உன்னை நிச்சயம் தொடர்வது உன் நிழல் ஒன்றுதான்

உன்னை நிச்சயம் தொடர்வது
உன் நிழல் ஒன்றுதான்
உச்சி நேரத்தில் அதுவும்
உன்னைத் தொடராது
எத்தனை பேர் என்னைத் தொடர்கிறார்கள்
என்று எத்தனை முறை திரும்பிப் பார்ர்க்கப் போகிறாய்
ஒரு நாள் ஒன்றல்ல இரண்டல்ல
ஓராயிரம் பேர் உன்னைத் தொடர்ந்தாலும்
உன்னால் திரும்பிப் பார்க்க முடியாதே !!!

எழுதியவர் : கவின் சாரலன் (25-Oct-25, 5:46 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 32

மேலே