உள்ளபொழுது ஏதும் உவந்தளிப்ப தல்லாமல் - நீதி வெண்பா 36 -
அறம் செய்ய காலம் ஏன்!
நேரிசை வெண்பா
உள்ளபொழு(து) ஏதும் உவந்தளிப்ப தல்லாமல்
எள்ளளவும் ஈய இசையுமோ - தெள்ளுதமிழ்ச்
சீரளித்தோன் உண்டநாள் சேர்மேகத் துக்கருந்த
நீரளித்த தோமுந்நீர் நின்று! 36
- நீதி வெண்பா

