வேலாயுதம் ஆவுடையப்பன் - சுயவிவரம்

(Profile)தமிழ் பித்தன்
இயற்பெயர்:  வேலாயுதம் ஆவுடையப்பன்
இடம்:  KADAYANALLUR
பிறந்த தேதி :  06-May-1950
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Jul-2015
பார்த்தவர்கள்:  12970
புள்ளி:  6728

என்னைப் பற்றி...

இந்திய ரயில்வே மருத்துவ துறை மருந்தாக்கியல் பிரிவில் 37 ஆண்டுகள் பணி செய்து 2011 ஒய்வு பெற்றுள்ளேன்
.மருந்தாக்கியல் துறை பட்டப்படிப்பு மதுரை மருத்துவக் கல்லூரியில் 1972 முடித்தேன். தனியார் துறையிலும், 1ஆண்டூ பணி புரிந்தேன் 1974 முதல் 2011 வரை இந்தியன் ரயில்வே மருத்துவத்துறையில் 37 ஆண்டுகள் பணி புரிந்து ஓய்வு பெற்றுள்ளேன் .தமிழ் இலக்கியம், சுற்றுலா ,வீர விளையாட்டு, .இதழியல், போன்ற பல துறைகளில் ஆர்வம் உண்டு . நன்றி வணக்கம்

என் படைப்புகள்
வேலாயுதம் ஆவுடையப்பன் செய்திகள்
வேலாயுதம் ஆவுடையப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jan-2020 8:54 pm

தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் ஆலயத்தில் பிப்ரவரி மாதம் நடக்கவிருக்கும் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வழக்குகளும் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. ஆனால், அது சாத்தியமா?

தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் ஆலயம் எனப்படும் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் பிப்ரவரி ஐந்தாம் தேதி குடமுழுக்கு நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தக் கோயிலில் பெருமளவில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கோயில்கள் ஆகம விதிகளின்படி கட்டப்பட்டவை. இந்தக் கோயில்கள் அனைத்திலுமே கடந்த ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக, ஆகம விதிகளின்படி

மேலும்

வேலாயுதம் ஆவுடையப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jan-2020 8:36 pm

தஞ்சை பெரிய கோயிலில் வரும் ஐந்தாம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. அது தமிழ் ஆகம விதிப்படி நடைபெற உரிய உத்தரவு பிறப்பிக்கக் கோரி திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த முறை குடமுழுக்கு எப்படி நடந்தது என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த இந்து சமய அறநிலையத்துறை வழக்கறிஞர் 1980 மற்றும் 1997ம் ஆண்டுகளில் நடந்த முறைப்படியே தற்போதும் குடமுழுக்கு நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
கடந்த முறை தமிழ் ஆகம விதிப்படியும், சமஸ்கிருதத்திலும் குடமுழுக்

மேலும்

வேலாயுதம் ஆவுடையப்பன் - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jan-2020 4:02 pm

பால காண்டம், நாட்டுப் படலத்தில் இயற்கையை கம்பர் மருதமாகிய மன்னன் அரசவையில் அமர்ந்து இருப்பதாக வர்ணிக்கும் காட்சி.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

தண்டலை மயில்கள் ஆட,
..தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க,
..குவளைகண் விழித்து நோக்க,
தெண்திரை எழினி காட்ட,
..தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட,
..மருதம்வீற் றிருக்கும் மாதோ. 4

- நாட்டுப் படலம், பால காண்டம், ராமாயணம்

பொருளுரை:

குளிர்ச்சி பொருந்திய பூஞ்சோலைகளில் மயில்கள் ஆடவும், தாமரை மலர்கள் விளக்குகளை ஏந்தி ஒளி தரவும், மேகங்கள் ஒன்ற

மேலும்

பேரா.அ.ச.ஞானசம்பந்தன், ’எதிரே கொலு வீற்றி ருக்கும் அரசி மருதாயி நாச்சி இக்காட்சியைக் கண்டு களிக்கிறாள்’ :--உரை படித்தேன் பகிர்ந்தேன் தொடரட்டும் நன்றி 26-Jan-2020 2:45 am
‘கம்ப ராமாயணக் கவி அழகும் நயமும் - 04 மருதம் கொலு வீற்றிருக்கும் மாட்சி விரிவான ஆய்வுக் கருத்துக்கள் படைப்புக்கு பாராட்டுக்கள் 26-Jan-2020 2:42 am
வேலாயுதம் ஆவுடையப்பன் - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jan-2020 3:58 pm

பால காண்டம், நாட்டுப் படலத்தில் ’மருத நிலத்தில், பல ஒலிகளும் தம்முள் கலந்து ஒலிப்பதை சுவையுடன் கம்பர் கூறுகிறார். கோசல நாட்டின் மருத நில வளமையையும், ஓரிடத்தில் எழும் ஓசை கொண்டு அவ்விடத்தின் இயல்பினை அறிந்து கொள்ள முடியும். கடலுக்கு உரிய சங்குகள் புது வெள்ளப் பெருக்கில் எதிரேறி மருத நிலத்திற்கு வந்தன.

தனித் தனியே பிறக்கும் ஓசைகள் பரவும்போது கலந்து ஒலிப்பதை ‘மாறு மாறு ஆகித் தம்மில் மயங்கும்’ என விளக்குகிறார். வெவ்வேறு பொருட்களில் இருந்து எழும் ஒலி வெவ்வேறு சொற்களாக - அரவம், அமலை, ஓதை, ஓசை, தமரம், துழனி – அறியப்படுகின்றன. இவை ஒரு பொருட் சொற்கள் ஆகும்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
(

மேலும்

எனக்கு தமிழின் இலக்கணங்கள் தெரியாது என்றாலும் அழகு அழகு....கம்பரின் கவிதையை (செய்யுளை) இரசிக்கும்போதே, பெருமூச்சுடன் இந்த அறிவியல் காலத்தில் இதை இழந்து கொண்டிருக்கிறோமோ என்ற கவலையும் தோன்றத்தான் செய்கிற்து. அழகை irasikkum 05-Feb-2020 9:00 am
‘கம்ப ராமாயணக் கவி அழகும் நயமும் - பாடல் 03 தம்மில் மயங்கும் மாமருத வேலி ---------------------------------------------------------------------------------------------------------------------------- ஓசை பாடலும் விரிவான விளக்கமும் போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் 26-Jan-2020 2:41 am
வேலாயுதம் ஆவுடையப்பன் - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jan-2020 3:43 pm

கலி விருத்தம்
விளம் விளம் மா கூவிளம்
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

அல்லினிற் களவுசெய் பவரை வெஞ்சிறை
யில்லிடும் பண்பினுக் கியைந்த மாக்களே
எல்லினில் எவரையு மேய்த்து வவ்வலாற்
கொல்லினும் போதுமோ கொடியர் தம்மையே! . 2

- கைக்கூலி
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

”இரவினில் திருட்டுத் தொழில் செய்யும் திருடர்களைத் தண்டித்து கொடிய சிறையிடும் சிறந்த பண்புடன் கூடிய முறைமன்ற நீதிபதிகளே!

பகல் நேரத்தில் எல்லோரையும் ஏமாற்றிக் கைக்கூலி வாங்குவதால், லஞ்சம் வாங்கும் கொடியவர்களைக் கொன்றாலும் அக் குற்றத்திற்குப் போதுமான தண்டனையாகுமா?” என்று கைக்கூ

மேலும்

இன்றைய கையூட்டு அரசியல் பற்றிய பாடலும் விரிவான விளக்கமும் போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் 26-Jan-2020 2:39 am
அரசின் எல்லாத் துறைகளிலும் கையூட்டு வாங்காமல் எந்தக் காரியமும் நடைபெறுவதில்லை; இதில் இந்த மதம், சாதி என்றில்லை; எல்லோரும் வாங்குகிறார்கள்; காவல்துறையில் பிடிபட்டாலும், நீதிமன்றம் சென்றாலும் முகத்தில் துண்டு போட்டு மறைத்து, சில நாட்களில் வெளியே வந்து விடுகிறார்கள். எல்லாவற்றிற்கும் விலையுண்டு. அவர்கள் குடும்பத்தாரும், மக்களும் காறித் துப்ப வேண்டும். 25-Jan-2020 3:47 pm
வேலாயுதம் ஆவுடையப்பன் - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jan-2020 3:39 pm

கலி விருத்தம் 1
(விளம் விளம் மா கூவிளம்)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

வலியினால் இலஞ்சங்கொள் மாந்தர் பாற்சென்று
மெலியவர் வழக்கினை விளம்பல் வாடிய
எலிகள்மார்ச் சாலத்தி னிடத்தும் மாக்கள்வெம்
புலியிடத் தினுஞ்சரண் புகுத லொக்குமே. 1

- கைக்கூலி
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”அரசியல், பதவி போன்ற அதிகாரத்தினால் லஞ்சம் பெறும் மனிதர்களிடம் எளியவர்கள் சென்று வழக்கைச் சொல்வது, பசியால் வாடிய எலிகள் பூனையிடமும், பிற விலங்குகள் புலியினிடமும் போய் அடைக்கலம் புகுவதற்கு ஒப்பாகும்” என லஞ

மேலும்

பாடலும் விரிவான விளக்கமும் போற்றுதற்குரிய படைப்பு இலக்கிய ஆய்வு தொடர தமிழ் அன்னை ஆசிகள் பாராட்டுக்கள் 26-Jan-2020 2:37 am
வேலாயுதம் ஆவுடையப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jan-2020 2:28 am

ஜெ ,

ஜனவரி 25 .01 2020 நேற்று நாம் அறையில் பேசியதன் தொடர்ச்சியாகவே இந்த கேள்விகளை முன்வைக்கிறேன், வாசகர் நிஷாந்தின் ‘இருத்தலியல்’ பற்றிய நீண்ட கேள்விக்கும், மாதவனின் ‘டின்னிடஸ்’ பற்றிய கேளிவிக்கும்,அதற்கு முன்னரும் உங்களிடம் கேட்கப்படட சில , கேள்விகளுக்கு, ‘ ‘இலக்கியம் படியுங்கள்’ நாவல் எழுதுங்கள் ‘கவிதை வாசியுங்கள் ‘ என்று மானுட சிக்கல்களுக்கு தீர்வாக ஒன்றை அல்லது ஒரு செயல்பாட்டை முன் வைக்கிறீர்கள். அவ்வாறே, நம் குருகுலங்கள், ஆசிரமங்கள், துறவிகள்,தங்களை நாடிவரும் ஒவ்வொருவருக்கும் ஒன்றை பரிந்துரை செய்கிறார்கள்.

தன்முனைப்பும், தன்னகங்காரமும் கொண்ட ஒருவனுக்கு, அவன் அடையப்போகும

மேலும்

வேலாயுதம் ஆவுடையப்பன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jan-2020 2:15 am

வணக்கம்

தகடூர் புத்தகப் பேரவையின் அறி(வு )முகம் 5

20 நூல்கள் அறிமுக விழா

26.01 2020

ஞாயிறு

மாலை 2 மணி

முத்து இல்லம்

ஆவின் ஜங்ஷன் அருகில்

தருமபுரி

சிறப்பு விருந்தினர் நீதிபதி க.ஆனந்தன்

அனைவரும் வருக

நன்றி.
தங்கமணி
மூக்கனூர்ப்பட்டி
E.Thangamani Teacher,
GH School,
Sandapatti,
Morappur Via,
Dharmapuri DT,
635305.

Cell:9442448322

மேலும்

வேலாயுதம் ஆவுடையப்பன் - Palani Rajan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Oct-2018 11:47 am

திருக்குறளில் கடவுள் வாழ்த்து
வெகுகாலமாக திருக்குறளை பொதுமறை என்றும், சிலர் அது சமணநூல் என்றும், இன்னும் சிலர் உருவ வழிபாடினை ஆதரிக்கா மதவாதிகள் அதுத் தங்களுக்கும் பொரு ந்தும் என்றும் கூறி உரிமைகொண்டாடி வருகிறார்கள். அதை யாரும் குறைகொள்ள முடியாது.ஒரு குறளில் மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்
என்பதைக் கருத்தில் கொண்டு சில சமணர்கள் அந்த வள்ளுவன் சமணன் தான் என்றனர். ஆனால் திருவள்ளுவன் ஒரு பெரிய சித்தர் என்பதை அவருடைய சித்த நூல் வாகடங்களான (காய) கற்பங்கள் 300 அதனினும் மேலான கர்ப்ப வழிமுறைகளைக் கூறும் வைத்தியம் 800 பஞ்சரெத்தினம் 5௦௦ ஏணிஏற்றம், திருவள்ளுவர் சோதிடம

மேலும்

நல்ல ஆய்வுக் கட்டுரை ,,, பலரின் சந்தேகங்களைத் தீர்க்கும் ,,,, "இறைநினைப்பில்லான் நம்பாதான் திருக்குறளின் இறை முதல் அதிகாரத்தை பிய்த்து எறிந்துவிட்டு மேடையில் மார்தட்டுவார்கள் " என்ற க வின் வார்த்தைகள் உண்மை ... 20-Jul-2019 8:24 am
நன்றி 19-Jul-2019 1:08 pm
மேற்கோள் காட்டிஎழுதி யில்லேன் -----எழுதி உள்ளேன் என்று இருக்க வேண்டும். இறைநினைப்பில்லான் நம்பாதான் திருக்குறளின் இறை முதல் அதிகாரத்தை பிய்த்து எறிந்துவிட்டு மேடையில் மார்தட்டுவார்கள் வள்ளுவர் சடாமுடி தரித்த சமண முனிவரா ? இல்லை வாசுகி எனும் அழகிய மனைவியுடன் இல்லறம் நடத்திய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஓர் உன்னத தமிழ்க் கவிஞன் என்றே நான் கருதுகிறேன் . அப்படியில்லையென்றால் காமத்திற்கு ஒரு தனி பால் ஒதுக்கி களவியல் கற்பியல் என்று இரு கூராக்கி இல்லற வாழ்வின் மகிழ்ச்சிகளை இனிமையாகச் சொல்லும் அகவிலக்கியத்தை இயற்றி இருக்க முடியுமா ? . புத்தகம் எழுதி வெளியிடுங்கள் . வெளியிடும் முன்னே அதை வழி மொழிகிறேன் . வாழ்த்துக்கள் ஆய்விலக்கியப் பிரிய பழனி ராஜன் . 19-Jul-2019 9:41 am
பேராசிரியருக்கு வணக்கம். தாங்கள் எழுத்துத் துறையிலில்லாத என்னுடைய கட்டுரையை படித்தமைக்கு நன்றி.. திருக்குறள் ஒருசமயம் நூலே என்று பல குறள்களை மேற்கோள் காட்டி ஒரு சிறிய புத்தகம் வெளியிட எண்ணம் கொண்டு எழுதி முடித்துள்ளேன். விரைவில் அது வெளி வரும்.. நன்றி வணக்கம். 19-Jul-2019 7:57 am
வேலாயுதம் ஆவுடையப்பன் - கொண்டலாத்தி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
09-Oct-2017 10:09 am

சலனம்.  

மேலும்

வேலாயுதம் ஆவுடையப்பன் - கொண்டலாத்தி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
19-Sep-2017 6:33 am

  நான்.

மேலும்

போற்றுதற்குரிய வரிகள் பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 21-Sep-2017 3:52 am
கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பழனி குமார் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
18-Sep-2017 12:33 pm

எண்ணம் காணொளி போட்டி

தோழர்களுக்கு வணக்கம்!
எழுத்து நடத்தும் எண்ணம் காணொளி போட்டி
தொடங்கும் நாள் - 18-09-2017
முடியும் நாள் - 27-09-2017


தோழர்களின் விருப்பப்படி போட்டி இறுதி நாள் 27 வரை நீடிக்கப் பட்டுள்ளது.

விதிமுறைகள்:
  • சமர்ப்பிக்கபடும் காணொளி உங்களது சொந்த காணொளியாக மட்டுமே இருத்தல் வேண்டும்.
  • காணொளி ஏதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலாம். கவிதை மட்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்பது இல்லை. தாங்கள் எடுத்த குறும்படம். நண்பர்களுடன் மகிழ்ந்த காட்சிகள், செல்ல பிராணிகளின் சேட்டை என்று எதையும் தாங்கள் சமர்ப்பிக்கலாம் .
  • ஒரு நிமிட காணொளி மட்டுமே சமர்ப்பித்தல் வேண்டும்.
  • சிறந்த காணொளி ஒன்றிற்கு ஒரு சிறப்பு பரிசு வழங்கப்படும்.

காணொளி சமர்ப்பிக்க:
  • எழுத்து எண்ணத்தில் உங்களது காணொளியை சமர்ப்பிக்க நீங்கள் உங்களது youtube பக்கத்திற்கு சென்று share பட்டன் கிளிக் செய்யவும்.
  • பிறகு Embed என்பதை கிளிக் செய்து. உங்கள் காணொளி கோடை காபி செய்யவும்.
  • அதன் பின், எண்ணம் பகுதிக்கு வந்து video icon கிளிக் செய்து கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் காபி செய்த கோடை paste செய்யவும்.
  • Add வீடியோ என்பதை கிளிக் செய்தால் உங்கள் காணொளி எண்ணத்தில் சேர்ந்துவிடும்.
  • உங்களது கானொலிக்கேற்ப தலைப்பு கொடுத்து எண்ணத்தை அனைவரும் பார்க்கும் படி பதிவு செய்யவும்.

இப்படிக்கு,
எழுத்து குழுமம்

மேலும்

நிச்சயம் நீட்டிக்கப்படும் 21-Sep-2017 3:42 pm
போட்டி நடைபெறும் காலத்தையும் கொஞ்சம் நீடிக்கலாமே! இதுவரை போட்டியின் விதிமுறைகளை தழுவி வெறுமனே மூன்று காணொளிகள் மட்டுமே பதிவாகி இருக்கிறது. 21-Sep-2017 11:40 am
மன்னிக்கவும் தோழரே! கண்டிப்பாக இன்று பிழை திருத்தும் செய்து அனைவரும் பதிவிடும் பாடி மாற்றி அறிவிக்கப்படும். 21-Sep-2017 10:53 am
மாற்றத்தை தான் எதிர்பார்க்கிறோம் ஆனால் எங்கும் எப்போதும் ஏமாற்றம் தான் அடைகிறோம். கடந்த காலத்தை நினைக்கும் போது நிகழ்காலத்தில் அவைகளை மீட்க முடியாது என்பதே உண்மை. இனி இருக்கின்ற சூழ்நிலையில் ஓர் ஆரோக்கியமான சூழ்நிலை இங்கு உருவாகுமா என்று என்னை போல் பலருக்கு சந்தேகம் இருக்கிறது. ஆனால் தனித்துவமான எண்ணங்களும் கட்டமைப்பும் இங்கு தான் இருக்கிறது என்பது தனித்துவமான அடையாளம். சுயமாக படைப்பாளிகள் செயற்படும் சுதந்திரம் எமது தளத்தில் தான் இருக்கிறது. நல்ல கவிதைகள் வறண்ட நிலம் போல ஆகக் கூடாது அவைகள் அருவிகள் போல் என்றும் பலரின் உள்ளங்களில் நீந்திக்கொண்ட இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். சுயநலம் என்று பலரும் நினைக்கலாம் ஆனால் என்னை புரிந்த ஒரு சிலர் நிச்சயம் அதனை வெறுப்பார்கள் என்பதே என் நம்பிக்கை. 21-Sep-2017 10:30 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (192)

மெல்பின் போஸ்

மெல்பின் போஸ்

பூவங்காபறம்பு
அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
தாமோதரன்ஸ்ரீ

தாமோதரன்ஸ்ரீ

கோயமுத்தூர் (சின்னியம்பா
சந்திர மௌலீஸ்வரன்-மகி

சந்திர மௌலீஸ்வரன்-மகி

பெரிய குமார பாளையம்,

இவர் பின்தொடர்பவர்கள் (201)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
தேவிராஜ்கமல்

தேவிராஜ்கமல்

மலேசியா

இவரை பின்தொடர்பவர்கள் (217)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே