உணர்ச்சிகளும் உணர்வுகளும்

உணர்ச்சிகளும் உணர்வுகளும்
“ஒரு மனிதன்” என்பது அவனது உருவத்தை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. அதுவும் ஆண் எனவும் பெண் எனவும், இயற்கை கொடுத்த வடிவமைப்பு, உடலமைப்பை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. மனிதனைப்போல ஒவ்வொரு உயிரினத்துக்கும் உருவங்கள் உள்ளன. அவைகளிலும் ஆண் பெண் இருவகைகள் உடலமைப்பில் மாற்றத்தின் மூலம் வெளிக்காட் டப்படுகிறது. இதில் எந்த விதமான சந்தேகங்களும் இல்லை.
அதே நேரத்தில் மனிதன் இப்படித்தான் நடந்து கொள்வான் என்பதை காட்டுவது அவனது நடவடிக்கைகளே. இதுவும் கூட ஒவ்வொரு உயிரினங்களுக்கும் இவைகள் இப்படித்தான் இருக்கும் அல்லது நடந்து கொள்ளும் என்று முடிவு செய்வது அதனுடைய குணநலன்கள் மட்டும்தான். இது எல்லா உயிரினகளுக்கும் இயற்கை அடிப்படை நிலையிலேயே நிர்ணயித்து விடுகிறது.
இந்த கட்டுரையில் மற்ற உயிரினங்களை பற்றி நாம் கருத்தில் கொள்ளப்போவதில்லை. மனிதர்களை மட்டுமே எடுத்துக்கொள்வோம்.
மனிதனை நிர்ணயிப்பது உருவம் என்றாலும், அவனது நடவடிக்கைகள் எல்லாமே அவனுள் இருக்கும் உணர்வுகள் அடிப்படையில்தான் அவனது செயல்பாடுகள் இருக்கிறது.அல்லது உணர்ச்சிகளின் அடிப்படையில் அவனது செயல்பாடுகள் இருக்கிறது.
2017 ல் ஒரு ஆராய்ச்சியில் மனிதனிடம் “இருபத்தியேழு வகையான உணர்ச்சிகளின்” செயல்பாட்டில்தான் மனிதன் முழுவதுமாக இயங்குகிறான் என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதே நேரம் ஐந்து முக்கியமான அவனது “உணர்வுகளாக” கீழே குறிப்பிடுகிறார்கள்
1. குற்ற உணர்ச்சி, தோல்வி மனப்பான்மை
2. கோபம், வெறுப்பு, பயம்
3. தைரியம், எதிர்பார்ப்பு
4. மற்றவற்றை புரிந்து கொள்ளுதல், முடிவெடுத்தல்
5. ஏற்று கொள்ளுதல் எது வந்தாலும் எனும் பக்குவம்
உணர்வு நிலை என்றால் என்ன?
ஓரு உயிர் தன் உட்புற வெளிப்புற இருத்தலை அறிதல் உணர்வு நிலை என்கிறோம்
உணர்வு நிலைக்கும், உணர்ச்சி நிலைக்கும் இருக்கும் வேறுபாடு என்னவென்றால், தன்னை ஆழ்மனதில் இருந்து வெளிப்படும் உணர்வு பூர்வமான எண்ணத்துக்கு உணர்வுகள் எனவும் மனிதனின் உணர்ச்சிகள் என்பது அவ்வப்போது சமூக நிகழ்வோடு வெளிப்படும் எண்ணப் பாட்டிற்கு உணர்ச்சிகள் எனவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே குறிப்பிட்டது போல சோகம், மகிழ்ச்சி, பயம், கோபம் ஆச்சர்யம்,வெறுப்பு இவைகளை கொண்டது மனிதனின் உணர்ச்சிகள்.
அதனால்தான் ஒரு மனிதனின் செயல்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பது உணர்வுகள் என்கிறோம். உணர்ச்சிகள் மனிதனை மாறுபட்ட செயல்பாட்டிற்குள் மட்டுமே இழுத்து செல்லும்.
“ஆசை கோபம் களவு கொள்பவன்
பேச தெரிந்த மிருகம்”
அன்பு நன்றி கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்” என்கிறார் கவிஞர் கண்ணதாசன்

உணர்வுகள் அறிவியல் ரீதியாக மனிதனிடம் தோன்றுவதற்கு “சோமாசென்சரி, நோசிசெப்டிவ், தெர்மோசெப்டிவ்” வெஸ்டிபுலர், ப்ரோப்ரியோசெப்டிவ், கினெஸ்தடிக் போன்றவை குறிப்பிடப்படுகின்றன. சுவை, வாசனை,வெப்பநிலை உணர்தல், வலி உணர்தல்,உடல்நிலையை உணர்தல் என்பன போன்றவைகள்.

மனித உணர்ச்சிகள் அதிகளவு அவனுள் ஏற்படும் மனோதத்துவ ஏற்பாடுகளால் நடத்தப்படுகிறது.
அதீத கோபம் வன்முறையையும், விபரீதமுடிவையும் எடுக்க வைக்கிறது என்பது போன்றவைகள்
இதனால்தான் மனிதனின் அவனது செயல்பாடுகளை உணர்வு பூர்வமாக எடுப்பது செயல்பாட்டை சிறந்ததாக வைக்கும் என்று சொல்ல ப்படுகிறது.
உணர்ச்சிகளின் அடிப்படையில் மனிதனின் இயக்கம் என்பது அவனது செயல்பாட்டிற்கு தற்காலிக முடிவைத்தான் கொண்டு போய் சேர்க்கும்.

இருந்தும் ஏனோ இன்றைய மனித இனம் அதிக அளவு “உணர்ச்சிகளின்” அடிப்படையில்தான் முடிவுகளை எடுக்கிறார்களோ என்று தோன்றுகிறது.
அந்த மாதிரி மனிதன் எடுக்கும் முடிவை தங்களுக்கு, எல்லா வகையிலும் சாதகமாக்கி கொள்ளும் புத்திசாலி மனிதர்கள் இவர்களின் முடிவினால் தங்களை வளப்படுத்தி கொள்கிறார்கள் என்பதும் உண்மை. இதற்கு அவர்கள் எந்த வகையில் இந்த செயல்பாட்டை அவர்கள் முன் வைப்பார்கள்? உணர்ச்சிகளாளா? உணர்வுகளாளா?

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (3-Dec-25, 3:15 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 15

மேலே