மல்லிகையை சூடிவந்த பொல்லாதவளோ நீ சொல்

அழகியல் :--
முல்லைமலர்ப் பந்தலில் முத்துச் சரம்தொடுத்த
மெல்லிதழ் புன்னகையில் நற்றமிழ் தேன்சுமந்து
மல்லிகையை போட்டியாக மென்குழலில் சூடிவந்த
பொல்லா தவளோநீ சொல்

ஆன்மீக இயல் :--
முல்லைமலர்ப் பந்தலில் முத்துச் சரம்போல
மெல்லிதழ் புன்னகையில் நற்றமிழ் தேன்சுமந்து
நல்லதிரு வாசகத்தை நாவினால் பாடிடும்
நல்லெழில் பாவையோ நீ

எழுதியவர் : கவின் சாரலன் (14-Oct-25, 9:26 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 33

மேலே