நற்செயல்
நற்செயல்
காலத்தினால் அழியாதது
கண்ணீரினால் கரையாதது
கடன் கொடுக்க இயலாதது
கடமை முடிந்ததால் மறையாதது
காசினால் மதிப்பிட முடியாதது
நேரத்தினால் அளக்க முடியாதது
உள்ளத்தினால் அறியப்படுவது
உண்மையினால் உருவாகியது
வரம்பினால் அடக்க முடியாதது
மனித இனத்தினால் உணரப்படுவது
மாநிலத்தோரால் போற்றப்படுவது
காலமறிந்து செய்யும் நற்செயலே.