கவின் சாரலன்- கருத்துகள்

த் வராது தட்டச்சு செய்யும்போது கவனிக்காது விட்டுவிட்டேன்

புணர்ச்சிப்படி எழுத்துவதானால் சொல்லியற் றேனும் என்று எழுதவேண்டும்
பல்+ பசை =பற்பசை
சொல்+ தேன் = சொற்றேன்

மனமுவந்து சொன்ன கருத்தில் பாராட்டில்
மிக்க மகிழ்ச்சி
மிக்க நன்றி கவிப்பிரிய கோவை சுபா

அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ் என்று சொல்வார்கள்
அன்பபையும் அளவுடனே தரவேண்டும் என்று சொல்கிறீர்கள் சரி

அருமை அருமை குறட்பா
நஞ்சு --சு குற்றியலுகரம்
புணர்ச்சிக்குப் பின்னே சீரமைக்கவேன்டும்
நஞ்சு + அதுபோல் = நஞ்சது போல்- --தளை கெடும் ---நஞ்சது போல என்று அமையவேண்டும்

குறட்பா கருத்துடன் அருமை
பாராட்டுக்கள்

புல்லென்ற காடு மழைதன் பொழிவினால்
நல்மென் கவினீன்ற தே

கவின் வெண்பா அழகுதான்

உண்மை
வந்தே அதைநீ
வந்தே அதனிடம்
என்று வைத்திருக்கவேண்டும்
---யாப்புசார் கருத்து
மிக்க நன்றி கவிப்பிரிய டாக்டர் VKK

ஏ ஐ மங்கைகள் தான்
வந்து
கண்சிமிட்ட வேண்டுமா?
------ஆண்கள் ரோபினிக்கள்
மீது காதல் கொள்ளும் காலம் வெகுதூரத்தில் இல்லை
அணிலாடு முன்றிலார் என்று ஒரு புறநாநூற்றுக்
கவிஞர் உண்டு
ஒருமுறை நாவலாசிரியர் இந்திராபார்த்தசாரதி
இவர்பற்றி கூறிய பேச்சைக் கேட்டிருக்கிறேன்

ஆம் தீட்டுதே ஓரவிழி என்றே அமையவேண்டும்
யாப்புசார் திருத்தம்
மிக்க நன்றி யாப்புப்புப் பிரிய டாக்டர் VKK

வாகனங்கள் எங்கெங்கும் வாலறுந்த பட்டம்போல்
----உவமை அருமை

நீங்கள் தேடும் வலையில்தான் என்று படிக்கவும்

விழியின் மொழிக்கு வேறுமொழி எதற்கு ? தமிழ் பிரென்ச் கிரீக் ஆங்கிலம்
எந்த மொழியிலும் மொழி பெயர்த்துக் கொள்ளலாம் .

கண்ணொடு கண் நோக்கினால்
வார்த்தைகள் என்ன பயனுமில !
When lips have spoken
Loved accent soon forgot
---ஷெல்லி
அழகிய கருத்தில் மிக்க மகிழ்ச்சி
மிக்க நன்றி கவிப்பிரிய டாக்டர் மலர்

நீங்கள் தேடும் வேளையில்தான் .,,,,நீலவிழிக்காக

ரசித்துப் படித்து படத்தையும் கவிதையையும்
பாராட்டிச் சொன்ன கருத்தில் மிக்க மகிழ்ச்சி
மனமுவந்த நன்றி கவிப்பிரிய கோவை சுபா

தொன்னூல் அறிவுரைப்பா போல் வெண்பா நன்று

என்னா(து) இயம்பிடவே----என்னா தியம்பிடவே என்றுதானே அமையவேண்டும்
மூன்றாம் சீர் மோனை இ கருதி பிரித்தமைத்திருக்கிறீர்களா ?

சிவந்தஉன் ---புளிமாங்காய்

சிவந்தவுன் ---கருவிளம்
பொன் --நேர்
காய் முன் விளம் முன் நேர் ---தளைதட்டவில்லை
ஆதலால் அப்படி எழுதினேன்

இரண்டுவிதமாகவும் எழுதலாம்
மிக்க நன்றி கவிப்பிரிய டாக்டர் VKK

ஏன் நீங்களும் இயற்றலாம் முயலுங்கள்
உங்கள் அழகியல் ரசனைக்கும் கருத்திற்கும் என்
மனமுவந்த நன்றி கவிப்பிரிய மல்லி

யாப்புவழிக் கவிதை அழிந்து விடக்கூடாது என்பதற்காகவே
தொடர்ந்து யாப்பில் எழுதுகிறேன்
சிறந்த கற்பனைவளம் இருக்கிறது தொடர்ந்து
யாப்பில் பதிவிடுங்கள் வாழ்த்துக்கள்
கருத்திற்கு மிக்க நன்றி யாப்புப்பிரிய ஹேமந்தகுமார்


கவின் சாரலன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே