Narthani 9 - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  Narthani 9
இடம்:  Toronto ,Ontario
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  19-Mar-2021
பார்த்தவர்கள்:  481
புள்ளி:  201

என் படைப்புகள்
Narthani 9 செய்திகள்
Narthani 9 - படைப்பு (public) அளித்துள்ளார்
21-May-2024 4:02 am

எப்படித் தான்
இறுகப் பூட்டித் தாழிட்டாலும்
அதையும் மீறிப்
பூத்து விடுகிறது
‘நேசம்’!

நர்த்தனி

மேலும்

Narthani 9 - படைப்பு (public) அளித்துள்ளார்
13-May-2024 4:39 pm

உயிர்ப்பு - 3
…………………..

நேரம் நகர்ந்து கொண்டேயிருந்தது…

சுற்ற நின்றவர்களெல்லாம் தமக்குள் பேசிக் கொண்டிருந்தார்களேயொழிய
மேற்கொண்டு எதுவும் செய்வதாகத் தெரியவில்லை.

அவர்கள் ஒவ்வொருவர் முகத்தையும் தவிப்புடனே பார்த்துக் கொண்டே படுக்க வைத்திருந்த தகப்பன் அருகே வந்தாள்.

சலனமின்றிக் கிடந்த முகத்தை உற்று நோக்கிக் கொண்டவள் உள்ளம் வெடித்தது.

“நாங்கள் துடித்துப் போவோமென்று தெரியாதா உமக்கு…கொஞ்சம் கவனமாக இருந்திருக்கக் கூடாதானீர்…!” என்று வெம்பினாள்.

பின் திண்ணையின் அருகிருந்த வாயிற் கதவினருகே ஒடுங்கி உட்கார்ந்து தன் தகப்பனி்ன் கால்களையே உற்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

தடித்துத் திரண்டு தினம் சேற

மேலும்

Narthani 9 - படைப்பு (public) அளித்துள்ளார்
08-May-2024 4:35 am

உயிர்ப்பு - 2
………………….

விரைந்து வந்த மாமன்மார் முகத்தை உற்று நோக்கியபடி எதிர்பார்ப்போடு அவள் கண்கள் நிலைத்திருந்தன.

வந்தவர்கள் பாதிப்புற்றுக் கிடந்தவன் நிலை விட்டு விசாரிப்பதில் கவனம் செலுத்தியவாறு இருந்தனர். இது சற்றுத் திணுக்குற வைத்தது அவளை.

அதிகாலையில் எழுந்து இன்முகத்தோடு தன் அன்றாடங்களில் முனைப்புடன் இயங்கும் தந்தை முகம் நினைவில் வர கண்களில் நீர் திரண்டு கன்னம் வழி வழிந்தோடியது.

இப்படி நிர்க்கதியாகப் படுக்க வைத்து விட்டு அவர்கள் அப்படி எதைத் தீவிரமாகப் பேசிக் கொள்கிறார்கள் எனச் சற்று நம்பிக்கை தளரத் தொடங்கினாள்.

அன்று காலை ஆனந்தமாகப் பாடசாலை செல்லத் தயாராகிக் கொண்டிருந்த போது ந

மேலும்

Narthani 9 - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2024 4:03 am

மல்லாத்திக் கிடத்தப்பட்டிருந்தான் அவன். தென்னங் கிடுகுகளால் வேயப்பட்டு நடுத்தர வசதியுடன் அமைக்கப்பட்ட அவ்வீட்டின் காற்றோட்டமான பக்கத்திண்ணையில்.

அவன் அணிந்திருந்த வெண்ணிற பருத்தி மேற்சட்டை பொத்தான்கள் விடுவிக்கப் பட்டிருந்தது. பாதங்கள் தளர்ந்திருக்க அவற்றை எட்டிய படி காற்றில் அசைந்து கொண்டிருந்தது அவன் அணிந்திருந்த மென்நீல, கரும் பச்சை கட்டங்கள் வரையப்பட்ட சாறன். உள்ளங்கைகள் பக்கவாட்டில் உடலைப் பார்ததபடியே அசைவற்றுக் கிடந்தது. நெற்றிக் கற்றை முடி காற்றில் புரள
பரந்த , விழிகள் மூடிய அவன் முகம் ஜீவனின்றித் தளர்ந்து தோள்ப்பட்டை நோக்கிச் சற்றுக் கவிழ்ந்த மீட்பர் சாயல் கண்டிருந்தது.

சூழ இருப

மேலும்

Narthani 9 - கே என் ராம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Mar-2024 10:06 am

நற்செயல்

காலத்தினால் அழியாதது
கண்ணீரினால் கரையாதது
கடன் கொடுக்க இயலாதது
கடமை முடிந்ததால் மறையாதது
காசினால் மதிப்பிட முடியாதது
நேரத்தினால் அளக்க முடியாதது
உள்ளத்தினால் அறியப்படுவது
உண்மையினால் உருவாகியது
வரம்பினால் அடக்க முடியாதது
மனித இனத்தினால் உணரப்படுவது
மாநிலத்தோரால் போற்றப்படுவது
காலமறிந்து செய்யும் நற்செயலே.

மேலும்

நன்று! 11-Mar-2024 4:31 am
Narthani 9 - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Oct-2022 2:22 am

உணர்வுகள் உறங்குவதில்லை
************* ********************
குழிதனைப் பறித்திடுங் குறியுடன் திரிபவர்,
பழியினைத் திணித்திடும் பழகிய உறவினர்,
இழிவென ஒதுக்கிடும் இடரினைக் கொடுத்தவர்
விழிகளில் படுகையில் விழித்திடும் உணர்வுகள்.
*
கொடுமைகள் புரிகிற கொடியவர் இடைதனில்
உடுத்திடுந் துணியினை உருவிட வருகையில்
தடுத்திடுங் கரங்களின் தனித்துவ உணர்வுகள்
அடுத்தவர் உனக்கென அளிப்பது மில்லையே
*
உரிமையின் கழுத்தினை உரமொடு பகைவரும்
நெரித்திடும் பொழுதினில் நிமிர்ந்திடும் உணர்வுகள்
சரித்திரம் படைத்திடச் சமரிடும் களத்தினில்
எரிகிற நெருப்பென எழுவது இயற்கையே!
*
அடிமையின் விலங்குகள் அறுபடும்

மேலும்

மிக்க நன்றி 06-Oct-2022 2:18 am
அருமை! 05-Oct-2022 8:40 am
Narthani 9 - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Aug-2022 2:02 am

ஓயாத அலைகள்
==============
நீயாக உன்னை நினைப்பதை விட்டு
நித்தமும் வாழ்வின் நிசந்தனைக் காண்பாய்
தீயாகச் சுட்டுச் தீய்ப்பவர் முன்னே
தேனாகப் பாயும் திருநதி கேட்பாய்
காயாக நின்று கனியான மாற்றம்
காண்கிறப் பூவின் காம்புக ளாவாய்
நோயாக வந்து நுழைபவர் விட்டு
நூதன மாகவே நோக்கிடச் செய்வாய்
*
ஆயாத வற்றை ஆய்வுரை செய்தே
அகிலம் முழுவதும் அறிந்திட வைப்பாய்
ஈயாத நெஞ்சில் இரக்கம் கசிய
ஏதேனும் செய்தே ஈர்த்திடச் செய்வாய்
தாயாக உனையும் தாங்குதற் கெனவே
தாரணி எங்கிலும் தமிழ்வளர்ப் பாயே
மாயாத பொழுதின் மனமெடுப் பாயே
மலையெனுந் துன்பம் மடுவாக் குவாயே
*
தேயாத நிலவின் திருவொளி யாயே
தீ

மேலும்

நன்றி 17-Aug-2022 2:16 am
நன்று! 16-Aug-2022 8:13 pm
Narthani 9 - யாதுமறியான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jun-2022 9:18 am

உன் உள்ளம் கண்டேன் !

புதியன என்று
யாதுள
யாவும் நிலைபெற்று
உறைந்தனவே !

சிற்றெறும்பாய் ஊறும்
சிற்றறிவு
சிலவேளை கண்டு கொள்ளும்
பிறர்க்கெட்டா மறைபொருளை சிறிதாக!

ஆனாலும் எழுப்பும்
பேரொலியை
சிறுமணிபோல்
யானுந்தன்
திருவுள்ளம் கண்டதன்ன!!

-யாதுமறியான்.

மேலும்

நன்று! 02-Jun-2022 4:02 am
Narthani 9 - Narthani 9 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Mar-2021 4:58 pm

துயரது தனிமைகொடியது கடுங் குளிர்மிகையது மௌனம்வலியது அன்பு.

மேலும்

நன்றி 💐 21-Mar-2021 8:48 am
சிறப்பான சிந்தனை... 20-Mar-2021 2:46 pm
மேலும்...
கருத்துகள்

மேலே