தீபாவளி வந்ததம்மா
தீபாவளி வந்ததம்மா
அதிகாலை வேளையில் நிம்மதியாக உறங்கும் பொழுது
ஆகாயத்தில் ஒளியோடு ஓசையுடன் வெடி சத்தம் வந்திட
இருளைப் போக்கி பூச்சட்டியும் மத்தாப்பும் ஒளியூட்டிட
ஈன்ற அன்னையவள் கைசூட்டில் எண்ணையைத் தலையேந்த
உயரத்தில் தெரியும் வர்ணசாலங்கள் விண்ணிற்கு களையூட்டிட
ஊவகையுடன் சுடுநீர் எடுத்து சிகைக்காய் கலந்து குளிக்கையில்
எங்கும் எரியும் தீபம் வான் நட்சத்திரங்களை நினைவூட்ட
ஏற்றிய தீபங்களை புத்தாடை அணிந்து அழகாய் வைத்து
ஒளிவீசும் தீபங்கள் வான் நட்சத்திரம் போல் கண்சிமிட்டிட
ஓசையுடன் வெடிகளும் பூச்சட்டியும் மத்தாப்பும் களையூட்ட
அழகாக வைத்த அறுசுவை பண்டங்கள் அழைப்பு மணிஅடிக்க
புன்னகை முகம் காட்டி உறவுடன் புத்துணவு தனை சுவைத்ததிட
தீபத்தின் ஒளி எங்கும் கொண்டு தீபாவளி வந்ததம்மா கொண்டாடிடவே

