செ செல்வமணி செந்தில் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  செ செல்வமணி செந்தில்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  22-Aug-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  31-Jan-2015
பார்த்தவர்கள்:  879
புள்ளி:  628

என்னைப் பற்றி...

கவிதை பைத்தியம்

என் படைப்புகள்
செ செல்வமணி செந்தில் செய்திகள்
செ செல்வமணி செந்தில் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jun-2019 1:53 pm

கற்றையன் சாவுக்கு
ஒற்றை விளக்கேற்றி
இருள் சேலைக்காரி
என்னை அணிந்திருந்த தருணம்
அந்த நிசி...
- செ. செல்வமணி செந்தில்.

மேலும்

அருமை..!! 26-May-2020 4:55 pm
மு ஏழுமலை அளித்த போட்டியில் (public) Eluthu மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்

இரவு . . .

இரவு . . . ஓரழகிய
கரிய தேவதை - காதலர்களுக்கும்
கவிஞர்களுக்கும் போதைதரும்
காமமும் கவிதையும் கலந்து
களவாணிகளுக்கு
வேண்டியதெல்லாம் தரும்
கடின உழைப்பாளர்களுக்கு - கனிவான
உறக்கம் தரும் - மழலைகளுக்கு
நிலவினைக்காட்டி மகிழ்ச்சித்தரும்
கருப்புக்காட்டில் - நடைபோடும்
அழகிய தேவதை!
மு. ஏழுமலை [ 9789913933 ]

மேலும்

அய்யா நான் எனது கவிதையை எவ்வாறு போட்டி தொகுப்பில் இணைப்பது , 25-Jul-2019 5:15 pm
வானும் மண்ணும் மோகம் கொள்ளும் வேலையில் , போர்த்திக்கொள்ளும் போர்வை தான் இரவு. பார்ப்போரின் கண்களுக்கு இருளாய் தென்பட்டாலும் , நிலவு மட்டுமே அறியும் அதன் இன்பத்தை. 25-Jul-2019 5:05 pm
அன்புடையீர், இரவு என்ற கவிதை போட்டிக்கு நான் அனுப்பிய கவிதை சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகள் என்ற பகுதியில் பதிவிடவில்லை. காரணம் அறிய விழைகிறேன் . மு. ஏழுமலை. 02-Jul-2019 10:30 am
ஐந்து வரிகளுக்குள் இருக்கவேண்டும் அதற்கு சற்று அதிகமாகவும் இருக்கலாம் ஆனால் பத்துவரிகளுக்கு மிகாமல்; 11-Jun-2019 12:53 pm
ப திலீபன் அளித்த போட்டியில் (public) balagayathri மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்

பயணம் ஞானத்தை அடைவதற்கான வழிகளில் முக்கியமானது. அது நம் அறிவை விரிவாக்கவும், மனதின் ஆழத்தை அகலப்படுத்தவும், மனிதர்களின் மேல் அன்பு செலுத்தவும் தவறாமல் கற்றுக்கொடுக்கும்.

நம் வாழ்வியலில் ஏதேனும் ஒரு விதத்தில் பயணம் கலந்தே இருக்கிறது. அது நம் குடும்பத்தோடு கிளம்பி கோவிலுக்குச் செல்வதிலிருந்து, சொந்த பந்தங்களோடு சுற்றுலா செல்வது, பள்ளி - கல்லூரி சுற்றுலாக்கள், நண்பர்களோடான பயணம், நம் முன்னோர்களின் சுவடுகளை தேடிச் செல்லும் வரலாற்றுப் பயணங்கள், சுயத்தை கண்டடையச் செல்லும் தனிப்பயணங்கள், இலக்கற்றுப் கிளம்பிப் பயணிக்கும் பயணங்கள் என நீண்ட பட்டியல் கொண்டது.

உங்கள் பயண அனுபவங்களை, அதில் சந்தித்த ம

மேலும்

நன்றி 28-Dec-2017 8:57 am
மின்னஞ்சல் முகவரியை இங்கே பகிர்வதற்கான ஆப்ஷன் எழுத்து.காம்மில் இல்லை. அதனாலேயே உள்பெட்டியில் பகிர்கிறோம். மின்னஞ்சல் முகவரியை உங்களது உள்பெட்டிக்கு அனுப்பியிருக்கிறோம். நன்றி. 27-Dec-2017 3:36 pm
மின்னஞ்சல் முகவரியை இங்கேயே பகிரலாமே. 27-Dec-2017 1:52 pm
மின்னஞ்சல் முகவரியை உங்களது உள்பெட்டிக்கு அனுப்பியிருக்கிறோம். நன்றி. 26-Dec-2017 5:13 pm
செ செல்வமணி செந்தில் - பழனி குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
18-Dec-2017 11:00 pm

  ​அனுபவத்தின் குரல் - 52
---------------------------------------​


தற்போது சில தொலைகாட்சி ஊடகங்களிலும் நாளிதழ் சிலவற்றின் வாயிலாக நகர்ப்புற பகுதிகளில் சில குறிப்பிட்ட இடங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் பல்வேறு இடங்களிலும் உள்ள பள்ளிக்கூடங்கள் இன்றைய நிலையை அறிய முடிகிறது . மாநகராட்சியாக இருந்தாலும் சரி , நகராட்சி ,பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் ஆனாலும் சரி , பள்ளிக்கூடங்களை சரிவர நிர்வகிப்பதும் இல்லை . அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத கட்டடங்களும் கீற்றுக் கொட்டகைகளும் மட்டும் காண முடிகிறது . இன்னும் குறிப்பாக கூற வேண்டுமானால் சில பள்ளிக்கூடங்களில் கழிப்பறை வசதியும் இல்லாமல் மாணவ மாணவிகள் தவிக்கும் காட்சியை பார்க்க முடிகிறது . பலர் நேரில் கண்டு கூறியதும் உண்டு . பல இடங்களில் கிராமங்களில் கட்டிடமும் இல்லாமல் , கொட்டகையும் இல்லாமல் மரத்தடியின் கீழே நடக்கின்ற வகுப்புகளையும் பார்க்க முடிகிறது . நாடு சுதந்திரம் அடைந்து பல வருடங்களை கடந்தும் , விஞஞானம் வளர்ச்சி அடைந்தும் , வல்லரசு நாடு என்று கூறிக் கொண்டும் இந்த அவல நிலை தொடர்வது வெட்கக்கேடானது . மிகவும் வ்ருத்ததிற்கு உரியது .மருத்துவ வசதியும் கல்வி கற்க தேவையான அடிப்படை வசதியும் செய்து தர வேண்டிய , இன்னும் சொல்லப் போனால் இலவசமாக வழங்க வேண்டிய அரசாங்கங்கள் அதில் கவனம் செலுத்தாமல் இருப்பதும் அதை செய்து முடிக்காமல் இருப்பதும் கண்டனத்திற்கு உரியது .

தனியார் பள்ளிகளும் , கல்லூரிகளும் இன்று மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே உள்ளது . அவர்கள் ஈட்டுகின்ற கோடிகோடியாக பணத்தில் பத்தில் ஒரு பகுதி கூட ஏழை எளிய மக்களின் கல்விக்கென செலவிடப்படாமல் இருக்கிறது . விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில பெரிய கம்பெனிகளைத் ( Corporate ) தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் வறுமையில் உழலும் சமுதாயத்திற்கென எந்த உதவியும் செய்வதில்லை என்பது கண்கூடு . ஆனால் அரசாங்கம் அவர்களுக்குத்தான் எல்லா விதத்திலும் உதவிகள் செய்கிறது . அவர்கள் சொல்வதை , அவர்களுக்கு சாதகமாக சட்டங்களும் இயற்றுகிறது . இதில் அதிகம் பாதிக்கப்படுவது நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது .

மாட மாளிகைகளில் வாழும் சீமான்கள் , கோபுரங்கள் போல வீடுகளில் வசிக்கும் குபேரர்கள் , பண முதலைகள் , பெரிய தொழிலதிபர்கள் மற்றும் கொட்டிக்கிடக்கும் பணத்தில் படுத்துப் புரள்கின்ற அரசியல்வாதிகள் , புல்வெளியைத் தொடாமலேயே விண்வெளியில் மட்டுமே பயணம் செய்பவர்கள் இன்னும் வசதி பல்வேறு வசதிகள் படைத்த கோடீஸ்வரர்கள் அனைவரும் மனமுவந்து இடிந்து கிடைக்கும் பள்ளிகளை சீரமைத்ததால் , அடைப்படை தேவைகளை செய்து கொடுத்தால் , வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் கல்வி பெற வழிவகுத்தால் வல்லரசு நாடு என்று சொல்வதைவிட , கல்வியரசர்கள் நிறைந்துள்ள நாடு என்று போற்றப்படும் . நாடும் இமயமளவு புகழ் பெறும் என்பதில் ஐயமில்லை .


பழனி குமார்  

மேலும்

உங்கள் எண்ணத்திற்கும் முயற்சிக்கும் மகிழ்ச்சி, நன்றி, வாழ்த்துகள் .உங்கள் தொடர் வாசிப்பிற்கும் நன்றி . எனது நெஞ்சில் மண்டிக் கிடக்கும் விழைவுகளி எண்ணங்களை தொடர்ந்து நூறு அடையும் வரையில் எழுத உள்ளேன் .உண்மை அனைத்தும் எனது தீரா வேட்கைகள் 19-Dec-2017 6:50 am
போற்றுதற்குரிய இந்த படைப்பு பற்றி ஊடகங்கள் பத்திரிகைகள் மூலம் உலகத் தமிழ் மக்களிடையே பகிரவும் உலகத் தமிழ் மக்கள் அனைவரது உதவியால் நாம் காணும் கனவை நிறைவேற்ற ஆவண செய்வோம் தங்கள் படைப்புகளை உலகத் தமிழ் நண்பர்களுக்கு அனுப்பி தங்கள் கனவை நிறைவேற்ற உறுதிமொழி எடுத்துள்ளேன் பாராட்டுக்கள் 19-Dec-2017 4:26 am
செ செல்வமணி செந்தில் - செ செல்வமணி செந்தில் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Sep-2017 10:38 pm

பள்ளி வாகனம்
அதிகரித்து கொண்டே வருகிறது
நிலாக்குட்டியின் அழுகை.

மேலும்

நன்றி சர்பான் 20-Sep-2017 1:57 pm
அழகான சொல் பயன்பாடு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Sep-2017 11:35 am
செ செல்வமணி செந்தில் - செ செல்வமணி செந்தில் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Sep-2017 10:33 pm

என்
அனைத்து கவிதைகளுக்குள்ளும்
அனுமதியின்றி நுழைகிறாய்
நீ!

மேலும்

காற்றும் இதயத்திடம் அனுமதி கேட்டு நுழைவதில்லை தானே! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Sep-2017 11:29 am
மிக்க நன்றி 20-Sep-2017 9:47 am
உத்தரவின்றி உள்ளே வா ! உன்னிடம் ஆசை கொண்டேன் வா ! அழகோ அழகு ! 20-Sep-2017 4:42 am

கோழை நான்,
எதிலும் அரைகுறை
ஓர் முத்தமிட்டு
எனை முழுமையாக்கு
இப்படிக்கு
உன் காதல் அடிமை.

மேலும்

தங்கள் நட்பிற்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சர்பான் 18-Sep-2017 3:09 pm
அவள் இதயத்தில் அடிமை வாழ்க்கையும் இன்பமானது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Sep-2017 10:48 am
செ செல்வமணி செந்தில் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Sep-2017 10:38 pm

பள்ளி வாகனம்
அதிகரித்து கொண்டே வருகிறது
நிலாக்குட்டியின் அழுகை.

மேலும்

நன்றி சர்பான் 20-Sep-2017 1:57 pm
அழகான சொல் பயன்பாடு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Sep-2017 11:35 am
செ செல்வமணி செந்தில் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Sep-2017 10:37 pm

காதல் இதயம்
கடைசிவரை கிடைக்கவில்லை
முதிர்கன்னி.

மேலும்

பெண்களை விட காதலில் தோற்ற ஆண்கள் தான் ஏராளம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Sep-2017 11:32 am
செ செல்வமணி செந்தில் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Sep-2017 10:36 pm

கீரி பாம்பினை கடிக்கையில்
நின்று விட்டது
அதிகாலை வந்த கனவு.

மேலும்

எங்கும் எப்போதும் வன்மங்கள் உறைவிடம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Sep-2017 11:32 am
செ செல்வமணி செந்தில் - இதயம் விஜய் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
16-Jul-2016 4:47 pm

தோகை
விரித்து நீ பறந்தாய்...
என் மனதை
கவர்ந்து நீ சென்றாய்...
மயிலே
நான் மையல் கொண்டது
எதனாலே?......

மேலும்

மிக்க நன்றிகள் நண்பரே .... 07-Aug-2016 5:06 pm
அழகு ! 07-Aug-2016 1:54 am
தங்கள் கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றிகள் நண்பரே .... 17-Jul-2016 9:13 am
செல்விபிரியங்கா சண்முகம் அளித்த எண்ணத்தை (public) Anbumani Selvam மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
16-Jul-2016 7:33 pm

அன்புள்ள தோழர்களே..

        எழுத்து தளத்தில் நான் பலரது எழுத்துகளையும் எண்ணங்களையும் கண்டு வியந்ததுண்டு...
        உங்களில் பலருக்கும் பத்திரிக்கையாளராக, நிருபராக நாட்டிற்கு சேவை செய்ய விருப்பமுள்ளது என்பதையும் அறிவேன்...
        விருப்பமுள்ள தோழர்/தோழியர்களுக்கு வாய்ப்பு காத்திருக்கிறது....
        உங்கள் எழுத்துக்களையும் அதிலுள்ள உண்மையையும் தாருங்கள்....
        உலகிற்கு சில உண்மைகளை எடுத்து சொல்ல...
             -சந்தியா (சட்டப்படி குற்றம் முதன்மை எழுத்தாளர் )

மேலும்

எனக்கும் ஆர்வம் உண்டு. தொடர்பு கொள்ளவும். 16-Aug-2016 2:25 am
உங்களது முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..... 15-Aug-2016 11:31 am
தங்கள் நிருபராக நாட்டிற்கு சேவை செய்ய விருப்பமுள்ளது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் நன்றி ... 15-Aug-2016 6:02 am
தங்களின் என்னத்துக்கு = தங்களின் எண்ணத்துக்கு தட்டச்சு பிழை மன்னிக்கவும் 14-Aug-2016 1:54 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (434)

ஜி வி விஜய்

ஜி வி விஜய்

பரமக்குடி
ப தவச்செல்வன்

ப தவச்செல்வன்

திண்டுக்கல்
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
பூந்தளிர்

பூந்தளிர்

சிதம்பரம்

இவர் பின்தொடர்பவர்கள் (442)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை

இவரை பின்தொடர்பவர்கள் (436)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
விஷ்ணு பிரதீப்

விஷ்ணு பிரதீப்

திருமங்கலம்
தர்மராஜ் பெரியசாமி

தர்மராஜ் பெரியசாமி

திருச்சி / துபாய்

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே