?

இப்போது இந்தியாவில் எதற்கு எடுத்தாலும் அதை கேட்கிறார்களே...

இப்படி பட்ட பிரச்சனையில் நாம் எத்தனை 
நல்ல எழுத்தாளர்களை இந்த தளம் இழந்து இருக்கிறது என்று
நான் சொல்ல தேவை இல்லை என்று நினைக்கிறேன்...

அது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் எனவும் கருதுகிறேன்...
அப்படி சிறந்த எழுத்தாளர்களை இழந்து விட்டு 
நாம் என்ன செய்ய போகிறோம் நாம் தனித்து நின்று...

ஒரு சம்பவம் உங்களுக்காக...

நமது மகாத்மாவை அரை நிர்வாண பக்கிரி என்று சொன்ன
வின்சென்ட் சர்ச்சில் (அன்றய ஆங்கிலேய அரசன்/தலைவன்)
ஆனால் அவரை பற்றி புரிந்து கொண்ட பிறகு எப்படி எல்லாம் 
மன்னிப்பு கேட்டான் என்பது நமது வரலாறு...

ஒரு தேசத்துக்கு எத்தனையோ தலைவன் வரலாம்
ஆனால் தேசத்துக்கு ஒரே ஒரு பிதாதான் அது நமது தேசப் பிதா காந்தி..

இங்கே திட்டியவனை இந்த உலகம் போற்ற வில்லை 
மாறாக 
மன்னித்தவனை அல்லது பொறுத்துக் கொண்டவனை 
இந்த தேசமே/உலகமே போற்றியது ஒரு மகாத்மாவாக....

இதை எதற்காக சொல்கிறேன் என்றால்

எல்லா நேரத்திலும் 
நீங்கள் அடிக்கும் போது கன்னத்தை காட்டுகிறோம்...
மீண்டும் நீங்கள் அடிக்கும் போது மறு கன்னத்தையும் காட்டுகிறோம்
ஆனாலும் நீங்கள் அடிக்கும் போதெல்லாம் 
கன்னத்தை காட்டுவதற்காகவே எங்கள் கன்னம் 
படைக்கப் பட்டதாக மட்டும் எண்ணி கொள்ளாதீர்கள்

வாழ்க தமிழ்
வளர்க தமிழர்கள்...

நட்புடன்...
ஜின்னா.

மேலும்

வாழ்த்துக்கள் ஜின்னா நல்லெண்ண பதிப்பிற்கு வாழ்த்துக்கள் தமிழை தாய்த்தமிழை அழகிய சொற்றொடர்களால் அலங்கரிப்பவர்களே மதிப்பு மிக்கவர்கள் - அதை பழகிய வார்த்தைகளால் அலங்கோலப்படுத்துபவர்கள் தமிழை நேசிக்க இயலுமா என யோசிக்க தோணுகிறது 17-Jan-2019 10:06 pm
வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள்... அருமை, நம் தாய் மொழியாம் தமிழோடு, தமிழர்களும் வளர்க - மு.ரா. 05-Feb-2017 11:13 am
மன்னிக்கவும் வேறு பக்கத்தில் பதிவிட வேண்டியதை மாற்றி பதிவிட்டுவிட்டேன் : 09-Dec-2015 7:35 pm
நான் மிகவும் கர்வம் கொள்கிறேன் !!! இப்படிப்பட்ட உறவுகளுக்குள் நான் ஒருத்தியாய் இருக்கிறன் என்பதில் ! தம்பி திருமூர்த்தி நீ நிச்சயம் வெல்வாய் ஜின்னா தோழரை போன்றோர் உன்னுடனிருக்கையில் ! 09-Dec-2015 7:32 pm
Rajesh Kumar - எண்ணம் (public)
06-Dec-2015 11:26 am

எழுத்து மாத பரிசு போட்டி இந்த மாதம் முதல் சில மாதங்கள் நிறுத்தி வைக்கப்படும். 

உங்களுடைய கேள்விகளை சுருக்கமாக இன்று என்னிடம் கேட்கலாம்.

மேலும்

தங்களின் உடனடியான பதிலுக்கு மிக்க நன்றி..!! வலைதள இணைப்பு கிடைக்கப் பெறாததால் தாமதமான எனது நன்றிக்கு வருந்துகிறேன்..! 11-Dec-2015 4:14 pm
மிக்க நன்றி தோழமையே.......... 09-Dec-2015 12:15 am
நன் இத்தலத்திற்கு புதிது..இத்தலத்தின் பயன் மற்றும் ஏனைய விடயங்கள் பற்றி சொல்லி தரவும்ம்.. 08-Dec-2015 3:39 pm
மரபுக்கவிதை,புதுக்கவிதை,தாண்டி இப்பொழுது நவீனகவிதை என்ற ஒரு காலத்தில் நிற்கிறோம்..! கவிதைகளை சமர்பிக்கும் முன்பு புதுக்கவிதை,அம்மா கவிதை,இயற்கைக் கவிதை....,என்று உள்ள பட்டியல் வரியல் நவீனக்கவிதை என்பதையும் வைத்தால் மகிழ்வோம்...! எழுதுவோருக்கும் பிரித்துப்பார்க்கிற வசதி கிடைக்கும் ..! 07-Dec-2015 6:43 pm
Rajesh Kumar - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
05-Dec-2015 12:01 pm

முதல் கட்ட நிவாரண பொருட்கள் ஹயாக்ஸ் (Hiox) கோவை நிறுவனத்தில் இருந்து ராம் நகர் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சென்னை மற்றும் கடலூர் பகுதியில் இருக்கும் நிவாரண முகாம்களுக்கு சென்றடைந்தது. எங்களுக்கு உதவிய தோழர்கள் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கிய மக்கள் அனைவருக்கும் எங்கள் உளம் கனிந்த நன்றிகள்.
First batch of relief materials from Hiox has been dispatched to transit point in Ram Nagar, Coimbatore and from there towards Chennai / Cuddalore relief We would like to thank all those volunteers and kind hearted people for
First batch of relief materials from Hiox has been dispatched to transit point in Ram Nagar, Coimbatore and from there towards Chennai / Cuddalore relief We would like to thank all those volunteers and kind hearted people for

மேலும்

கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
05-Dec-2015 3:41 pm

ஒரு அவசர தேவை : சென்னை மற்றும் கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உடனடியாக போர்வைகள் மற்றும் ஆடைகள் தேவைப்படுகின்றது. ஆகையால் உங்களால் இயன்ற அளவு புதிய அல்லது ஊபயோகப்படுதிய நல்ல நிலையில் உள்ள போர்வைகள் மற்றும் ஆடைகளை சேகரித்து எங்களது அல்லது உங்கள் அருகாமையில் உள்ள ஏதேனும் ஒரு வெள்ள நிவாரண உதவி மையத்தில் கொண்டு சேர்க்குமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு : 9500855422 (தேவராஜ் / கீதா)

முகவரி:
Hiox Softwares Pvt., Ltd.,
(பழனியப்பா கல்யாண மண்டபம் அருகில்)
No.7AF கணேஷா காம்ப்ளெக்ஸ் வளாகம்,
நீலிகோணாம்பாளையம் சாலை,
சிங்கநல்லூர்,
கோவை - 641005

இப்படிக்கு
எழுத்து குழுமம்

மேலும்

Rajesh Kumar - எண்ணம் (public)
30-Sep-2015 12:34 pm

7gQEwiMM99F3R39EEdRe

மேலும்

கீத்ஸ் அளித்த எண்ணத்தில் (public) Eluthu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-Sep-2015 3:57 pm

தாமி வித் தமிழ் (Selfie With Tamil) எண்ணம் போட்டி

பரிசு : 8GB விரலி (Pen Drive)
தாமி சமர்பிக்க இறுதி நாள் : 21/09/2015 திங்கட்கிழமை

எழுத்து தோழர்கள் தங்களது தமிழ் தாமிகளை எண்ணத்தில் பதிவு செய்து போட்டியில் கலந்துகொள்ளவும். சிறந்த தாமி வித் தமிழ் எண்ணத்திற்கு 8GB விரலி பரிசாக வழங்கப்படும்.

அதென்ன தாமி வித் தமிழ்?
ஒன்னும் இல்லங்க நீங்க எடுக்குற செல்பில தமிழ் கண்டிப்பா இருக்கனும்.
எடுத்துகாட்டு படம் மேல இருக்கு பாருங்க, உங்க தாமிகள எண்ணத்துல போடுங்க.

மேலும்

தாமி போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.... 19-Sep-2015 11:03 am
"தமிழ்" மொழியில் சொற்கள் ஏதேனும் இருக்கலாம் 19-Sep-2015 10:18 am
21/09/2015 திங்கட்கிழமை வரை 19-Sep-2015 10:13 am
தாமி போட்டி - வித்தியாசமான சிந்தனை. அருமை... வாழ ......வாழ்த்துக்கள்!!! . 19-Sep-2015 7:12 am
Rajesh Kumar - எண்ணம் (public)
17-Jul-2015 12:53 pm

தோழர்களே,

எழுத்து இந்த மாதம் 8,000,000 [என்பது லட்சம்] மொத்த பார்வைகளை தொடவுள்ளது.
இது ஒரு புதிய உச்சம்.

சராசரியாக, எழுத்து வரும் ஒருவர் ஒவ்வொரு முறையும் 26 பக்கங்களை பார்வையிடுகிறார்.

மேலும்

உள் நுழையும் ஒவ்வொருவரையும் தமிழில் பல உயரங்கள் தொடவைக்கிறது நம் தளம். அதற்கு நானே சிறு உதாரணம். இன்னும் பலரை உயரச்செய்யும் தளம் விரைவில் சிறு கால இடைவெளியில், கோடியைத் தொட்டு வெல்லும். 26-Apr-2016 10:21 pm
வாழ்த்துக்கள் ! 25-Apr-2016 10:16 pm
ஐயா மிக்க மகிழ்ச்சி, வாழத்துக்கள் எழுத்து குழுமத்திற்கு 28-Jul-2015 2:25 pm
மிக்க மகிழ்ச்சி, வாழத்துக்கள் எழுத்து குழுமத்திற்கு 24-Jul-2015 4:02 pm
கீத்ஸ் அளித்த எண்ணத்தில் (public) agan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
17-Jan-2015 3:36 pm

எழுத்து சுதந்திரத்தை ஆதரிப்போம்.
எழுத்தாளர் பெருமாள் முருகனை ஆதரிப்போம்.

மேலும்

பெருமாள் முருகன் சிறந்த எழுத்தாளர் . அவர் மீண்டும் எழுத வேண்டும். 29-Jan-2015 4:34 pm
பெருமாள முருகன் இப்போது உலக பிரபலம் ஆகி விட்டார். 24-Jan-2015 8:22 am
தனிப்பட்ட அறிவுரை வந்ததால் விரோதமில்லை என்பதை விளக்கினேன். இதிலும் விவாதம் வேண்டுமா? இப்படி செய்தால் இன்றைய கால கட்டத்திற்கு ப்ரிச்சனை வராது என்பது ஒரு வகை. இதில் உள்ள கட்டுப்பாடுகளின் எல்லை கோடுகள் விரிவடைய வேண்டும் என்பது ஒரு வகை. வேண்டும் என்றே பகைமையை உருவாக்கி அதில் குளிர் காய நினைப்பவருக்கு எங்கள் ஆதரவும் நிச்சயம் இருக்காது. 19-Jan-2015 11:44 am
* நானும் என்ன விரோத மனப்பான்மையிலா எழுதுகிறேன்? ** எழுத்தாளனுக்கு எழுத்துச் சுதந்திரம் வேண்டும் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்துக் கிடையாது. *** ஆனால் என்ன, தணிக்கையோடு கூடிய திரைப்படம் வேண்டுமென்கிறேன் நான்; சிலர் தணிக்கையே கூடாது என்கின்றனர். இங்கேதான் நான் மாறுபடுகிறேன். எழுத்தாளன் தன் எழுத்தைத் தானே தணிக்கை செய்துகொள்ள வேண்டும். **** ஒரு காலத்தில், ஒரு வட்டாரத்தில், ஒரு சாதியினர், இன்னொரு சாதியினரைத் தாழ்ந்த சாதியினர் என்று முத்திரை குத்தி, அத் தாழ்ந்த சாதிப் பெண்கள் இடுப்பிற்கு மேல் துணியே அணியக் கூடாது என்று கட்டளையும் இட்டுப், பார்த்துக் கேவலப்படுத்தி இரசித்தனர். இந்தச் சரித்திர உண்மையை ஓர் எழுத்தாளன், ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே படிக்கும் கட்டுரையில் சற்று விஸ்தாரமாக எழுதினால் எதிர்ப்பு வராது. ஆனால், வெகுஜனங்கள் படிக்கும் நாவலிலோ, கதையிலோ, இன்ன ஊரில், இந்தக் காலத்தில் இந்த ஜாதியினர், இந்த ஜாதியினரை, இப்படிக் கேவலப்படுத்தினர் என்று குறிப்பிட்டுச் சொல்வதோடு மட்டுமில்லாமல், அவர்கள் குனிந்தால் கோளம் தெரிந்தது; நிமிர்ந்தால் நெஞ்சம் தெரிந்தது என்று தனது கை வண்ணத்தையும் சேர்த்துக் காட்டினால், அந்தத் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இரத்தம் கொதிக்குமா, கொதிக்காதா? இப்படிப்பட்ட கருத்தை சாமான்ய மக்கள் முன் சொல்லும் போது நாசூக்காக நாகரீகமாகச் சொல்ல வேண்டும் எழுத்தாளன். இதுதான் என் கருத்து. இதைப் புரிந்து கொள்ளாமல், இதைச் சொல்லக் கூடாதா, எழுத்தாளனின் சுதந்திரத்தையே பறிககிறாயா என்றால், நான் என்ன சொல்வது? ... 18-Jan-2015 8:44 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (84)

தர்மராஜன்

தர்மராஜன்

கோபிசெட்டிபாளையம்
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
Shyamala

Shyamala

Pudukkottai
நித்யா சுப்ரமணியம்

நித்யா சுப்ரமணியம்

கோயம்புத்தூர்

இவர் பின்தொடர்பவர்கள் (84)

இவரை பின்தொடர்பவர்கள் (87)

Varsha

Varsha

Chennai
கார்த்திக்

கார்த்திக்

திருநெல்வேலி

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே