கலங்காதே தோழி
கலங்காதே தோழி !
—
கலங்காதே தோழி
காதலொரு சூதாட்டம்
மயங்காதே நீயும்
மனதிலென்ன போராட்டம் /!
இளவயதின் நட்புகளோ
ஏமாற்றம் தந்திடலாம்
இளகாது சிந்தித்தால்
ஏற்றவழி தென்படுமே !
உளம்வெதும்பி தஙறான
முடிவுகளைத் தேடாதே
களம்உனதே கண்டிப்பாய்க்
கண்டிடுவாய் வெற்றிகளே !
ஒருவனையே மணந்தேநீ
உவகையுடன் வாழ்ந்திடலாம்
திருமணமும் புரிந்தேதான்
குடும்பமெனத் திகழ்ந்திடலாம் !
- யாதுமறியான் .