கவின் சாரலன் - சுயவிவரம்

(Profile)தமிழ் பித்தன்
இயற்பெயர்:  கவின் சாரலன்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  15-Jul-2011
பார்த்தவர்கள்:  15440
புள்ளி:  14796

என் படைப்புகள்
கவின் சாரலன் செய்திகள்
கவின் சாரலன் - ஸ்பரிசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jul-2020 3:12 pm

______======_____=====

திங்கள் 21.2019 மாலை 6.30

அவள் வீட்டுக்கு போனபோது தன் பயண ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தாள்.

ஸ்பரி...என்று ஆர்வமாய் கூக்குரலிட்டாள்.

ஆலப்புழை பற்றிய இணையக்குறிப்புகள் சேகரிக்கப்பட்டு ஒழுங்குடன் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

ஒவ்வொன்றாக பார்த்தபடி இருந்தேன்.

அவளை மெள்ள ஆதுரத்துடன் அழைத்தேன்.

என்ன என்பதை போல ஒரு பார்வை.

"நாம் திருமணம் செய்து கொள்வோமா?"

அவள் அடக்கவொட்டாது சிரித்தாள்.

"நீங்கள் இப்படி கேட்பது எட்டோ அல்லது ஒன்பதாய் கூட இருக்கலாம். ஏதேனும் தோழியின் வாட்ஸப் கருத்து வந்ததோ?"

அவள் சிரிப்பு அடங்கவில்லை. இந்த விஷயத்தில் நான் எப்போதும்

மேலும்

கதை மாதிரி திரும்புகிறது அடுத்த பதிவில் Back to squire one ஆ ? 14-Jul-2020 9:22 pm
கவின் சாரலன் - Palani Rajan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jul-2020 8:35 am

ஈசன் புகழ்

கலிவிருத்தம்நீச ரெம்மை சுற்றி யிருநதிட
தேச மக்கள் முன்னே றமுடியா
பேசும் பேச்சால் ஆகார் தமிழரும்
ஈசன் புகழைப் பேசும் தமிழரே

மேலும்

தம்பி கவின்சாரலருக்கு வணக்கம். படித்தமைக்கும் கருத்துக்கும் நன்றி. 15-Jul-2020 7:50 am
கலிவிருத்தம் அருமை 14-Jul-2020 9:14 pm
கவின் சாரலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jul-2020 6:06 pm

முள்ளில் விழுந்தது ஆடை
மெல்ல எடுக்க முயன்றேன்
எடுக்கையில் கையில் குத்தியது முள்
இரத்தம் சிந்தியது
சிந்திய ரத்தம் வெள்ளை நிறத்துப்பட்டாவில்
சிவப்புக் கறையாய் படிந்தது
ஒரு துப்பட்டாவிற்காக இவ்வளவு ரத்தம்
சிந்தத் தேவையில்லை என்றாள்
ஆம் சிந்தத் தேவை இல்லைதான்
ஆனால் துப்பட்டா அணிபவளுக்கா
இரத்தம் என்ன உயிரையும் சிந்தலாம் என்றேன்
அவள் அர்த்தத்துடன் பார்த்தாள் !

மேலும்

கவின் சாரலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jul-2020 11:01 am

நீலம்
வானத்தின் அழகிய புன்னகை
நீலம்
கடல் அலைகளின் ராக ஆலாபனை
நீலம்
உன் காதல் விழிகளின் மௌனக் கவிதை !

மேலும்

கவின் சாரலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jul-2020 9:51 am

காலையில் எழுந்து
தேநீரை அருந்தியவாறு
செய்திகளை வாசிக்க
கொரோனா நாட்களில்
செய்தித் தாள்கள் இல்லை
புல்வெளியினில் பனித்துளிகள் சொல்லும்
மௌனக் கவிதைகளை ரசிக்கிறேன் !

மேலும்

கவின் சாரலன் - வீரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jul-2020 6:55 am

கண்களில் தாக்கினால் 💞
***
பெண்ணே ...! கடவுள் உன் கண்களில் ஈட்டி வைத்தானோ
என்னவோ...?

நீ என்னை பார்க்கும் ஒவ்வொரு பார்வையிலும் என் இதயத்தில்
ஈட்டி பாய்கிறது...

மேலும்

நிச்சயமாக வாழ்த்துக்கள் கவிப்பிரிய வீரா 15-Jul-2020 9:46 am
தங்கள் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி தோழமையே...இனி வரும் படைப்புகளில் திருத்துக்கொள்கிறேன்... இது போன்ற கருத்துக்களை தந்து எங்களை மேன் மேலும் கவியாக செதுக்கவேண்டும் ... 15-Jul-2020 6:23 am
கண்களில் தாக்கினால் ----இல்லை கண்களால் .... என்றிருக்க வேண்டும் . 14-Jul-2020 9:38 am
வீரா என்றால் கத்தி கவடா என்றுதான் எழுத வேண்டுமா ? மை தீட்டிய அழகிய விழிகளால் ஏன் ஈட்டியைப் பாய்ச்சுகிறாய் ? வீரனடி நான் எதிர் கொள்வேனேடி ! காலங்கள் மாறி அறிவியலால் ஆயுதங்களும் மாறிவிட்டன புதிய உவமைகளைப் பயன்படுத்தலாமே ! இரு விழிகளையும் AK 47 ஆக்கி ஏன் இதயத்தைத் துளைக்கிறாய் ? 14-Jul-2020 9:33 am
கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jul-2020 11:06 pm

ஓடையில் மிதந்து வந்த ரோஜாக்கள்
உதிர்ந்த போது
ஓடை மலராடை போர்த்தி
அசைந்து அசைந்து அழகில் நடந்தது !

மேலும்

"அழகில் " அருமையான விளக்கம். --கோவை சுபா 14-Jul-2020 12:00 pm
அழகாக என்பது யதார்த்த வழக்கு ; அழகில் என்பது இலக்கிய அழகு. பொருள் ஒன்றுதான் . வரிகளை வாய்விட்டுப் படியுங்கள் ஆரம்ப வரியில் உள்ள ஓடையில் என்ற சொல்லுடன் அழகில் ஓசையில் இயைந்து ஒலிக்கும் . மீண்டும் படித்துப் பாருங்கள் . இந்த மாதிரி கருத்துரைக்கும் போது மேலும் எழுத வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. அழகிய இலக்கியபூர்வமான பரிந்துரைக் கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய கோவை சுபா 14-Jul-2020 9:11 am
வணக்கம். ஓடையில் ரோஜா...அருமை. அழகில் என்பதை விட "அழகாக நடந்தது" என்றால் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து... --கோவை சுபா 13-Jul-2020 11:39 pm
கவின் சாரலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jul-2020 11:06 pm

ஓடையில் மிதந்து வந்த ரோஜாக்கள்
உதிர்ந்த போது
ஓடை மலராடை போர்த்தி
அசைந்து அசைந்து அழகில் நடந்தது !

மேலும்

"அழகில் " அருமையான விளக்கம். --கோவை சுபா 14-Jul-2020 12:00 pm
அழகாக என்பது யதார்த்த வழக்கு ; அழகில் என்பது இலக்கிய அழகு. பொருள் ஒன்றுதான் . வரிகளை வாய்விட்டுப் படியுங்கள் ஆரம்ப வரியில் உள்ள ஓடையில் என்ற சொல்லுடன் அழகில் ஓசையில் இயைந்து ஒலிக்கும் . மீண்டும் படித்துப் பாருங்கள் . இந்த மாதிரி கருத்துரைக்கும் போது மேலும் எழுத வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. அழகிய இலக்கியபூர்வமான பரிந்துரைக் கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய கோவை சுபா 14-Jul-2020 9:11 am
வணக்கம். ஓடையில் ரோஜா...அருமை. அழகில் என்பதை விட "அழகாக நடந்தது" என்றால் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து... --கோவை சுபா 13-Jul-2020 11:39 pm
கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jul-2020 11:23 am

விருந்துண்ண வந்த வண்டினை
இதழ் இலை விரித்து வரவேற்றது மதுமலர்
மலர் நெஞ்சில் மதுவருந்தி உறங்கிப் போனது வண்டு !
மண்ணில் உதிர்ந்து விழுந்தது மலர்
உறக்கம் கலைந்த வண்டு வருந்தி
இரங்கல் பா ஒன்று பாடி
கண்ணீரில் பிரியா விடை கொடுத்துப் பறந்தது !

மேலும்

கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jul-2020 10:50 am

ம்மா ம்மா என்று
தவழ்ந்து வந்த குழந்தையை
அள்ளி எடுத்து முத்தமிட்டாள் தாய்
அம்மா ...அம்மா என்று
ஆனந்தத்தில் சிரித்தது மழலை !

மேலும்

கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jul-2020 10:29 am

புன்னகை மாயத்தை
எங்கு கற்றாய்
புத்தகத்தில் கவிதையாய்
எழுதினால்
வானவில்லாய் மாறி
நெஞ்சில் வண்ணம் தீட்டுதடி !

புன்னகை மாயத்தை எங்குநீ கற்றாயோ
புத்தகத் தில்கவிதை யாய்நான் எழுதிட
வானவில்லாய் மாறிஎன் நெஞ்சமெல் லாமெழில்
வண்ணங்கள் தீட்டு தடி !

-----இன்னிசை வெண்பாவாக

மேலும்

கவின் சாரலன் - Samyuktha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Jul-2020 12:37 am

இடர்தனில் சுடர்விடு

நான் விளக்கின் ஒளியையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
பார்க்க பார்க்க எனக்குள் ஒளி புகுந்து என்னை மேம்படுத்தி கொண்டிருந்தது.
" எனக்குள் இருக்கும் இறையே ,
உனை நான் உணர்வது முறையே
உனை நான் உணர்வதனாலே என் வாழ்வும் உயர்ந்திடும் மென் மேலே "
என்ற வரிகள் எனக்குள் வந்த வண்ணம் இருந்தது.
இன்று பிரதாப் என்னிடம் பேசுவதாக சொன்னான். என்ன பேசப்போகிறான் என்று என்னால் யூகிக்க முடிந்தது. அவன் எனக்கு நல்ல நண்பனும் கூட. என் வீட்டின் அருகில் வசிக்கிறான். நண்பனாய் நிறைய உதவிகள் செய்கிறான். என் வீட்டில் நான், என் வயதான தந்தை, என் மாமனார், மாமியார் மற்றும் என் குழந்தைகள் வாழ்கிறோம்.

மேலும்

வாழ்க்கை பயணமதில் ஒரு சில இடங்களை கடந்து விட்டால் அடுத்த நிலைக்கு முன்னேற நம்மை பழக்கிக்கணும் பிரதாப்" – என்றாள் மீரா ------சிறப்பான அறிவுரை குழந்தைகளுக்கு நாம் முன்மாதிரியாக இருக்கவேண்டும் நம் கலாச் சாரத்தின் மதிப்புகளை நாமே காற்றில் பறக்க விட்டு விடக்கூடாது என்பதை அழுத்தமாகச் சொல்லும் சிறப்பான கதை , பாராட்டுக்கள். 11-Jul-2020 11:47 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (390)

இவர் பின்தொடர்பவர்கள் (391)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (399)

காளியப்பன் எசேக்கியல்

காளியப்பன் எசேக்கியல்

மாடம்பாக்கம்,சென்னை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image

பிரபலமான எண்ணங்கள்

மேலே