அடிமை கொள்ளடா
அடிமை கொள்ளடா..!
01 / 07 / 2025
சாதி மத பேதக் கூண்டுக்குள்
நீயே ஏன் கைதி ஆகிறாய்?
கைபேசி கைக்குள் அடங்கி
உனையே ஏன் அடிமை ஆகிறாய்?
பரந்து விரிந்த பிரபஞ்சம்
பறந்து நீயும் பாரடா
வாழும் காலம் கொஞ்சமே
வாழ்ந்து பார்த்து செல்லடா
அடுத்த பிறவி என்ற ஒன்று
கிடைத்திடுமா எண்ணி பாரடா
எடுத்த அடி ஒவ்வொன்றையும்
ருசித்து அனுபவித்து போயெண்டா
சிறகை விரித்து இயற்கையை
உன்கைக்குள் அடிமை கொள்ளடா