திருக்குறளில் கடவுள் வாழ்த்து

திருக்குறளில் கடவுள் வாழ்த்து
வெகுகாலமாக திருக்குறளை பொதுமறை என்றும், சிலர் அது சமணநூல் என்றும், இன்னும் சிலர் உருவ வழிபாடினை ஆதரிக்கா மதவாதிகள் அதுத் தங்களுக்கும் பொரு ந்தும் என்றும் கூறி உரிமைகொண்டாடி வருகிறார்கள். அதை யாரும் குறைகொள்ள முடியாது.ஒரு குறளில் மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்
என்பதைக் கருத்தில் கொண்டு சில சமணர்கள் அந்த வள்ளுவன் சமணன் தான் என்றனர். ஆனால் திருவள்ளுவன் ஒரு பெரிய சித்தர் என்பதை அவருடைய சித்த நூல் வாகடங்களான (காய) கற்பங்கள் 300 அதனினும் மேலான கர்ப்ப வழிமுறைகளைக் கூறும் வைத்தியம் 800 பஞ்சரெத்தினம் 5௦௦ ஏணிஏற்றம், திருவள்ளுவர் சோதிடம் போன்ற கிடைக்கும் நூலைப் படித்திட திருவள்ளுவனுக்கும் அயன் மாலுக்கும் முருகன், விநாயகனுக்கும், சரஸ்வதிக்கும், இலக்குமிக்கும், அம்பிகைக்கும் என்ன உறவு என்பதைக் கடவுள் வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தன்னுடையக் குறளிள் உலகத்தார்க்கு வேண்டி ஈரடியில் எழுதியதாகவும் மற்ற பல நூல்களை வாமிகளுக்காக எழுதியதாகக் கூறியுள்ளார் .ஆகவேத் தான் குறளை பொதுவாக உலகிலிருக்கும் எல்லா மக்களும் படித்துப் பயன் பெரும் வகையில் எல்லோர்க்கும் பொருந்தும்படி எழுதி படைத்துள்ளார். அவர் ஆழ்ந்த சிவபக்தர் என்பதாலேதான் தமிழர்கள் அவரைத் திருவள்ளுவ நாயனார் என்றழைத்தாரகள். இதை எல்லோரும் உணரவேண்டும். அவர் ஆழ்வாரோ, ஜீனரோ, உருவ வழிபாட்டை மறந்தவரோ அல்ல என்பதை நினைவில் கொண்டு பேசவேண்டும்.பழம்பெரும் சிவத் தொண்டர்களை, நாயனார், நாயன்மார்கள், என்றழைப்பது தமிழர் மரபாகும்.

திருக்குறளில்

I -- 2. வது பாட்டில் ஓருவன் என்ன படித்திருந்தும் வாலறிவன்யெனும் கடவுளின் தாளைத் தொழாதான் ஒன்றுக்கும் உதவான்.. மக்களிடம் வாதம்பேசி திரிவான்

கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு என்றார் ஔவையார் , ஆனால் தான் எல்லாமும் கற்று ஆராய்ந்தவன் போல கடவுளை நிணைக்காதவர்கள் மக்களின் மனதில் இல்லாததையும் பொல்லாததையும் ஊசியால் ஏத்திப் பேசி மக்களைக் கெடுத்து தொலை தூரத்திற்கு அழைத்துச் சென்று விட்டார்கள். மக்கள் எதையுமே ஏற்க மறுக்கும் உண்மத்த நிலையில் மயங்கிப் போயிருக்கிறார்கள். மக்களில் பலரும் பைத்தியங்களாகித் திரிகின்றார்.இன்னும் சிலநாளில் வான் புகழும் பெருஞ் சித்தாம் வள்ளுவனையும் எதிர்க்க ஆரம்பிக்கும் நாள் வெகுத் தொலைவில் இல்லை. கடவுளை எதிர்த்தவனுக்கு வள்ளுவன் எம்மாத்திரம். இவன் இன்னும் சிலநாளில் சங்கப்புலவர்கள் முதல் சங்க வளர்த்த மன்னர்களென எல்லோரையும் திட்டி தனிமையாகிப் போவதும், பைத்தியமாவதும் நிச்சயம்.II 3 வது பாட்டில் கடவுளின் மிகப் பெரியத் திருவடியை வணங்காதவன் பிறவி யெனும் பெருங்கடலை நீந்திக் கரை சேரமாட்டன்
மானடி கடவுளைத்தவிர வேறு எவர்க்குமில்லை. அந்தத் திருவடியைச் சேர்த்தல் வேண்டும். அப்படி சேராதவன் ஆத்மா எனும் பிறவிப் பெருங்கடலை நீந்தானாம். அகத்தியர் பரிபாஷை 500 என்னும் நூலில் மனிதனின்பிறப்பு எப்படி என்பதை விளக்குகிறார். கடல் போன்ற பரமாத்மாவில் ஒரு ஆத்மா இருப்பின் வினை யெனும் மேகம் அதை முகர்ந்து மழையின் பல்லாயிரம் துளிகள் போலபல பிறப்புகளாக பிறப்பை ஏற்படுத்தும். அதிலிருந்து மீள முடியாது மீண்டும் மீண்டும் பிறக்கநேரிடும் என்கிறார். ' பிரம்மாவும் விஷ்ணுவும் காண முடியாத பரமனின் அடியைச் சேர கடலெனும் பிறப்பை ஒழிக்கலாம்" என்பதே கருத்து.

III 4. வது பாட்டில் கடவுளுக்கு வேண்டியவன் வேண்டாதவன் கிடையாது . அப்படிப்பட்ட இறையின் காலை வணங்க துன்பம் மென்பதே யில்லாமல் போகும்.கடவுளுக்கு இவன் வேண்டியவன் இவன் வேண்டாதவன் என்பது கிடையாது. எல்லோரையும் ஒன்றுபோல் நினைப்பார். ஆகவே நாம்தான் அவர் காலடியைச் சேர்த்தல் வேண்டும். அப்படிச் சேர நமக்கொரு போதும் துன்பம் என்பது அருகில் வராது அது ஓடி ஒளியுமாம்.

IV 7 வது பாட்டில் யாரையும் உதாரணம் காட்ட முடியாக் கடவுளின் பாதங்களைச் சேர மனதில் ஒரு கவலையும் தோன்றாது விலகி ஓடும் .யாருடைய பாதமும் எந்த மனிதனின் அடியும் கடவுளின் பாதத்திற்கு இணை ஆகா. சில மூடர்கள் சொல்வார்கள் நான் அவரைப் பின்பற்றுகிறேன் இவரைப் பின் பற்றுகிறேன் என்பர். அவரணைவரும் மூடாத்மாக்களே. தன்னிகரிலாக் கடவுளின் பாதத்தை சிரம் மேல் வைத்துத் தொழுதல் வேண்டும். அப்படியாயின் நம் மனதில் கவலைகள் நில்லா தோடுமாம்.


V. 8 வது பாட்டில் அளவிடமுடியா ஆற்றலை பெற்ற உயர்ந்த கடவுளின் காலை வணங்காதவன் பொருளுடன், இன்பம் எனும் இரு கடல்களையும் நீந்திக் கடக்க முடியாது .
கடவுள் அளவிடமுடியா ஆற்றல் கொண்டவர் அகவே அவருடைய காலடியைச் சேரப் பொருளாசையுடன் இன்பமெனும் பேராசையும் நீங்கும் . இல்லாவிடின் இந்த இரண்டு ஆசை யெனும் கடல்களையும் கடக்கமுடியாது அதிலேயே மூழ்கிப்போவான் என்பதாம்.

VI 9வது பாட்டில் எட்டு குணங்களாகிய 1 தன்வயத்தனாதல்,2 தூய உடம்பினான்
3 இயற்கை உணர்வனாதல், 4 முற்றும் உணர்தல் (யெவர் பேச்சும் எண்ணங்களும்)
5 இயல்பாக ஆசை இல்லாதவனாக இருத்தல்,6 பேரருள் உடையவன் ,
7 முடிவிலா ஆற்றல் உடையவன், 8 வரம்பிலா இன்பம் உடையவன் கடவுள். அவன் தாளை வணங்காதவன் எவனோ அவன் ஐம்புலன்களாகிய மெய் வாய் கண் மூக்கு செவி இருந்தும் அவை பயனற்று இருப்பதற்கு ...ஒப்பாம்.

VII. இறைவன் பேரடியை சேராதவன் பிறவி எனும் பெருங்கடலை நீந்திக் கரை சேர மாட்டான். பிறப்பும் இறப்பும் இரு விணைக் கேற்ப கோடிக்கணக்கில் பிறவி
தொடர்ந்துவரும் .பரமாத்மாவுடன் என்றும் சேரமுடியாது என்பதாம். பரமாத்மாவி லிருந்து எடுத்த சென்மம் எங்கிருந்து வந்ததோ அங்குபோய் சேராது.

வள்ளுவர் கடவுளுக்கு உருவம் இருக்கிறதா இல்லையா என்பதை விளக்க முற்படவில்லை என்று சொல்பவர்களே கடவுள் வாழ்திலுள்ள பாடல்கள் 7 யும் படியுங்கள். வள்ளுவர் கடவுள் பாதத்தை சிக்கென பிடிக்க வேண்டும், அதனால் என்னென்னப் பயன்கள் என்பதனையும் விளக்குகிறார் பரமாத்மாவின் காலை விஷ்ணுவும், தலையை பிரம்மனும் தேடிப் பார்க்கச் சென்ற புராணக்கதை, நாமறிந்ததே. ஆகையால்தான் வள்ளுவர் இறைவனுக்கு மானடி என்கிறார்.

திருவள்ளுவர் கடவுள் இருப்பதைச் சொல்கிறார் அவருடைய குறளில் தாள் அடி பாதம் கால் ஏனெப் பல விதமான காலின் விளிப் பெயர்களையும் விளக்குகிறார். இன்னும் விளங்காத வர்க்கு விளக்குதல் வீணாம்.


திருக்குறளில் இறைவனைப் பற்றிச் சொல்லவில்லை சிவனைப்பற்றிச் சொல்லவில்லை என்பவன் முழுப்ப் பூசனியை சோற்றில் மறைப்பவனுக்கு ஒப்பாம். ஏன், திருவள்ளுவர் தான் எழுதியத் திருக்குறளில் தமிழ் என்ற வார்த்தையைக் கூட பயன் படுத்தவில்லை ஆகையால் திருக்குறளை வேறு மொழியிளிருந்துக் காப்பி யடித்தார்கள் என்றுகூட சில வெறிபிடித்தப் பைத்தியங்கள் கூறலாம். ஆனால் அது உண்மையாகுமா? ஆகாது..

மேலும் திருவள்ளுவர் திருக்குறளிலேயே இந்திரனையும், குபேரன் வருணனையும், அக்னித் தேவனையும் , எமனையும், சீதேவி எனும் இலக்குமியையும் அவள் தங்கை மூதேவியையும் கூடக் கூறுவதிலிருந்து தமிழர் வணங்கும் பரம்பொருளான சதாசிவத்தின் திருவடியையேக் குறிப்பிடுகிறார் எனபது வெள்ளிடைமலை எனலாம்.

திருவள்ளுவர் மாபெரும் சித்தாம். கொங்கணச் சித்தர்,( முனிகள்) திருவள்ளுவர் மனைவி வாசுகியிடம் கொக்கென்று நினைத்த னையோ கொங்கணவா? என்றசொல் கேட்டு அவமானப் பட்டார் என்பர். வள்ளுவர் இல்லறத்தார்க்கு 1330 குறளும் ஞானிகளுக்கு ஞானவெட்டி, காயகற்பம் 300 வைத்தியம் 800 பஞ்சரத்தினம் 500 சோதிடம் இன்னும் பல நூல்கள் எழுதியுள்ளார்கள்.

எழுதியவர் : பழனி ராஜன் (4-Oct-18, 11:47 am)
பார்வை : 185

மேலே