யதார்த்தம்

தினம்... ஒன்றைத் தொலைத்து
தேடி அலைபவனே மனிதன்
சமயங்களில் தன்னையே தான் கூட

தொலைத்தது மீளக் கிடைப்பதென்பது
வரம் மட்டுமல்ல அதிர்ஷ்டமும் கூட

ஆனால்...

கிடைக்காவிடின்
கடந்துவிடும் திடம் என்பது
நிலையா அதிர்ஷடத்தை விட
உயர்வு.

எழுதியவர் : நர்த்தனி (2-Jul-25, 1:15 pm)
சேர்த்தது : Narthani 9
Tanglish : yadhaarththm
பார்வை : 75

மேலே